சிக்கென்ற உடல்வாகு வேண்டுமா? நோய்கள் இல்லா வாழ்வுக்கு ஆளி விதையை இப்படி சாப்பிடுங்க

Flaxseeds Water On Empty Stomach: ஊறவைத்த ஆளி விதை தண்ணீருடன் உங்கள் நாளைத் தொடங்குவது உங்கள் உடலில் சில பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 28, 2023, 09:53 AM IST
  • எடை இழப்புக்கு ஆளி விதையை இப்படி சாப்பிடலாம்
  • மலச்சிக்கலுக்கு அருமருந்து
  • கூந்தல் ஆரோக்கியத்திற்கு ஆளி விதை
சிக்கென்ற உடல்வாகு வேண்டுமா? நோய்கள் இல்லா வாழ்வுக்கு ஆளி விதையை இப்படி சாப்பிடுங்க title=

ஆளி விதையை பொடியாக்கி சுத்தமான தண்ணியில ஊறவைத்தால், அது ஜெல்லியைப் போல் கெட்டியாகிவிடும். அதை வடித்து எடுத்து கண்களில் விட்டால், கண் சிவப்பு மறைந்துவிடும் என்று கிராமத்தில் கூறுவார்கள். ஆரோக்கியமான ஆளிவிதைகளின் பயன்கள் இன்று நேற்றல்ல, பல காலமாக அனைவரும் பயன்படுத்தி வந்தது தான். ஆளி விதையை தண்ணீரில் ஊற வைத்து, அதை தொடர்ந்து உண்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். 

உடல் எடை குறைய ஆளி விதை 

ஆளிவிதையில நார்சத்து அதிகமாக உள்ளது. ஆளி விதையை சரியான அளவில எடுத்துக்கிட்டா அதிகம் பசியெடுக்காது. உடல் எடையை கச்சிதமாக பராமரிக்கவும் ஆளிவிதை உதவுகிறது. ஆளி விதையில் 20% புரதச்சத்து இருக்கறதால, உடல் எடை சுலபமா குறையும். 

துரித உணவுகளை சாப்பிடுவதால் வரும் தீமைகளை குறைக்க விரும்புபவர்கள், தரமான நார்ச்சத்து கொண்ட ஆளி விதையை, நீரில் ஊறவைத்து தினசரி காலை ஒரு தேக்கரண்டி அளவுக்கு உண்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வது குறையும். உடல் எடை குறையும்.

மேலும் படிக்க | வெறும் வயிற்றில் குடித்தால் தொப்பையை காணாமல் போக்கும் அற்புத பானங்கள் 

நோய்களை தடுக்கும் ஆளி விதை
இளம் வயதிலேயே வரத் தொடங்கிவிட்ட இதய நோய், பக்கவாதம் வராமல் பாதுகாப்ப, இளைஞர்கள் ஆளிவிதையை ஊற வைத்து உண்பதை, காபி, டீ குடிப்பது போல பழக்கமாக்கிக் கொள்ளலாம். 

ஆளி விதையில் உள்ள சத்துக்கள்
லிக்னன்ஸ் (Lignans) என்ற ஒருவகை ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆளி விதையில் அதிக அளவில் உள்ளது. இது செல்களின் செயல்பாட்டை அதிகமாக்கி, தேவையில்லாத கொழுப்பை எரிக்க உதவுகிறது.

ஆளி விதையில், கார்போஹைட்ரேட், மாவுச்சத்து, சர்க்கரை ஆகியவை மிகவும் குறைந்த அளவில் இருப்பதால், கலோரி அளவும் குறைவாக உள்ளது.  சைவ உணவு மட்டும் உண்பவர்களுக்கு, அதாவது அசைவ உணவு சாப்பிடாதவங்களுக்கு புரதச்சத்து தேவையை பூர்த்தி செய்ய ஆளிவிதைதான் பெஸ்ட் சாய்ஸ் என்று சொல்லலாம்.ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள ஆளிவிதை, நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

மேலும் படிக்க | இரவில் தூக்கம் வரவில்லையா? காலையில் எழுந்ததும் இதை மட்டும் செய்யுங்கள்! 

ஹார்மோன் குறைபாட்டுக்கு ஆளி விதை
ஹார்மோன் குறைபாடுகளால் பெண்களுக்கு ஏற்படுற உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வு, மன உளைச்சலுக்கு சிறந்த மருந்தாக ஆளி விதை பயன்படுகிறது. தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால், முடி உதிர்வது குறையும். முடி வளர்வதற்கும் உதவுகிறது. ஒழுங்கில்லாத மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும். பெண்களுக்கு அந்த நேரத்துல ஏற்படும் வயிற்று வலி, தலைவலி, பதற்றத்தை கட்டுப்படுத்தவும் ஆளிவிதை உதவுகிறது.

Flaxseed: அளவிற்கு அதிகமான ஆளி விதை பேராபத்து! எச்சரிக்கும் நிபுணர்கள்

புற்றுநோய்க்கு ஆளி விதை

பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும் பண்பு ஆளி விதையில் உள்ளது. பெண்களின் கர்ப்பப்பைச் செயல்பாட்டையும் மேம்படுத்தும் ஆளி விதையில் புற்று நோய்களுக்கு எதிரான பண்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு ஆளி விதையில் உள்ள தரமான ஒமேகா-3 மாதிரியான சத்துக்கள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. குறிப்பாக மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய்களில் இருந்து பெண்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.  

ஆளிவிதைகளை தண்ணீரில் ஊற வைத்து உண்பது அதிக பயன்களைத் தரும். ஆளிவிதையை உண்ணும்போது, அதிகமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அழகாக வயதாக வேண்டுமா? வயதானாலும் நிம்மதியாக வாழ, உங்கள் வீட்டில் இதெல்லாம் இருக்கா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News