சினைப்பை நோய்க்குறி என்பது பெண்களுக்கு ஆண்ட்ரோஜன் எனப்படும் ஆண்தன்மைச் சுரப்பி அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் ஒரு கூட்டு நோய் அறிகுறியாகும். சினைப்பை நோய்கள் மரபுவழி, சூழல் என இரண்டும் இணைந்த கூட்டுக்காரணிகளால் ஏற்படுகின்றன.
ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் இல்லாமலிருத்தல், அதிகமான குருதிப்போக்கு, உடலிலும் முகத்திலும் அதிகமான முடிவளர்ச்சி, முகப்பரு, இடுப்பெலும்பு வலி, மலட்டுத்தன்மை, சில தோல் பகுதிகள் மட்டும் கெட்டியாகவும் கருத்தும் மிருதுவாகக் காணப்படுதல் ஆகியன இதன் அறிகுறிகளாகும். கருத்தடை மாத்திரைகள் சில நேரங்களில் சரியான மாதவிடாய் சுழற்சி, மிகை முடிவளர்ச்சி, முகப்பரு ஆகியவற்றின் ஒழுங்கமைப்பை மேம்படுத்த உதவலாம்.
மேலும் படிக்க | உடற்பயிற்சி செய்வதற்கு முன் என்ன செய்யலாம்? எதை தவிர்க்கலாம்?
சினைப்பை நோய்க்குறியின் பொதுவான அறிகுறிகள்
* ஒழுங்கற்ற மாதவிடாய்
* மலட்டுத்தன்மை
* ஆண் தன்மை மிகுந்து காணப்படுதல்
* வளர்சிதை மாற்ற நோய்க்குறி
சினைப்பை நோய்க்குறியில் ஆரோக்கியமானதை உண்ணுங்கள்
* அதிக நார்ச்சத்துள்ள உணவை உண்ணுங்கள். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை உண்ணுங்கள்.
* ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முளை கட்டிய தானியங்கள், பீன்ஸ், பயிறு வகைகள், பாதாம், பெர்ரி, இனிப்பு உருளைக்கிழங்கு, பூசணி போன்ற உயர் நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்
* மஞ்சள், தக்காளி, கீரை, பாதாம், வால்நட் உள்ளிட்ட ஆண்டி இன்ஃப்ளமேட்டரி உணவுகளை உண்ணுங்கள்.
மேலும் படிக்க | அதிக கொழுப்பால் உடலில் பிரச்சனையா? இந்த 5 பானங்கள் உங்களுக்கு கை கொடுக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR