இந்தியாவில் மங்கி பாக்ஸ்: அறிகுறிகள் என்ன? இதற்கு சிகிச்சை உள்ளதா? விவரம் இதோ

Monkeypox: இந்தியாவில் நுழைந்துவிட்டது மங்கி பாக்ஸ்!! இதன் அறிகுறிகள் என்ன? இதற்கான சிகிச்சை முறைகள் என்ன? அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 15, 2022, 07:30 PM IST
  • காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, உடல் சோர்வு ஆகியவை பொதுவான அறிகுறிகள் ஆகும்.
  • சிலருக்கு அதிக சோர்வு, உடல் குளிர்ச்சி நிணநீர் கணுக்களில் வீக்கம் ஆகியவையும் ஏற்படலாம்.
  • நிணநீர் கணுக்களின் வீக்கம் குரங்கு அம்மையின் சிறப்பியல்பு அம்சங்களில் ஒன்றாகும்.
இந்தியாவில் மங்கி பாக்ஸ்: அறிகுறிகள் என்ன? இதற்கு சிகிச்சை உள்ளதா? விவரம் இதோ title=

கொரோனா தொற்று உலக மக்களை பாடாய்படுத்தி வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது மங்கி பாக்ஸ் தொற்று பீதியை கிளப்பி வருகிறது. தீவிரமாக பரவும் நோயாக அடையாளம் காணப்பட்ட இந்த நோய், இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. இந்தியாவில் முதல் குரங்கம்மை தொற்று பாதிப்பு கேரளாவில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், குரங்கம்மை காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. போதுமான விழிப்புணர்வு மூலம் இந்த தொற்றை கட்டுப்படுத்த முடியும் என சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். குரங்கம்மை என்றால் என்ன? இதை அறிகுறிகள் என்ன? சிகிச்சை முறைகள் என்ன? இவற்றை பற்றிய முழுமையான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

குரங்கம்மை என்றால் என்ன?

குரங்கம்மை என்பது மிருகங்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வகை தொற்றுநோயாகும். இது முதலில் விலங்குகளிடமிருந்து பரவினாலும், பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றவர்களுக்கு இது எளிதாக பரவிவிடும். இது முதன்முதலில் குரங்குகளிடம் காணப்பட்டதால், இது மங்கி பாக்ஸ் என பெயரிடப்பட்டது.

மேலும் படிக்க | இந்தியாவிற்குள் நுழைந்த குரங்கு அம்மை; ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கை தேவை

குரங்கம்மை: அறிகுறிகள் என்ன?

- காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, உடல் சோர்வு ஆகியவை பொதுவான அறிகுறிகள் ஆகும்.

- சிலருக்கு அதிக சோர்வு, உடல் குளிர்ச்சி நிணநீர் கணுக்களில் வீக்கம் ஆகியவையும் ஏற்படலாம்.

- குரங்கு அம்மையின் உருவாக்க காலம் (தொற்று முதல் அறிகுறிகள் வரை) பொதுவாக 7-14 நாட்கள் ஆகும். எனினும், இது 5-21 நாட்கள் வரையும் இருக்கலாம்.

நோய் எவ்வாறு அதிகரிக்கிறது?

குரங்கு அம்மை நோய் நான்கு வெவ்வேறு கட்டங்களில் முன்னோக்கி செல்கிறது. முதல் கட்டம், நோய் உருவாக்க காலமாகும். இது 0-5 நாட்களுக்கு இடையில் இருக்கும். பொதுவாக அறிகுறிகள் தென்பட 7 முதல் 21 நாட்கள் ஏடுக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இதில் காய்ச்சல், தலைவலி மற்றும் நிணநீர் முனை வீக்கம் ஆகிய அறிகுறிகள் தோன்றும்.  

நிணநீர் கணுக்களின் வீக்கம் குரங்கு அம்மையின் சிறப்பியல்பு அம்சங்களில் ஒன்றாகும். நோய் அறிகுறிகள் தோன்றி சில நாட்களுக்குப் பிறகு நோயாளிகளில் சோர்வு அதிகமாகிறது. 

மங்கி பாக்ஸ்: சிகிச்சை என்ன?

- குரங்கு அம்மை காய்ச்சலுக்கு இன்னும் நிரூபிக்கப்பட்ட சிகிச்சை இதுவரை எதுவும் இல்லை. அறிகுறிகளைப் பொறுத்து அதற்கேற்ற சிகிச்சையை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. 

- மருத்துவர்கள் இதற்கு பொதுவாக ஆண்டி வைரல் மருந்துகளை அளிப்பதுண்டு.

- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான மருந்துகளும் அளிக்கப்படும்.

- பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

- அமெரிக்காவில் மங்கி பாக்ஸ் சிகிச்சையில் சின்னம்மைக்கு செலுத்தப்படும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி இரண்டு டோஸ்களாக 28 நாட்களில் செலுத்தப்படுகிறது.

- சிகிச்சையின் முக்கிய அம்சமாக தனிமைப்படுத்தல் அறிவுறுத்தப்படுகின்றது.

மேலும் படிக்க | சிங்கப்பூர் வாசிகளே உஷார்: மெல்ல அதிகரிக்கிறது குரங்கம்மை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News