நம் நாட்டில் காணப்படும் மிகவும் பொதுவான வாழ்க்கை முறை நோய்களில் ஒன்று உயர் ரத்த அழுத்தம். இது பெரும்பாலும் சைலன்ட் கில்லர் நோய் என்று அழைக்கப்படுகிறது. தமனி சுவர்களுக்கு எதிராக ரத்தத்தின் நீண்ட கால விசை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கும் நிலையை குறிப்பதே உயர் ரத்த அழுத்தம் ஆகும். ஒரு நபருக்கு ரத்த அழுத்தம் ஹை லெவல் செல்லும் போது அந்த நபருக்கு கார்டியாக் அரெஸ்ட் அல்லது பக்கவாதம் உள்ளிட்ட தீவிர நோய்கள் ஏற்படும் அபாயம் மிக அதிகம். வேகமான வாழ்க்கை முறை மற்றும் பிஸியான வேலை ஷெட்யூல்கள் காரணமாக தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் கணிசமான அளவு மன அழுத்தத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் உங்களுக்கு உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் இந்த 5 பழக்கங்களை காலையில் மறக்காமல் செய்து பாருங்கள். எனவே சமநிலையற்ற வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்தாலே ஆரோக்கியம் சீராகும்.
மேலும் படிக்க | மதுபிரியர்களுக்கான டிப்ஸ்! அதிக போதையால் ஹேங்கோவர் ஆனால் என்ன செய்வது?
தண்ணீர்
உடலில் தண்ணீர் தேவையான அளவு இருந்தால், பல பிரச்சனைகள் ஏற்படாமலேயே தவிர்த்துவிடலாம். ரத்த சர்க்கரை அளவைக் குறைத்து சமநிலையை பராமரிக்க தண்ணீர் உதவுகிறது. இது, இரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது பல பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே, காலையில் எழுந்தவுடன் நிறைய தண்ணீர் குடித்தால், நாள் முழுவதும் உடலில் உள்ள நீரின் அளவு பராமரிக்கப்படும்.
முளை கட்டிய வெந்தயம்
நீரிழிவு நோயாளிகளுக்கு முளை கட்டிய வெந்தயம் மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள நார்ச்சத்து சர்க்கரை அளவில் ஏற்படும் திடீர் உயர்வைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது தவிர, இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து, குளூக்கோசை ஜீரணிக்க உதவும் சில ஆன்டிஆக்ஸிடன்ட்களையும் முளைகட்டிய வெந்தயம் கொண்டுள்ளது. எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கு சூப்பர் பிரேக்ஃபாஸ்டாக இருக்கும்.
காலை உடற்பயிற்சி
காலையில் இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். இன்சுலின் அளவு அதிகமாக இருந்தால், நடைபயிற்சி அல்லது பிற உடற்பயிற்சிகள் செய்வது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.
மன அழுத்தத்திற்கு விடை கொடுங்கள்
மனஅழுத்தம் என்பது பல நோய்களை நமக்குத் தரும். எனவே மன அழுத்தத்தை தவிர்க்கவும். காலையில் எழுந்தவுடனே தேவையில்லாதவற்றை யோசித்து மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டால், அன்றைய தினம் சரியாக போகாது என்பதுடன், இரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்கும். அமைதி மற்றும் பொறுமையுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் நடைபயிற்சி செய்யவும். உடற்பயிற்சி செய்யவும், யோகா செய்யவது நல்லது.
சரியான முறையில் காலை உணவு
காலையில் ரத்தச் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த காலையில் சரியான உணவை சாப்பிட வேண்டும். குறிப்பாக, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவுகளில் அடிக்கடி ஏற்ற இறக்கங்கள் இருந்தால், நீரிழிவு நோயாளிகள் சரியான உணவு, சரியான நேரத்தில் நேரத்தில் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.
ஹைப்பர் கிளைசீமியாவின் அறிகுறிகள்:
அதிக தாகம் மற்றும் உலர்ந்த வாய்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
உடல் சோர்வு.
மங்கலான பார்வை.
திடீர் எடை இழப்பு.
சிறுநீர்ப்பை நோய்த்தொற்று
தோல் நோய்த்தொற்றுகள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தூள் கிளப்பும் வெங்காயத்தோல்: இதில் இருக்கு சூப்பர் நன்மைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ