Jaggery: இரவு நேரத்தில் வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புத நன்மைகள்..!!

இரவு தூங்கும் முன் வெல்லத்தை உட்கொள்வது, ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க நன்மைகளைத் தரும் என நாட்டின் புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் அப்ரார் முல்தானி  கூறுகிறார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 20, 2021, 12:32 PM IST
  • வெல்லத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
  • இதில் காணப்படும் பொட்டாசியம், சோடியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
  • வெல்லம் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
Jaggery: இரவு நேரத்தில் வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புத நன்மைகள்..!! title=

Benefits of Eating Jaggery: வெல்லம் பல வித நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். ஆரோக்கியத்தை பராமரிக்க சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வெல்லத்தில் காணப்படும் சத்துக்கள்

தற்போது குளிர் காலம் தொடங்கி விட்ட நிலையில், வெல்லம் சாப்பிடுவது குளிர் கால நோய்களில் இருந்து உங்களை பெரிதும் பாதுகாக்கும். வெல்லத்தில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், சோடியம், எனர்ஜி, சர்க்கரை போன்ற சத்துக்கள் இருப்பதால், பல பிரச்சனைகளில் இருந்து காத்து ஆரோக்கியத்தை வழங்கும்.

நாட்டின் புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் அப்ரார் முல்தானி இது குறித்து கூறுகையில், இரவில் தூங்கும் முன் வெல்லத்தை உட்கொண்டால், ஆரோக்கியத்திற்கு பல வியக்கத்தக்க நன்மைகளைத் தரும் எனக் கூறியுள்ளார்.

ALSO READ | Climbing Stairs: மாரடைப்பை தடுக்க நாள் தோறும் படியேறுங்கள்..!!!

இரவில் தூங்கும் முன் வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

1. இரத்த சோகை நீங்கும்

வெல்லம் சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகை பிரச்சனையை தவிர்க்கலாம். வெல்லத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அதே நேரத்தில், உடலில் உள்ள இரத்த சோகை குறைபாட்டை இரும்புச்சத்து உட்கொள்வதன் மூலம் பூர்த்தி செய்யலாம்.

2. இரத்த அழுத்தத்தை சீராக்கும்

வெல்லத்தில் நிறைந்துள்ள இரும்புச்சத்து இரத்த அழுத்தத்தை (High Blood Pressure) ஒழுங்குபடுத்துவதில் பெரும் உதவியாக இருக்கும். இதன் மூலம், உயர் ரத்த அழுத்த பிரச்சனையையும் தவிர்க்கலாம். வெல்லத்தில்  காணப்படும் பொட்டாசியம் மற்றும் சோடியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.

ALSO READ | வெள்ளை அரிசி Vs பழுப்பு அரிசி: எது சிறந்த தேர்வு; ஊட்டச்சத்து நிபுணர் கூறுவது என்ன..!!

3. வெல்லம் சருமத்திற்கு நன்மை பயக்கும்

இரவில் வெல்லம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது சருமத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், வெல்லத்தில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் தன்மை சருமத்தில் உள்ள மாசுக்களை அகற்றுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமாகவும் வைக்கிறது.

4. செரிமானத்தை மேம்படுத்தும்

வெல்லம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது உடலில் ஒரு செரிமான முகவராக செயல்படுவதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

5. தூக்கமின்மை பிரச்சனையை போக்குகிறது

இரவு தூங்கும் முன் பாலுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தூக்கம் நன்றாக வரும். இது தவிர, காலையில் எழும் போது மிகவும் உற்சாகமாக உணரலாம்.

6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் நன்மை பயக்கும்

இரவில் தூங்கும் முன் வெல்லம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வெல்லம் வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.

ALSO READ | Weight loss Yoga: தொப்பை குறைய ‘இந்த’ ஆசனம் செய்தால் போதும்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News