சுகர் மாத்திரையே வேண்டாம்.. நீரிழிவை நிர்மூலமாக்கும் நித்திய கல்யாணி..!

நித்திய கல்யாணி அல்லது சதாபஹர் என அழைக்கப்படும் இதில்  கணைய செல்களில் இருந்து இன்சுலின் உற்பத்தி செய்யும் மருத்துவ குணம் இருப்பதால், ரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 16, 2023, 01:43 PM IST
  • நித்திய கலயாணி நீரிழிவை கட்டுப்படுத்த மிகச் சிறந்த மூலிகை
  • சர்க்கரை நோய், பிபி இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
  • இன்றைக்கு 40 வயதுக்கு முன்னரே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருவது வியப்பளிக்கிறது.
சுகர் மாத்திரையே வேண்டாம்..  நீரிழிவை நிர்மூலமாக்கும் நித்திய கல்யாணி..! title=

மாறிவரும் இந்த நவீன காலத்தில், மோசமான வாழ்க்கை முறையின் காரணமாக, இன்று பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். நமது உடல் நோய்களின் கூடாரமாகிவிட்டது. சர்க்கரை நோய், பிபி இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  இன்றைக்கு 40 வயதுக்கு முன்னரே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருவது வியப்பளிக்கிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயம்.  ஏனென்றால் நீரிழிவு நோய் என்பது  சிகிச்சை அளிக்க முடியாதது. கட்டுப்படுத்த மட்டுமே முடியும்.  நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால் பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டுமானால், மருந்துகளுடன், ஆயுர்வேத மூலிகைகளையும் பயன்படுத்தலாம். ஆயுர்வேதத்தில் மிகவும் கடுமையான நோய்களைக் கூட குணப்படுத்தும் பல மூலிகைகள் உள்ளன. இதில்  இதில் சர்க்கரை நோயை அற்புதமாக கட்டுப்படுத்தும் மூலிகைகளும் அடங்கும். இவற்றில் ஒன்று நித்திய கல்யாணி. அதன் பூக்கள் இலைகள் என அனைத்தும் நோயை தீர்க்கும் மூலிகைகள். பல வகையான நோய்களை இதன் மூலம் எளிதில் குணப்படுத்த முடியும்.

கணைய செல்களில் இருந்து இன்சுலின் உற்பத்தி செய்யும் நித்திய கல்யாணி

நவீன மருத்துவம் மற்றும் மூலிகை வைத்தியம் இரண்டிலும் மிக முக்கிய  இடம் பிடித்துள்ள மலர் என்றால் அது நித்திய கல்யாணி. நித்திய கல்யாணி அல்லது சதாபஹர் என அழைக்கப்படும் இதில்  கணைய செல்களில் இருந்து இன்சுலின் உற்பத்தி செய்யும் மருத்துவ குணம் இருப்பதால், ரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது. இந்த பூவின் சாறு எடுத்துக் கொள்வதன் மூலம் கணைய செல்களில் இருந்து இன்சுலின் உற்பத்தி தீவிரமாகிறது. மேலும் மாவுச்சத்தை குளுகோஸாக உடைப்பதை நித்தியகல்யாணி தடுக்கிறது. நித்திய கலயாணியை, பலர் அதை தங்கள் வீடுகளில் அலங்கார செடியாக வளர்க்க விரும்புகிறார்கள். இதன் பூக்கள் ஊதா, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் காணப்படுகிறது. இது வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும்.

மேலும் படிக்க | ஈஸியா உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க

நீரிழிவை கட்டுப்படுத்த நித்திய கல்யாணியை பயன்படுத்தும் முறை

நீரிழிவு நோயாளிகளுக்கு  நித்திய கல்யாணி இலைகளை உட்கொள்வது இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிகபட்ச நிவாரணம் பெறுகிறார்கள். அதன் பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை தேநீரை காலையில் உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இது தவிர, அதன் பூக்களின் இலைகளையும் தவறாமல் மென்று சாப்பிடலாம். இது தவிர இதன் ஜூஸும் மிகவும் பயனளிக்கும்

நித்திய கலயாணி இலையில் பொடி தயாரிக்கும் முறை

நித்திய கல்யாணி செடியின் இலைகளை உலர்த்தி பொடி செய்து கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும். தினமும் காலையில்  வெறும் வயிற்றில்,  1 டீஸ்பூன் உலர்ந்த இலை பொடியை தண்ணீர் அல்லது பிரெஷ்ஷான பழச்சாறுடன் கலந்து குடிக்கவும். மேலும், இந்த செடியின் இலைகள் 3- 4 மென்றும் சாப்பிடலாம். மேலும் இதன் பூக்களை பறித்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க விட்டு பிறகு இதை சில நிமிடம் வைத்திருந்து வடிகட்டி குடிக்கவும். இது மிகவும் கசப்பாக இருந்தாலும் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தால் நீரிழிவு வியக்கத்தக்க வகையில் கட்டுப்படும்.

 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சீராக வாழ்க்கை செல்ல சீரக தண்ணீர் குடிங்க: இதில் இருக்கு எக்கச்சக்க நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News