பச்சை வெங்காயம்: வெங்காயத்தை நமது அன்றாட சமையலில் நாம் அனைவரும் கண்டிப்பாக பயன்படுத்துகிறோம். இது உணவின் சுவையை கூட்டுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-செப்டிக், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலை பல நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. வெங்காயம் பருவகால நோய்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. இதன் சாறு காய்ச்சலை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
குளிர்காலத்தில், பெரும்பாலும், கூந்தலில் பொடுகுத்தொல்லை அதிகரிக்கிறது. அதனுடன் முடி வேகமாக உதிரத் தொடங்குகிறது. முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட வெங்காயச் சாறு பயன்படும் என கூந்தல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வெங்காய சாற்றை எவ்வாறு பயன்படுத்துவது
வெங்காயச் சாறு பொடுகுத் தொல்லை மற்றும் குளிர்காலத்தில் விரைவாக முடி உதிர்வதற்கு எதிராக நன்றாகச் செயல்படுகிறது. தேன் மற்றும் வெங்காய சாறு இந்த முடி பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுவதாக கூந்தல் பராமரிப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள். இது முடியை நீரேற்றமாக வைத்திருக்கிறது. வெங்காய சார்றின் வழக்கமான பயன்பாட்டின் மூலம், கூந்தலின் பளபளப்பு பராமரிக்கப்படுகிறது. மேலும் கூந்தல் அடர்த்தியாகிறது.
மேலும் படிக்க | Health Tips: உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க செய்ய வேண்டியவை!
எலுமிச்சை மற்றும் வெங்காயம்: கூந்தல் பிரச்சனைக்கு தீர்வு
குளிர்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்க வேண்டும். இல்லையெனில் கூந்தல் வேகமாக மோசமடையத் தொடங்குகிறது. எலுமிச்சை மற்றும் வெங்காய சாறு கூந்தல் பிரச்சனைகளை நீக்கி அவற்றின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
முட்டையின் பயன்பாடு:
கூந்தல் பராமரிப்பில் முட்டையைப் பயன்படுத்துவதும் மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள புரோட்டீன்கள், வைட்டமின்-பி, பயோட்டின் மற்றும் இதர சத்துக்கள் கூந்தலை ஆரோக்கியமாக்குகிறது. வெங்காயச் சாறுடன் இதைப் பயன்படுத்தலாம். இதன் சாறு உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடை உடனே குறையணுமா? இந்த மேஜிக் பானம் உங்களுக்கு உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ