இந்த மூலிகை பானங்களை குடிச்சி பாருங்க... சில நாட்களில் தொப்பை கரையும், எடை குறையும்

Herbal Drinks For Weight Loss: காலையில் வெறும் வயிற்றில் சில சிறப்பு பானங்களை உட்கொள்ள வேண்டும். இவை மூலிகை பானங்கள். இவற்றை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம், நீங்கள் விரைவில் எடை இழக்கத் தொடங்குவீர்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 19, 2023, 06:11 AM IST
  • எடை இழப்புக்கு மூலிகை பானங்களில் இஞ்சி நீரையும் குடிக்கலாம்.
  • இந்த மூலிகை பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையும்.
  • இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
இந்த மூலிகை பானங்களை குடிச்சி பாருங்க... சில நாட்களில் தொப்பை கரையும், எடை குறையும் title=

உடல் எடையை குறைக்கும் மூலிகை பானங்கள்: தற்போது உடல் பருமன் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் சிரமப்படுகின்றனர். அதிக எடை காரணமாக, மக்கள் பல கடுமையான நோய்களுக்கு ஆளாகிறார்கள். உடல் பருமனால் மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், இவை அனைத்தும் வாழ்க்கை முறையின் இடையூறுகளால் மட்டுமே நிகழ்கின்றன. தவறான நேரத்தில் தூங்குவது-எழுந்திருப்பது, தவறான நேரத்தில் தவறான உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது என இவை அனைத்தும் அதில் இதில் அடங்கும்.

முதலாவதாக, உடல் பருமன் அதிகரிப்பதால், ஒருவருக்கு டைப்-2 நீரிழிவு, இதய நோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், மக்கள் உடல் எடையை குறைக்க என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார்கள். பலர் ஜிம் சென்று பல வித உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். பலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் இவற்றாலும் பல சமயங்களில் எந்த பலனும் இருப்பதில்லை. சில எளிய மற்றும் இயற்கையான வைத்தியங்கள் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். உடல் எடையை குறைக்க அப்படி ஒரு அருமையான, இயற்கையான வீட்டு வைத்தியம் பற்றி இந்த பதிவில் காணலாம். அதாவது, காலையில் வெறும் வயிற்றில் சில சிறப்பு பானங்களை உட்கொள்ள வேண்டும். இவை மூலிகை பானங்கள். இவற்றை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம், நீங்கள் விரைவில் எடை இழக்கத் தொடங்குவீர்கள்.

வெந்தய நீர்:

ஒரு ஆய்வின் படி, எடை இழப்புக்கான வீட்டு வைத்தியத்தில் வெந்தயம் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆகையால் வெந்தய நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கத் தொடங்குவது நல்ல பலன் அளிக்கும். 2 ஸ்பூன் வெந்தயத்தை இரவில் சுத்தமான தண்ணீரில் ஊற வைக்கவும். இரவு முழுவதும் ஊறவைத்த பின், காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். வெந்தய விதைகளில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் விரும்பினால், காலையில் வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிக்கலாம்.

மேலும் படிக்க | 30 நாட்களுக்கு சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்?

சீரக நீர்:

சீரக நீருடன் காலையைத் தொடங்குங்கள். பல வகையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து சீரகத்தில் காணப்படுகின்றன. இதை குடித்த பிறகு நாள் முழுவதும் பசி இருக்காது. மேலும், சீரக நீர் உடலையும் மனதையும் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். சீரகத்திற்கு நறுமணப் பண்புகள் உள்ளன, இதன் காரணமாக உடல் உப்பசம் வீக்கம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளையும் இது போக்குகிறது. 

இஞ்சி நீர்

எடை இழப்புக்கு மூலிகை பானங்களில் இஞ்சி நீரையும் குடிக்கலாம். இந்த மூலிகை பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையும். இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. மேலும், இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.

துளசி நீர்

துளசி நீர் தொப்பையை குறைப்பதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் இதை குடிக்கலாம். வேண்டுமானால் துளசி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். அல்லது துளசி இலைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் எழுந்தவுடன் அதை குடிக்கவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பார்க்க தான் கரடு முரடா இருக்கும்... ஆனால் இதயத்தையே காப்பாற்றும் 'அற்புத' பழம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News