இயற்கையான முறையில் முடியை கருமையாக்க டிப்ஸ்: நம்மில் பெரும்பாலானோர் இளம் வயதிலேயே வெள்ளை முடி பிரச்சனையுடன் போராடி வருகிறோம். இந்த பிரச்சனையை குறைக்க பலர் தலைமுடியில் கெமிக்கல் டையை பயன்படுத்துகின்றனர். கெமிக்கல் நிறைந்த சாயத்தைப் பயன்படுத்துவதால் உங்கள் தலைமுடி கருப்பாகத் தோன்றலாம், ஆனால் படிப்படியாக அதில் உள்ள ரசாயனங்கள் உங்கள் தலைமுடியை மிகவும் சேதப்படுத்திவிடும். மேலும் நரை முடியை தடுக்கவும் உதவாது. இத்தகைய சூழ்நிலையில், வெள்ளை முடி பிரச்சனையை குறைக்க இயற்கை வைத்தியத்தை நாட வேண்டும். இயற்கை வைத்தியம் செய்வதன் மூலம் வெள்ளை முடி பிரச்சனையை பெருமளவு குறைக்கலாம். மேலும், வெள்ளை முடி வளர்வதையும் தடுக்கலாம். எனவே வெள்ளை முடி பிரச்சனையை சாயம் இல்லாமல் நீக்குவது எப்படி என்று பார்ப்போம்.
சாயம் இல்லாமல் இயற்கையான முறையில் முடியை கருப்பாக்குவது எப்படி?
முடியை கருமையாக்க பல இயற்கை வைத்தியங்களின் உதவியை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இங்கு கொடிக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை ஒரு முறை முயற்ச்சி செய்து பாருங்கள்.
தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காயை கலக்கவும்
வெள்ளை முடி பிரச்சனையை குறைக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இதற்கு தேங்காய் எண்ணெயை எடுத்து, அதில் 2 முதல் 3 ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை கலக்கவும். இதற்குப் பிறகு, இந்த எண்ணெயை சூடாக்கி, பிறகு குளிர வைக்கவும். இப்போது தயாரிக்கப்பட்ட எண்ணெயை ஒரு ஜாடியில் சேமித்து, உங்கள் தலைமுடியில் தொடர்ந்து பயன்படுத்தவும். இதனால் முடி வெள்ளையாவதை தடுக்கலாம். மேலும் முடியை பலப்படுத்தலாம்.
மேலும் படிக்க | முளை விட்ட வெங்காயத்தில் இத்தனை நன்மைகளா... இது தெரியாம போச்சே...!!
இண்டிகோ பவுடர் மற்றும் மருதாணி நன்மை பயக்கும்
கூந்தலை கருமையாக்க, தலைமுடியில் இண்டிகோ பவுடர் மற்றும் மருதாணி பயன்படுத்தலாம். இதை கூந்தலில் பயன்படுத்த முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் இண்டிகோ பவுடர் மற்றும் ஒரு டீஸ்பூன் மருதாணி பொடியை கலந்து கொள்ளவும். அதன் பிறகு, அதில் சிறிது தயிர் கலந்து பேஸ்ட்டை தயார் செய்யவும். தயாரிக்கப்பட்ட கலவையை உங்கள் தலைமுடிக்கு தடவவும். இதனால் உங்கள் வெள்ளை முடியை கருப்பாக்கலாம். மேலும், பல முடி பிரச்சனைகளை குறைக்கலாம்.
நெல்லிக்காய் மற்றும் ஷிகாகாய் ஹேர் பேக்
நரை முடியை கருப்பாக மாற்ற நெல்லிக்காய் மற்றும் ஷிகாகாய் ஹேர் பேக் நன்மை பயக்கும். இதை கூந்தலில் பயன்படுத்த முதலில் 1 இரும்பு சட்டியை எடுக்கவும். அதனுடன் 4 ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து 1 ஸ்பூன் சீகைக்காய் பொடியை கலந்து 2 முதல் 3 மணி நேரம் விட்டு பின் அதனை உங்கள் தலைமுடிக்கு தடவவும். இப்போது தலையில் தடவிய இந்த பேக்கை இரவு முழுவதும் விட்டுவிட்டு காலையில் வெதுவெதுப்பான நீரில் உங்கள் தலைமுடியைக் கழுவவும்.
முடியை கருமையாக்க இந்த பயனுள்ள உதவிக்குறிப்புகளின் உதவியை நீங்கள் பெறலாம். இருப்பினும், உங்கள் தலைமுடி தொடர்பான பிரச்சனை அதிகமாக இருந்தால், கட்டாயம் நிபுணரின் உதவியை எடுத்துக் கொள்ளுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடித்தால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ