விந்தணு குறைபாடா? இந்த விஷயங்களில் கவனம் செலுத்தினால் நிவாரணம் கிடைக்கும்

Sperm Count: அஸோஸ்பெர்மியாவின் பிரச்சனை ஆண் மலட்டுத்தன்மையை உருவாக்குவதுடன் மற்ற உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 13, 2022, 02:13 PM IST
  • அனைத்து விஷயங்களுக்கும் டென்ஷன் ஆகும் நபரா நீங்கள்?
  • அத்தகைய ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
  • ஏனெனில் மன அழுத்தம் காரணமாக, ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறையும்.
விந்தணு குறைபாடா? இந்த விஷயங்களில் கவனம் செலுத்தினால் நிவாரணம் கிடைக்கும் title=

விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்கள்: சில ஆண்களால் விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடிவதில்லை. ஆண்களின் இந்த நிலை அஸோஸ்பெர்மியா எனப்படும். இந்த பிரச்சனை சுமார் ஒரு சதவீத ஆண்களுக்கு ஏற்படுகிறது. மறுபுறம், ஆண் மலட்டுத்தன்மை கொண்ட ஆண்களில் இந்த பிரச்சனை பதினைந்து சதவீதம் வரை ஏற்படுகிறது. இதை அடையாளம் காண எந்த அறிகுறியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த பிரச்சனையால் கஷ்டப்படுபவர்களால் தந்தை ஆகும் அதிர்ஷ்டத்தை பெற முடிவதில்லை. தங்கள் மனைவியை கர்ப்பம் தரிக்க வைக்க எவ்வளவு முயற்சி செய்தாலும், இவர்களுக்கு தோல்வியே கிடைக்கிறது. இந்த பிரச்சனை உள்ளவர்களால், விந்தணுக்கள் உற்பத்தி செய்ய முடிவதில்லை, அல்லது சில பிரச்சனைகளால், உடலில் இருந்து விந்தணுக்கள் வெளியேற முடிவதில்லை. இந்த பிரச்சனையை எவ்வாறு சமாளிப்பது என்பதை இந்த பதிவில் காணலாம். 

அசோஸ்பெர்மியாவை மறைக்க வேண்டாம்

அஸோஸ்பெர்மியாவின் பிரச்சனை ஆண் மலட்டுத்தன்மையை உருவாக்குவதுடன் மற்ற உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. ஆகையால், ஒருவருக்கு அசோஸ்பெர்மியா இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். பல ஆண்கள் வெட்கப்பட்டு இந்த பிரச்சனையைப் பற்றி யாரிடமும் சொல்ல மாட்டார்கள். எனினும், இந்த பிரச்சனை இருப்பவர்கள் கண்டிப்பாக இதற்கான நிபுணரை அணுக வேண்டியது மிக அவசியமாகும். 

ஆண்களின் இந்த தவறான பழக்கவழக்கங்களால் விந்தணு எண்ணிக்கை குறைவாகலாம்: 

மன அழுத்தம்: 

அனைத்து விஷயங்களுக்கும் டென்ஷன் ஆகும் நபரா நீங்கள்? அத்தகைய ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் மன அழுத்தம் காரணமாக, ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறையும். கவலை மற்றும் மன அழுத்தம் காரணமாக, விந்தணுவின் தரம் குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், மன அழுத்தத்தில் இருந்து விலகி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | Zika வைரஸால் பீதியடைய வேண்டாம்! ஜிகா வைரஸ் அறிகுறிகள் 

கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்

உடற்பயிற்சி செய்யாதவர்கள் உடல் பருமன் பிரச்சனையால் சிரமப்படுவார்கள். உடல் பருமன் காரணமாக, விந்தணுவின் இயக்கம் குறைகிறது. இது உங்கள் பாலியல் வாழ்க்கையையும் பாதிக்கலாம். அதனால் தினமும் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

தாமதமாக உறங்குவதை தவிர்க்க வேண்டும்

இப்போதெல்லாம் பல இளைஞர்கள் இரவு வெகுநேரம் வரை தூங்குவதில்லை. இதனால், மன அழுத்தம் மற்றும் உடல் பருமன் பிரச்னையால் அவர்கள் சிரமப்படுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், அந்த நபர்களுக்கு விந்தணு எண்ணிக்கையில் பிரச்சனை ஏற்படலாம். இது தவிர, இரவில் கண்விழிப்பதால், நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமாகிறது. ஆகையால் தாமதமாக தூங்கும் பழக்கத்தை கண்டிப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எச்சரிக்கை: உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் இந்த அறிகுறிகள் இருக்கும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News