Diabetes: கணையத்தில் இன்சுலின் சுரக்க செய்யும் ‘நித்திய கல்யாணி’! பயன்படுத்தும் முறை!

நீரிழிவுக்கு மருந்தாகும் நித்திய கல்யாணி மூலிகை:  நவீன மருத்துவம் மற்றும் மூலிகை வைத்தியம் இரண்டிலும் மிக முக்கிய  இடம்பிடித்துள்ள மலர் என்றால் அது நித்திய கல்யாணி. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 24, 2023, 04:04 PM IST
  • ஆல்கலாய்டுகள், அஜ்மலிசின், சர்ப்பன்டைன் எனப்படும் தனிமங்கள் இதன் இலைகளில் காணப்படுகின்றன.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு நித்திய கல்யாணி இலைகளை உட்கொள்வது இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது.
  • மாவுச்சத்தை குளுகோஸாக உடைப்பதை நித்தியகல்யாணி தடுக்கிறது.
Diabetes: கணையத்தில் இன்சுலின் சுரக்க செய்யும் ‘நித்திய கல்யாணி’! பயன்படுத்தும் முறை! title=

மாறிவரும் இந்த நவீன காலத்தில், நமது உடல் நோய்ளின் கூடாரன்மாகிவிட்டது. சர்க்கரை நோய், பிபி இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  ஆனால், சில சமயங்களில் நாம் கொஞ்சம் எண்ணிப் பார்த்தால், சில விஷயங்களில் கவன செலுத்துவதன் மூலம் பல நோய்களைத் தவிர்க்கலாம் என்பது புரியும். நம்மைச் சுற்றி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்பல விஷயங்களை காணலாம். அவற்றை நாம் புத்திசாலித்தனமாக பயன்படுய்த்தினால் நோயற்ற வாழ்வு வாழலாம். இவற்றில் ஒன்று நித்திய கல்யாணி. அதன் பூக்கள் இலைகள் என அனைத்தும் நோயை தீர்க்கும் மூலிகைகள். பல வகையான நோய்களை இதன் மூலம் எளிதில் குணப்படுத்த முடியும்.

நித்திய கல்யாணி மூலிகை, நவீன மருத்துவம் மற்றும் மூலிகை வைத்தியம் இரண்டிலும் மிக முக்கிய  இடம்பிடித்துள்ள மலர் என்றால் அது நித்திய கல்யாணி. நித்திய கல்யாணி அல்லது சதாபஹர் என அழைக்கப்படும் இதில் சிறந்த இரத்த சர்க்கரை குறைவு பண்பு இருப்பதால்,  ரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது. இந்த பூவின் சாறு எடுத்துக் கொள்வதன் மூலம் கணைய செல்களில் இருந்து இன்சுலின் உற்பத்தி தீவிரமாகிறது. மேலும் மாவுச்சத்தை குளுகோஸாக உடைப்பதை நித்தியகல்யாணி தடுக்கிறது. 

நீரிழிவு நோயாளிகளுக்கு  நித்திய கல்யாணி இலைகளை உட்கொள்வது இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிகபட்ச நிவாரணம் பெறுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு நோயாளிகள் எப்போதும் பசுமையான சாறு குடிக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

நித்திய கல்யாணி செடியின் இலைகளை உலர்த்தி பொடி செய்து கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும். தினமும் காலையில்  வெறும் வயிற்றில்,  1 டீஸ்பூன் உலர்ந்த இலை பொடியை தண்ணீர் அல்லது பிரெஷ்ஷான பழச்சாறுடன் கலந்து குடிக்கவும். மேலும், இந்த செடியின் இலைகள் 3- 4 மென்றும் சாப்பிடலாம். மேலும் இதன் பூக்களை பறித்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க விட்டு பிறகு இதை சில நிமிடம் வைத்திருந்து வடிகட்டி குடிக்கவும். இது மிகவும் கசப்பாக இருந்தாலும் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

நீரிழிவு மட்டுமல்லாது கீழ்கண்ட நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்

ரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து நிவாரணம் 

நீங்கள் பசுமையான இலைகளை உட்கொண்டால், பிளட் பிரஷர் பிரச்சனையில் இருந்து பெரும் நிவாரணம் பெறலாம். உயர் இரத்த அழுத்த நோயாளிகள், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த பசுமையான இலைகளை உட்கொள்ளலாம்.

தொண்டையில் தொற்று

தொண்டையில் தொற்று இருந்தால் நித்திய கலயாணி இலைகள் அதனை போக்கும். 
ஆல்கலாய்டுகள், அஜ்மலிசின், சர்ப்பன்டைன் எனப்படும் தனிமங்கள் இதன் இலைகளில் காணப்படுகின்றன. இந்த கூறுகள் தொற்றுநோய்களை அகற்ற உதவுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், அவற்றை உட்கொள்வதன் மூலம், தொண்டை தொற்று பிரச்சனையை தவிர்க்கலாம்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயை ஓட விரட்டும் கோதுமை அல்லாத ‘சில’ சப்பாத்திகள்!

புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும்

நித்திய கல்யாணியின் பசுமையான இலைகளைப் பயன்படுத்துவது புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றும். இவற்றின் இலைகளில் உள்ள வின்கிரிஸ்டைன் மற்றும் வின்பிளாஸ்டைன் ஆல்கலாய்டுகள் புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதன் இலைகளை உட்கொள்ளலாம்.

சிறுநீரக கல் நோயாளிகளும் இதனை பயன்படுத்தலாம்

சிறுநீரக கற்கள் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும் நித்திய கல்யாணி இலைகள் பலனளிக்கும். இதன் பசுமையான இலைகளை வெந்நீரில் காய்ச்சிக் குடிப்பது நல்லது.

சரும பிரச்சனை தீரும்

இது தவிர, உங்கள் உடலில் எங்கேணும் தொற்று அல்லது சருமம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், இதன் இலைகளின் பேஸ்ட்டைப் பயன்படுத்தலாம். இதில் தொற்றுநோயை அழிக்கும் கூறு உள்ளதால், உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்க்க வேண்டுமா... நிபுணர்கள் கூறுவது என்ன!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News