கொலஸ்ட்ரால் குறைய இதை மட்டும் பண்ணுங்க போதும்!

மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களை உண்பதன் மூலம் கெட்ட கொழுப்பின் அளவு 6% முதல் 10% வரை குறையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Nov 22, 2022, 05:58 AM IST
  • கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் சில சமயங்களில் மரணம் கூட ஏற்படும்.
  • மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்றவை ஏற்படலாம்.
  • கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு உணவுமுறை முக்கியமாக உள்ளது.
கொலஸ்ட்ரால் குறைய இதை மட்டும் பண்ணுங்க போதும்! title=

நமது உடம்பில் ஓடும் ரத்தத்தில் உள்ள மெழுகு போன்ற ஒரு பொருள் தான் கொலஸ்ட்ரால் ஆகும், உடலில் ஆரோக்கியமான செல்களை உருவாக்குவதில் கொலஸ்ட்ரால் முக்கிய பங்கு வகிக்கிறது.  கொலஸ்ட்ரால் முக்கியமானது என்றாலும் உடலில் அதிகப்படியான அளவு கொலஸ்ட்ரால் இருப்பது பலவித ஆரோக்கிய குறைப்பாடுகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  தொடர்ச்சியாக கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக இருந்தால் இதயத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு சில சமயங்களில் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.  ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் படிவுகளாக படிக்கிறது, இவை எந்த நேரத்திலும் உடைந்து கட்டிகளை உருவாக்கலாம், அப்போது உங்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்றவை ஏற்படலாம்.

மேலும் படிக்க | அஸ்வகந்தாவை தினமும் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் 

கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு உணவுமுறை, உட்கார்ந்த வாழ்க்கை முறை போன்றவை காரணமாக அமையலாம், போதுமானவரை உங்கள் உணவு பழக்கத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும், சில உணவு வகைகள் கொலஸ்ட்ரால் அளவை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.  உணவு கட்டுப்பாட்டுடன் சேர்ந்து சில உடற்பயிற்சிகள் மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்தும் கூட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம்.

மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களை உண்பதன் மூலம் உங்கள் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம், இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய நோய்கள் மற்றும் இதய பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.  இதனை சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொழுப்பின் அளவு 6% முதல் 10% வரை குறையும்.  ஒமேகா-3 நிறைந்த உணவுகள் செல்களை வளர்க்கவும், செல்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது மற்றும் இவை கெட்ட கொழுப்பின் அளவையும் கணிசமாக குறைக்கிறது.  டுனா, சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன் வகைகள் மற்றும் இறால் போன்ற கடல் உணவுகளில் ஒமேகா -3 நிறைந்துள்ளது.  உடல் எடையை குறைப்பது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும், தினமும் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவை சாப்பிட்டு உடல் எடையை குறைக்கலாம்.  மேலும் தீய பழக்கங்களான புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றை தவிர்ப்பது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது.

மேலும் படிக்க | நோய்களை ஓட விரட்டும் இந்த ‘மேஜிக்’ மசாலாக்கள் தினசரி உணவில் இருக்கட்டும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News