புதுடெல்லி: சிறந்த பாலியல் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமா? உங்கள் உடல் எடையைக் குறைத்தால் நல்லது. அதிக எடையுடன் இருக்கிறீர்களா? அது பாலியல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாலியல் வாழ்க்கையை (Sexual Life) மேம்படுத்த என்ன செய்ய முடியும் என்பது குறித்த குறிப்புகளையும் நிபுணர்கள் தருகின்றனர்.
உடல் பருமன் என்பது உலகெங்கிலும் உள்ள முக்கிய சுகாதார (Health)கவலைகளில் ஒன்றாகும். அதிக எடை அல்லது பருமனாக இருப்பது நமது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, ஆனால் இது உங்கள் பாலியல் வாழ்க்கையையும் பாதிக்கும் என்று தெரியுமா?
உடல் பருமன் ஆண்களில் விறைப்புத்தன்மை மற்றும் பெண்களில் பாலியல் செயலிழப்பு உட்பட அபாயங்களை அதிகரிக்கிறது. உடல் பருமன் பாலியல் வாழ்க்கையை (sexual life) எவ்வாறு பாதிக்கிறது?
Also Read | காலை வேளையில் காலி வயிற்றில் எதை சாப்பிடலாம்
அதிக எடையுடன் இருப்பது உங்கள் பாலியல் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
அதிக உடல் எடை விறைப்புத்தன்மையை பாதிக்கும்
ஆஸ்திரேலியாவின் மெடிக்கல் ஜர்னலில் (Medical Journal of Australia) வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, பி.எம்.ஐ (BMI) 28.7 க்கு மேல் உள்ள ஆண்கள் சாதாரண பி.எம்.ஐ.யை விட விறைப்புத்தன்மை (erectile dysfunction (ED)) பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள். அதிக எடை கொண்ட ஆண்களுக்கு erectile dysfunction என்பது மிகவும் பொதுவான பிரச்சனையாகும். ஏனெனில் அதிக எடையானது, உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவைக் குறைக்கிறது. அதிக எடையுடன் இருப்பது உங்கள் பாலியல் வாழ்க்கைக்கு மோசமானதாக இருக்கும். எனவே உங்கள் கூடுதல் எடையை விரைவில் குறையுங்கள்.
ஹார்மோன்கள் ஏற்ற-இறக்கமாக மாறுவதற்கும் எடை அதிகரிப்பு வழிவகுக்கும். பாலியல் வாழ்க்கைக்கு ஹார்மோன்களின் பங்கு மிகவும் முக்கியமானது. டெஸ்டோஸ்டிரோன் அளவை பாதிக்கும் Sex Hormone Binding Globulin என்ற வேதிப்பொருளுடன் உடல் பருமனுக்கு அதிக தொடர்பு உள்ளது. இது உங்கள் செக்ஸ் உணர்வை மழுங்கடித்துவிடகூடும். உங்கள் பாலியல் வாழ்க்கையை (Life) மீண்டும் இயல்பான பாதையில் கொண்டு செல்ல விரும்பினால் கூடுதல் எடையை குறைக்க வேண்டும்.
Also Read | வீட்டில் இருந்து உங்கள் எடை கூடுகிறதா? எடையை குறைக்கலாம்...
பாலியல் இச்சை குறையும்
லிபிடோ (libido) இழப்பு என்பது பருமனாக இருப்பவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனையாகும். அதிக எடை கொண்டவர்களுக்கு உடலுறவு நாட்டம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் உடல் பருமன் காரணமாக உடல் இயக்கும் குறைவது என்று சொல்லலாம்.
உடல் பருமன் பெண்களில் பாலியல் எதிர்வினை சுழற்சியுடன் தொடர்புடைய மாற்றங்களுக்கு வழிவகுக்கும், இதில் பாலியல் ஆசை, விழிப்புணர்வு, புணர்ச்சி மற்றும் வலி ஆகியவை அடங்கும். அதிக எடை இருந்தால், பிறப்புறுப்புகளில் ரத்த ஓட்டம் (Blood-circulation) குறையும், அது பெண்களுக்கு பாலியல் உச்சகட்டத்தை (orgasm) அடைவதற்கு தடையாக இருக்கும்.
Also Read | இரவில் உறங்கும் போது இதை மறவாதீர்...
உடல் எடையை குறைப்பதற்கான வழிகள்:
- புரதச்சத்து (protein) நிறைந்த உணவைச் சேர்க்கவும், புரதச்சத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் உடல் எடையை குறைக்க உதவும்
- உங்கள் உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்க உதவும் உணவுகளை சாப்பிடுங்கள்
- சர்க்கரை, கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வதை குறைக்கவும். உங்கள் உணவு பழக்கத்தை மேம்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும்
- இதை நீங்கள் ஏற்கனவே பலமுறை கேள்விப்பட்டிருக்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் பாலியல் வாழ்க்கையையும் மேம்படுத்த உதவும்
- பால் சேர்க்காமல் கருப்பு காபி குடிப்பதால் உடல் எடை குறையும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன
- பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்துக் கொள்ளவும். அதிலும் குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகளை குறைக்கவும்.
- நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நீக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை எடுத்துக் கொள்ளவும்
- கிரீன் டீ (green tea) குடிப்பது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (antioxidants) மற்றும் பிற ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கும். அதோடு, எடை இழப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது
- அதிக நீர்சத்து, நார்ச்சத்து மற்றும் பிற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடவும்
- கொழுப்பு நிறைந்த உணவை உண்பதை குறைப்பது கட்டுப்படுத்துவதும் எடை இழக்க ஒரு சிறந்த வழியாகும்
- உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தவும் தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்
Also Read | துபாய்க்கு காய்கறி அனுப்பும் MS Dhoni, கதையல்ல, நிஜம்!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR