சிறுநீரில் ‘இந்த’ மாற்றங்கள் இருக்கா... உடனே கல்லீரலை டெஸ்ட் பண்ணுங்க..!!

Liver Damage Symptoms: கல்லீரல் பாதிக்கப்படும் போது, உங்கள் உடல் அஜீரணம், வீக்கம், போன்ற பல உடல்ந லப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். எனவே, உடலைப் புரிந்து கொள்வது மற்றும் பாதிப்பு அறிகுறிகளை கண்காணிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மிகவும் முக்கியமானது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 22, 2023, 11:35 AM IST
  • சிறுநீரில் நீங்கள் கவனிக்கக்கூடிய கல்லீரல் பாதிப்பின் 5 அறிகுறிகள்.
  • கல்லீரல் சேதமடைந்தால், பிலிரூபினை திறம்பட உடைக்க முடியாமல் போகலாம்.
  • சிறுநீரின் நிறத்தில் திடீரென ஏற்படும் மாற்றம்.
சிறுநீரில் ‘இந்த’ மாற்றங்கள் இருக்கா... உடனே கல்லீரலை டெஸ்ட் பண்ணுங்க..!! title=

Liver Damage Symptoms: கல்லீரல் என்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் உறுப்பு ஆகும். கல்லீரல் பாதிக்கப்படும் போது, உங்கள் உடல் அஜீரணம், வீக்கம், போன்ற பல உடல்ந லப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். எனவே, உடலைப் புரிந்து கொள்வது மற்றும் பாதிப்பு அறிகுறிகளை கண்காணிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மிகவும் முக்கியமானது. உங்கள் கல்லீரல் ஆபத்தில் இருக்கும் போது உங்கள் உடல் காட்டக்கூடிய பல அறிகுறிகளில் ஒன்று உங்கள் சிறுநீரில் தோன்றும் மாற்றங்கள். உங்கள் கல்லீரல் சரியாக செயல்படாதபோது உங்கள் உடல் காட்டும் அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்

சிறுநீரில் தோன்றும் கல்லீரல் பாதிப்பின் 5 அறிகுறிகள்

உங்கள் சிறுநீர் உங்கள் கல்லீரலின் ஆரோக்கியம் உட்பட உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய அறிகுறிகள் மூலம் வெளிப்படுத்தலாம். உங்கள் கல்லீரல் சரியாகச் செயல்படாதபோது, சிறுநீரின் நிறம், அமைப்பு மற்றும் வாசனை ஆகியவை மாறி, உடல் உறுப்பு சிக்கலில் இருப்பதைப் புரிந்துகொள்வதை எளிதாக்குகிறது. கல்லீரல் பாதிப்பு உங்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீரின் அளவு மாற்றத்திற்கு வழிவகுக்கும். இரவில் உங்கள் சிறுநீரில் நீங்கள் கவனிக்கக்கூடிய கல்லீரல் பாதிப்பின் 5 அறிகுறிகளை மேலும் படிக்கவும்.

சிறுநீரின் நிறத்தில் மாற்றம்

உங்கள் சிறுநீரின் நிறத்தில் திடீரென ஏற்படும் மாற்றம் உங்கள் கல்லீரல் ஆபத்தில் உள்ளது அல்லது நன்றாக செயல்படவில்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். உங்கள் சிறுநீர் அடர் மஞ்சள் நிறமாக இருந்தால், நீங்கள் எடனே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்கள் உடல் உற்பத்தி செய்யும் மஞ்சள் கழிவுப் பொருளான பிலிரூபினை உடைல்லும் வேலையை கல்லீரல் செய்கிறது. உங்கள் கல்லீரல் சேதமடைந்தால், அது பிலிரூபினை திறம்பட உடைக்க முடியாமல் போகலாம். இது உங்கள் சிறுநீர் அடர் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் தோன்றும்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டால், உங்கள் கல்லீரல் ஆபத்தில் உள்ளது மற்றும் கவனம் தேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள். சேதமடைந்த கல்லீரலால் போதுமான அளவு அல்புமின் உற்பத்தி செய்ய முடியாமல் போகலாம். இது இரத்த நாளங்களில் திரவங்களை வைத்திருக்க உதவும் அத்தியாவசிய புரதமாகும். இது உங்கள் சிறுநீர்ப்பை உட்பட சில திசுக்களின் கசிவுக்கு வழிவகுக்கும். இதன் விளைவாக, ஒருவர் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியத்தை உணரலாம், குறிப்பாக இரவில். எனவே, முன்னெப்போதையும் விட அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியத்தை நீங்கள் உணரும்போது, உங்கள் கல்லீரலைப் பரிசோதித்துக்கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | மூட்டு வலி பாடாய் படுத்துதா? விரட்டி அடிக்க சில எளிய டிப்ஸ் இதோ

சிறுநீரில் தோன்றும் நுரைகள்

சிறுநீர் கழிக்கும் போதும் அது அதிக அளவில் நுரையாக மாறுவதை நீங்கள் எப்போதாவது கவனித்தால் அல்லது உங்கள் சிறுநீரின் அமைப்பில் திடீரென மாற்றம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். நுரைகள் அதிகம் கொண்ட சிறுநீர் என்பது உங்கள் உடலில் ஏதோ ஒரு தீவிரமான பாதிப்பின் அறிகுறியாகும். சிறுநீரின் அமைப்பில் ஏற்படும் இந்த திடீர் மாற்றம், உங்கள் உடல் சிறுநீருடன் புரதத்தையும் வெளியிடுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. இது ஒரு நல்ல அறிகுறி அல்ல. மேலே குறிப்பிட்டுள்ளபடி, கல்லீரல் பாதிப்பு உங்கள் சிறுநீரில் அல்புமின் கசிவை ஏற்படுத்தும். இது நுரை போல் தோன்றும்.

சிறுநீரின் அளவு

உங்கள் சிறுநீர் சுழற்சியில் ஏற்படும் மாற்றத்துடன், உங்கள் கல்லீரல் பிரச்சனையில் இருக்கும் போது உங்கள் சிறுநீரின் அளவும் அதிகரிக்கப்படுவதையும் நீங்கள் கவனிக்கலாம். அவர்களின் சிறுநீர்ப்பை காலியாகவில்லை அல்லது இன்னும் அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என ஒருவர் உணரலாம். உங்கள் உடல் உங்கள் திசுக்களில் கசியும் அதிகப்படியான திரவத்தை அகற்ற முயற்சிப்பதே இதற்குக் காரணம். 

 சிறுநீரில் விரும்பத்தகாத நாற்றம்

கல்லீரலில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் தனது சிறுநீரில் விரும்பத்தகாத நாற்றம் அதிகம் இருப்பதையும் கவனிக்கலாம். இந்த நாற்றம் நபருக்கு நபர் மாறுபடும். கல்லீரலின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது உடலில் தண்ணீர் இல்லாமல் இருப்பதையும் இது குறிக்கலாம். மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

மேலும் படிக்க | உயிரற்ற நரம்புகளுக்கும் உயிர் கொடுக்கும் ‘மேஜிக்’ மசாலா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News