Divine Fruit: ஸ்ரீபலம் எனப்படும் வில்வப் பழத்தில் இத்தனை நன்மைகளா? தெரியாம போச்சே!!

பல விதமான பழங்கள் இருந்தாலும், பல நூற்றாண்டுகளாக மக்கள் உண்டு வரும் பழங்கள் என்று பார்த்தால் பட்டியல் சிறியதாகவே இருக்கும். அப்படிப்பட பழங்களில் ஒன்று வில்வப் பழம்.தெய்வீகமான மரங்களில் ஒன்றாக கருதப்படும் வில்வ மரத்தில் விளையும் வில்வ பழத்தை ஸ்ரீபலம் என்றும் அழைப்பார்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 16, 2021, 04:30 PM IST
  • வில்வமரம் தெய்வீகமானது
  • வில்வப் பழத்திற்கு ஸ்ரீபலம் என்றும் பெயருண்டு
  • பாஸ்பரஸ், நியாசின் போன்ற சத்துக்களையும் கொண்டது வில்வப் பழம்
Divine Fruit: ஸ்ரீபலம் எனப்படும் வில்வப் பழத்தில் இத்தனை நன்மைகளா? தெரியாம போச்சே!! title=

பல விதமான பழங்கள் இருந்தாலும், பல நூற்றாண்டுகளாக மக்கள் உண்டு வரும் பழங்கள் என்று பார்த்தால் பட்டியல் சிறியதாகவே இருக்கும். அப்படிப்பட பழங்களில் ஒன்று வில்வப் பழம்.தெய்வீகமான மரங்களில் ஒன்றாக கருதப்படும் வில்வ மரத்தில் விளையும் வில்வ பழத்தை ஸ்ரீபலம் என்றும் அழைப்பார்கள். 

புரதச்சத்து, தாது உப்புக்கள், மாவுச் சத்து, சுண்ணாம்பு இரும்பு, கொழுப்புச் சத்துக்கள் என பல சத்துக்கள் வில்வத்தில் உண்டு. அடிமுதல் நுனி வரை பயனுள்ள மருத்துவ குணங்களை வைத்துள்ள வில்வ மரத்தை கற்பக விருட்சம் (Tree having medciinal benefits) என்று சொன்னால், வில்வ பழத்தை ஞானப்பழம், ஆரோக்கியப் பழம் என்றும் சொல்லலாம்.

பாஸ்பரஸ், நியாசின் போன்ற சத்துக்களையும் கொண்ட வில்வப் பழம், உண்பதற்கு சுவையானது. வயிற்றுப் போக்கு மற்றும் சீத பேதி ஆகியவற்றுக்கு வில்வப் பழம் சிறந்த மருந்து என்று கூறப்படுகிறது. வில்வம் பழத்தின் உள்ளிருக்கும் பசையை எண்ணெயில் ஊற வைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் சரும நோய்கள் காணமல் போய்விடும்,. சருமம் பளபளப்பாக மின்னும். 

பழம்

வில்வப் பழத்திலிருந்து ஜாம், பழச் சாறு, பழக் கூழ், பானங்கள், இனிப்புகள், போன்றவற்றைத் தயாரித்து, பதப்படுத்தியும் பயன்படுத்தலாம். வில்வப் பழ விதைகளில் இருந்து தயாரிக்கும் வில்வத் தைலம் மருத்துவ பண்புகள் கொண்டது.

வில்வப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டால் தலைமுடி வளர்வதற்கு உதவும். காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வில்வப்பழம், நெஞ்சு வலி மற்றும் மூச்சடைப்பு ஆகியவற்றையும் குணப்படுத்தும். கூவிளம்,  இளகம், ஸ்ரீபலம் என பல்வேறு பெயர்களில் அறியப்படும் வில்வப்பழம் சித்த மருத்துவத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

Also Read | வாழைக்கு ஏன் வாழை என்று பெயர் வந்தது தெரியுமா?

READ ALSO | பெண்களின் ஆரோக்கியத்திற்கு கட்டியம் கூறும் லிச்சி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News