பொங்கலுக்கு அதிக இனிப்புகளை சாப்பிட்டால்... கவலை வேண்டாம் இதை செய்தால் போதும்!

Health Tips: தை பொங்கல் பண்டிகை அன்று அதிக இனிப்புகளை எடுத்துக்கொண்டதாக ஒருவருக்கு தோன்றினால், உங்கள் ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துவதற்கு இவற்றை செய்யலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 16, 2024, 07:02 AM IST
  • சர்க்கரை பொங்கல், கரும்பு, பாயசம் என பண்டிகை தித்திப்புடன் கொண்டாடப்பட வேண்டும்.
  • இருப்பினும், ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருப்பதும் நல்லதுதான்.
  • எனவே, எவ்வித குற்ற உணர்ச்சியுடன் இன்றி உணவை ஒருவர் உண்ண வேண்டும்.
பொங்கலுக்கு அதிக இனிப்புகளை சாப்பிட்டால்... கவலை வேண்டாம் இதை செய்தால் போதும்! title=

Health Tips: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை (Pongal 2024) உலகம் முழுவதும் பல பகுதிகளில் வசிக்கும் தமிழர்களால் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. அறுவடை திருவிழாவான பொங்கலின் முதல் தை பொங்கல் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இரண்டாம் நாளான இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. நாளை மக்கள் சுற்றுலா சென்று உறவினர்கள், நண்பர்களுடன் காணும் பொங்கலை கொண்டாடுவார்கள். 

இப்படி தொடர் விடுமுறை தினங்களும் கொண்டாட்டங்களும் இனிப்புகள் இல்லாமல் முழுமையடையாது. பொங்கல் என்றாலே சர்க்கரை பொங்கல், கரும்பு ஆகியவைதான் கொண்டாட்டங்களின் முக்கிய உணவுகளாக இருக்கும். மேலும், பலரின் வீடுகளில் பலகாரங்கள், இனிப்புகள் ஆகியவற்றை உண்டாக்குவார்கள். வீட்டில் சுத்தமாக அன்புடனும் தயாரிக்கப்பட்டு பரிமாறப்படும இத்தகைய உணவுகளை ஒருவர் ஆரோக்கியம் கருதி தவிர்ப்பது மிக மிக கடினம்தான்.  

எனவே, இந்த பண்டிகை தினங்களில் ஒருவர் அதிக இனிப்புகள் மற்றும் எண்ணெயிலான உணவுகளை சாப்பிட்டுவிட்டதாக ஒருவகை ஆரோக்கியம் சார்ந்த குற்ற உணர்ச்சியுடன் உணர்ந்தால் அவர் உடனடியாக இந்த விஷயங்களை செய்து சற்று நிவாரணத்தையும் ஏற்படுத்திக்கொள்ளலாம். அதிக இனிப்புகளை சாப்பிட்டுவிட்டதாக ஆனால் கவலைப்பட வேண்டாம், உங்கள் ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துவதற்கு சரியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும், ஆரோக்கியமான உணவு முறையை மீண்டும் தொடங்குவதன் மூலமும், உங்கள் மனதையும் உடலையும் உற்சாகப்படுத்த முடியும். மேலும், சரியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் திரவங்களை உட்கொள்வதன் மூலம் நீங்கள் மீண்டு வரலாம். அதுகுறித்து இதில் காணலாம். 

மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விட்டமின் பி12 குறைபாடு... அலட்சியம் வேண்டாம்!

இன்று இனிப்புகளை தவிர்க்கலாம்

இன்று மாட்டு பொங்கல். நேற்று சூரிய பொங்கலுக்கு வாங்கிய கரும்புகள் மிச்சமிருக்கும். அவை இன்று முழுவதுமாக அடித்து நொறுக்கி சக்கை துப்பிவிடலாம் என பலரும் திட்டமிட்டிருப்பீர்கள். நேற்றே அதிக இனிப்புகளை உண்டுவிட்டதாக உங்களுக்கு தோன்றினால், இன்று 'இந்த கரும்பு திட்டத்தை' கைவிட்டுவிடலாம். மேலும், நேற்று பொங்கிய சர்க்கரை பொங்கல், பாயாசம் ஆகியவற்றின் ருசியும் உங்கள் நாக்கில் மிச்சமிருக்கும், அதற்காக இன்று அவற்றை உண்டால் அது மேலும் உங்களை சோகத்தில் ஆழ்த்தலாம். எனவே, நேற்று அதிக இனிப்புகளை சாப்பிட்டுவிட்டதாக உங்களுக்கே தோன்றினால், இன்று அவற்றை தவிர்ப்பது நல்லது. அப்படி தோன்றவில்லை என்றால் இன்று அடித்து நொறுக்கிவிடுங்கள். 

நீரேற்றமாக இருங்கள்

அதிக இனிப்புகளை உண்டவர்கள் நீரேற்றமாக தங்கள் உடலை வைத்திருப்பது நல்லது. அதனால், எப்போதும் தண்ணீர், மோர், சர்க்கரை கலக்காத குளிர்பானங்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக, சுட வைத்த நீரை அருந்துவதும் நன்மை பயக்கும். 

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை இன்று முழுமையாக தவிர்க்கவும். அதிலும் அதிக சர்க்கரை கலந்திருக்கும். அவற்றை தவிர்த்துவிட்டு, ஆரோக்கியமான உணவுகளான பயிர்கள், பருப்புகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். சமநிலையான ஊட்டச்சத்துகளை அளிக்கும் உணவு வகைகளை உண்பதே சரியாகவும் இருக்கும். 

நடைப்பயிற்சி

தினமும் நடைப்பயிற்சி செய்வது நல்லது என்றாலும், விடுமுறை தினம் என்பதால் பலரும் நடப்பதற்கு யோசனை செய்வார்கள். அந்த யோசனையை தவிர்த்துவிட்டு கொஞ்ச தூரம் பொறுமையாக நடந்தால் உங்களின் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரலாம்.

(பொறுப்புத் துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவலுக்காக மட்டுமே என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகலாம்)

மேலும் படிக்க | இரவில் கால் பிடிப்பு பிரச்சனையா? இந்த வைட்டமின் குறைபாடுதான் காரணம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News