உருளைக்கிழங்கு சாப்பிட்டாலும் கண்டிப்பா வெயிட் குறையும்!

Potato For Weight Loss: உருளைக்கிழங்கு எடை அதிகரிப்புக்கு காரணமாக கருதப்படுகிறது, ஆனால் நீங்கள் அதை ஒரு சிறப்பு வழியில் சமைத்தால் அது எடை குறைக்க உதவும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 29, 2022, 04:31 PM IST
  • எடை குறைக்க டிப்ஸ்
  • உருளைக்கிழங்கு சமைக்க வழி
  • எடை இழப்புக்கு உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு சாப்பிட்டாலும்  கண்டிப்பா வெயிட் குறையும்! title=

உருளைக்கிழங்கு காய்கறிகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது கிட்டத்தட்ட எல்லா காய்கறிகளிலும் கலந்து சமைக்கப்படுகிறது. அசைவ உணவு பொருட்களிலும் இந்த உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படும். பொதுவாக உருளைக்கிழங்கில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதை குறைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த காய்கறியில் அதிக கலோரிகள், ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, இது உடல் பருமனுக்கு காரணம் என்று நம்பப்படுகிறது. 

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை கூடுமா? இல்லையா?
அந்தவகையில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதை கைவிட முடியாதவர்கள், உடல் எடையை குறைக்க என்ன செய்யலாம்? இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் 'நிகில் வாட்ஸ்' ஜீ நியூஸ் இடம், உருளைக்கிழங்கு எடையை அதிகரிக்குமா இல்லையா என்பதையும் நீங்கள் உருளைக்கிழங்கை எப்படி சமைக்க வேண்டும் என்பதையும் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அதை என்னவென்று இந்த கட்டுரையில் காண்போம். பொதுவாக வேகவைத்த உருளைக்கிழங்கு, பிரஞ்சு ஃப்ரைஸ், சிப்ஸ், ஆலு பராத்தா, உருளைக்கிழங்கு பொரியல், ஆலு சாட் போன்றவை பிரபலமான உருளைக்கிழங்கு ரேசிபிக்களின் வகைகள் ஆகும். இந்த வடிவங்களில் நீங்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டால், வெளிப்படையாக உங்கள் எடை அதிகரிக்கும். 

மேலும் படிக்க | 10 நாளில் உடல் எடை அதிகரிக்க ஜவ்வரிசி

உருளைக்கிழங்கைச் சாப்பிட்டு எடையைக் குறைக்கவும்
எனவே  நீங்கள் உருளைக்கிழங்கு சாப்பிட விரும்பினால், உங்கள் எடை அதிகரிக்காது என்று எதிர்பார்க்கிறீர்கள் என்றால், இதற்காக, உருளைக்கிழங்கை ஒரு பிரத்யேக முறையில் சமைக்க வேண்டும், இது எடையை அதிகரிக்காது, மேலும் குறைக்க உதவுகிறது.

நீங்கள் உருளைக்கிழங்கு மூலம் உடல் எடையை குறைக்க நினைத்தால், இதற்காக நீங்கள் உருளைக்கிழங்கை வேகவைத்து, குளிர்சாதன பெட்டியில் வைத்து சிறிது நேரம் ஆற வைக்கவும் . இதைச் செய்வதன் மூலம், இந்த காய்கறியின் ஜிஐ (கிளைசெமிக் இன்டெக்ஸ்) குறைகிறது, பின்னர் அது உடல் பருமன், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாகிறது. அதேபோல் உருளைக்கிழங்கை வெள்ளை வினிகரில் போட்டு கழுவவும். இதன் மூலம் ஜிஐயை குறைக்கவும் உதவுகிறது. அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்தால். இது உருளைக்கிழங்கின் செரிமானத்தை எளிதாக்கும், மேலும் குளுக்கோஸ் அளவும் திடீரென அதிகரிக்காது.

மற்றொரு முறை: உருளைக்கிழங்கை க்யூப்ஸாக நறுக்கி, வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, சமையலுக்குப் பயன்படுத்தவும். அப்படி செய்தால் உருளைக்கிழங்கு காய்கறியில் இருக்கும் சர்க்கரை, கொழுப்பு மற்றும் சோடியத்தின் அளவு குறையும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Belly Fat: தொப்பையை வெண்ணெய் போல் கரைக்கும் ‘மேஜிக் டிரிங்க்’; தயாரிப்பது எப்படி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News