இரத்த அழுத்தம் குறைய பாட்டி வைத்தியம், கட்டாயம் ட்ரை பண்ணுங்க

Reduce High BP: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா என்பதை நாம் தொடர்ந்து கவனிக்க வேண்டியது அவசியமாகும். அதன்படி, உயர் இரத்த அழுத்ததை தவிர்க்க செய்ய வேண்டியவை குறித்து இந்த பதிவில் காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 21, 2023, 11:08 AM IST
  • உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள.
  • உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க வீட்டு வைத்தியம்.
இரத்த அழுத்தம் குறைய பாட்டி வைத்தியம், கட்டாயம் ட்ரை பண்ணுங்க title=

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க: உயர் இரத்த அழுத்தத்தை ஹைபரடென்ஷன் என்றும் அழைக்கப்படும். உயர் இரத்த அழுத்தம் சில நேரங்களில் “தமனி வழி உயர் இரத்த அழுத்தம்”, தமனி / தமனிகளில் இரத்த அழுத்தம் உயர்த்தப்பெற்ற ஒரு நீடித்த மருத்துவ நிலை ஆகும். சாதாரண இரத்த அழுத்த அளவீடு 120/80 mm Hg க்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் ந்த எண்ணிக்கையில் மாற்றம் இருந்தலோ அல்லது அதிகப்படியானோலோ அதனை மீண்டும கட்டுக்குள் கொண்டு வருவது மிக அவசியமாகும். இரத்த அழுத்தம் அதிகரிப்பது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இரத்த ஓட்டத்தின் இந்த அதிகரிப்பு தமனிகளில் உள்ள மென்மையான திசுக்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. இதனால் இதயத்திற்கு கடுமையான சேதம் ஏற்படுகிறது. 

உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள்
மங்கலான அல்லது இரட்டை பார்வை
மயக்கம்
சோர்வு
நாள்பட்ட தலைவலி
ஒழுங்கற்ற இதயத் துடிப்பு
மூக்கில் இரத்தம் வடிதல்
மூச்சு திணறல்
குமட்டல் அல்லது வாந்தி
கழுத்து மற்றும் காதுகளில் வியர்வை
நெஞ்சு படபடப்பு 
சுவாசிப்பதில் சிக்கல்

மேலும் படிக்க | எச்சரிக்கை! ‘இந்த’ காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்கவும்!

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க வீட்டு வைத்தியம்

1. டாஷ் டயட்
இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளை நிர்வகிப்பதில் உங்கள் டயட் முக்கிய பங்கு வகிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, உயர் இரத்த அழுத்தத்தை நிறுத்துவதற்கான உணவு அணுகுமுறைகள் (DASH) உணவு உங்களின் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இந்த உணவில் முக்கியமாக பருவகால பழங்கள், முழு தானியங்கள், நட்ஸ், மீன் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் ஆகியவை அடங்கும்.

2. உப்பு குறைவாக உட்கொள்ளுதல்
அதிக இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்ள கூடாது. சோடியம் உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். அதற்கு பதிலாக, உங்கள் உணவில் சுவை சேர்க்க மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

3. ஆரோக்கியமான எடையை பராமரித்தல்
உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய மற்றொரு ஆபத்து காரணி உடல் பருமன். நிபுணர்களின் கூற்றுப்படி, உடலில் அதிகப்படியான கொழுப்பு இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. மேலும் இது உயர் இரத்த அழுத்தம் உட்பட பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

4. புகைபிடிப்பதை நிறுத்துங்கள்
புகைபிடித்த பிறகு, புகைபிடித்தல் உங்கள் இரத்த அழுத்தத்தை பல நிமிடங்களுக்கு அதிகரிக்கிறது. நீங்கள் புகைபிடிப்பதை நிறுத்துவது, உங்கள் உடல் சாதாரண இரத்த அழுத்தத்தை மீட்டெடுக்க உதவுகிறது.

(பொறுபுத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்க்க வேண்டுமா... நிபுணர்கள் கூறுவது என்ன!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News