தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்

நீங்கள் கண்டிப்பாக எலுமிச்சை சாறு குடித்திருப்பீர்கள், ஆனால் அதன் அதிசய பலன்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை, இதில் உள்ள மருத்துவ குணங்கள் பல நோய்களுக்கு எதிராக போராடும்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 22, 2022, 08:49 AM IST
  • தினமும் எலுமிச்சை சாறு குடிக்கவும்
  • உடலுக்கு பல நன்மைகள் உண்டாகும்
  • நோய்களுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும்
தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் title=

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பிரபலமான பானமாக எலுமிச்சை சாறு உள்ளது. நாட்டில் கோடை காலம் துவங்கியுள்ளதால், தற்போது அதன் நுகர்வும் அதிகரிக்கும். ஆனால் தினமும் காலையில் எலுமிச்சை சாறு குடிப்பதால் உடல் பருமன் குறைவது மட்டுமின்றி, பல நோய்களில் இருந்தும் விலகி இருப்பீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா, ஏனெனில் உடலில் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை நீக்க எலுமிச்சை சாற்றை குடிக்க வேண்டும். இதில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. எலுமிச்சை சாறு உங்கள் ஆரோக்கியத்தில் என்ன நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். 

எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் 5 பெரிய நன்மைகள்

1. கொழுப்பை குறைக்க உதவும்
நீங்களும் உங்கள் உடல் பருமனை குறைக்க விரும்பினால், இது உங்களுக்கு எளிதான வழி, தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடிக்கவும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு கிளாஸ் தண்ணீரும் குடிக்கவும். இது பசியை உணராமல் குறைவாக சாப்பிட உதவுகிறது. ஏனெனில் தண்ணீர் உங்கள் உடலை சமநிலையில் வைத்திருப்பதோடு, உங்கள் செரிமான அமைப்பையும் சீராக வைக்கிறது.

மேலும் படிக்க | வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத 5 உணவுப் பொருட்கள்

2. நீரிழிவு நோயைக் குணப்படுத்தும்
நீரிழிவு நோளிகள் தினமும் எலுமிச்சை சாறு குடித்தால் உடலில் ஏற்படும் இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். அத்துடன் உடலுக்கு நீர்ச்சத்து மற்றும் ஆற்றலைத் தருகிறது.

3. சுவாசத்தை புத்துணர்ச்சியாக்கு
தினமும் துலக்கினாலும், சிறிது நேரம் கழித்து வாயிலிருந்து நாற்றம் வர ஆரம்பிக்கும். இத்தகைய சூழ்நிலையில், வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறை குடிப்பதன் மூலம், இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். ஏனெனில் இதில் உள்ள வைட்டமின் சி சுவாசத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதோடு வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை நீக்குகிறது.

4. வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
தினமும் காலையில் எலுமிச்சை சாறு குடிப்பதால் செரிமான சக்தி அதிகரிக்கும். இது ஃபிளாவனாய்டுகளைக் கொண்டிருப்பதால், வயிற்று நோய்களுக்கும் இது நன்மை பயக்கும். இது செரிமான மண்டலத்தை நன்றாக வைத்திருப்பதுடன், அமிலத்தன்மையிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. 

5. சிறுநீரக கல்
எலுமிச்சை நீரின் மிக முக்கியமான ஆரோக்கிய நன்மை என்னவென்றால், இது சிறுநீரக கற்களில் இருந்து நிவாரணம் அளிக்கிறது, ஏனெனில் கற்கள் சிறுநீரைத் தடுக்கிறது, இது வலியை ஏற்படுத்தும், அத்தகைய சூழ்நிலையில், எலுமிச்சை சாறை குடிப்பது உடலை மறுசீரமைக்க உதவுகிறது மற்றும் சிறுநீரகத்தில் உள்ள கற்களை அகற்ற உதவுகிறது.

மேலும் படிக்க | புற்றுநோயின் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News