சுகர் லெவல் முதல் வெயிட் லாஸ் வரை... வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை போதும்

உணவுக்கு மணம் சேர்க்கும் கறிவேப்பிலையின் மருத்துவ குணங்களை பற்றி பலருக்கு தெரிவதில்லை. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நோய்களுக்கு சிகிச்சை அளிக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.  ஆனால், அதன் அருமை தெரியாமல் அதனை அலட்சியமாக தூக்கி எறிந்து விடுகிறோம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 13, 2024, 07:03 PM IST
  • எண்ணற்ற ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கிய நலன்களையும் கொண்ட கறிவேப்பிலை.
  • பலவகை நோய்களுக்கு மருந்தாக அமையும் கறிவேப்பிலை.
  • கறிவேப்பிலையில் பொதிந்துள்ள சத்துக்கள் விபரம்.
சுகர் லெவல் முதல் வெயிட் லாஸ் வரை... வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை போதும் title=

உணவுக்கு மணம் சேர்க்கும் கறிவேப்பிலையின் மருத்துவ குணங்களை பற்றி பலருக்கு தெரிவதில்லை. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நோய்களுக்கு சிகிச்சை அளிக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.  ஆனால், அதன் அருமை தெரியாமல் அதனை அலட்சியமாக தூக்கி எறிந்து விடுகிறோம். எண்ணற்ற ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கிய நலன்களையும் கொண்ட கறிவேப்பிலை, பலவகை நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. இதனை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை ஏராளம். இதில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். 

இதயம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கறிவிப்பிலை

ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த கறிவேப்பிலை இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதில் மருந்தாக செயல்படுகிறது. கறிவேப்பிலை சாறு அதிக கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்க உதவும் என்பது பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கறிவேப்பிலையை தினமும் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. 

சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் கறிவேப்பிலை

சர்க்கரை நோயாளிகள் இந்த இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எளிதில் கட்டுப்படுத்தலாம். காலையில் வெறும் வயிற்றில் சிறிது கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை சீராக இருக்கும்.

வலி மற்றும் வீக்கத்தை போக்கும் கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் உடலில் ஏற்படும் அழற்சியை கட்டுப்படுத்தும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே, கறிவேப்பிலை வலி நிவாரணியாக செயல்பட்டு, உடலில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தி வலியைக் குறைக்கும் என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

உடலை டீடாக்ஸ் செய்து நச்சுக்களை நீக்கும் கறிவேப்பிலை

கறிவேப்பிலையை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடல் புத்துணர்ச்சி பெறும். இதனை உட்கொள்வதால் உடல் எடை குறையும்.  ஏனெனில், இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, ஆரோக்கியமான முறையில் எடையை கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள இரும்பு சத்து, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, ரத்தத்தை சுத்தம் செய்யும்.

மேலும் படிக்க | கெட்ட கொழுப்பை இயற்கையான வழியில் கட்டுக்குள் கொண்டு வர இந்த எளிய பானங்கள் உதவும்

100 கிராம் கறிவேப்பிலையில் பொதிந்துள்ள சத்துக்கள் விபரம்

புரதம் - 1.4 கிராம்
உணவு நார்ச்சத்து - 1.3 கிராம்
பொட்டாசியம்- 194 மி.கி
சோடியம்- 28 மி.கி
கார்போஹைட்ரேட் - 2.9 கிராம்
வைட்டமின் சி
கால்சியம்
இரும்பு
வைட்டமின் டி
வைட்டமின் B6
கோபாலமின்
மக்னீசியம்
கலோரிகள் - 0.2 கிராம்
நிறைவுற்ற கொழுப்பு - 0 கிராம்
கொலஸ்ட்ரால்- 0 மி.கி
சர்க்கரை - 0.8 கிராம் உள்ளது. 

கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளும் முறை

கறிவேப்பிலை வெறும் வயிற்றில், பச்சையாக மென்று சாப்பிடலாம். இந்த இலைகளை உலர்த்தி பொடி செய்து தண்ணீரில் கலக்கி தினமும் சாப்பிடலாம்.  சமையலில் சேர்க்கும் கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் சேர்த்து சாப்பிடலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சுகர் லெவல் சொன்னபடி கேட்க இரவில் இதை குடிங்க போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News