Papaya seeds for liver detox: நமது உடலின் ஒவ்வொரு பாகமும் மிகவும் முக்கியமானது. உடலின் ஒரு பகுதியில் பிரச்னை ஏற்பட்டால், அது முழு உடலையும் பாதிக்கும். உடலில் இருந்து நச்சு இரசாயனங்களை அகற்ற கல்லீரல் உதவுகிறது. இது தவிர, கல்லீரல் பல தாதுக்கள் மற்றும் இரும்புச் சத்துக்களைச் சேமித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கல்லீரல் நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். மேலும் அதை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். உடலில் இருக்கும் பெரும்பாலான இரசாயனங்களை நிர்வகிக்க வேலை செய்கிறது. மேலும், கல்லீரல் பித்தம் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு திரவத்தை உருவாக்குகிறது, இது பித்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இதனுடன், குடல் மற்றும் வயிற்றில் இருந்து இரத்தமும் கல்லீரல் வழியாக செல்கிறது.
கல்லீரல் பலவீனத்தை போக்க சில வீட்டு வைத்தியங்கள்
கல்லீரல் இல்லாமல் பல செயல்பாடுகள் சாத்தியமே இல்லை. சில காரணங்களால் கல்லீரல் சரியாக வேலை செய்வதை நிறுத்தினால், மூளையில் அழுத்தம் அதிகரித்து மருத்துவ அவசரநிலை ஏற்பட்டு மிக ஆபத்தான நிலை உருவாகலாம். கல்லீரலில் ஏற்படும் நோய்கள் தவிர, எதேனும் ஒரு காரணத்திற்காக அதிக மருந்துகளை உட்கொள்வதாலும், கல்லீரல் பலவீனமடைகிறது. இருப்பினும், கல்லீரல் பலவீனத்தை போக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இவற்றில் ஒன்று பப்பாளி விதைகள். இது கல்லீரலுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கல்லீரலுக்கு பப்பாளி விதைகளின் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
கல்லீரலுக்கு பப்பாளி விதைகள்
பப்பாளி விதைகள் கல்லீரலுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பப்பாளி விதைகளில் உள்ள பல மருத்துவ குணங்கள் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க வேலை செய்கின்றன. ஏதேனும் நோய் அல்லது பிற உடல்நலப் பிரச்சனை காரணமாக கல்லீரலில் நச்சுகள் உருவாக ஆரம்பித்திருந்தால், பப்பாளியின் உதவியுடன் இந்த நச்சுகளை அகற்றலாம். மேலும், பப்பாளி விதைகள் கல்லீரலில் ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்கின்றன. இதன் காரணமாக புதிய செல்கள் உருவாகத் தொடங்கி கல்லீரலின் வலிமை அதிகரிக்கிறது.
பப்பாளி விதைகளை பயன்படுத்தும் முறை
பப்பாளி சாப்பிடும் போது, அதன் விதைகளை பெரும்பாலானோர் தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் பப்பாளியுடன் அதன் விதைகளையும் சாப்பிடலாம் என்று உங்களுக்குச் சொல்கிறோம். இது தவிர, விதைகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் சாப்பிடலாம். பப்பாளி விதைகளை அடிக்கடி சாலட்டில் கலந்து சாப்பிடலாம், விரும்பினால் எதையும் கலக்காமல் சாப்பிடலாம்.
உட்கொள்ள வேண்டிய சரியான அளவு
பப்பாளி விதைகளை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு முற்றிலும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால் அதை அளவோடு, ஒரு குறிப்பிட்ட அளவில் உட்கொள்ள வேண்டியது அவசியம். தினமும் ஒரு தேக்கரண்டி வரை பப்பாளி விதைகளை உட்கொள்ளலாம். இதை விட அதிகமாக விதைகளை உட்கொண்டால், உங்களுக்கு வயிறு, குமட்டல் மற்றும் வாந்தி தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்படலாம். எனென்றால், அளவிற்கு மிஞ்சினால் அமைர்தமும் நஞ்சு.
கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க செய்ய வேண்டியவை
கல்லீரல் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், இதற்கு உணவு மற்றும் பானங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும், பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளுக்கும், மது போன்ற கெட்ட பழக்கங்களுக்கும் குட்-பை சொல்லி கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.
கல்லீரல் நோயாளிகளுக்கான அறிவுறுத்தல்
உங்களுக்கு கல்லீரல் நோய் இருந்தால், பப்பாளி விதைகளை உட்கொள்வதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியாது. பப்பாளி விதைகள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது உண்மை தான். ஆனால், அதனை கல்லீரல் நோய்க்கான மருந்தாகப் பயன்படுத்த முடியாது. கல்லீரல் ஆரோக்கியம் தொடர்பான ஏதேனும் கோளாறுகளை நீங்கள் சமீபத்தில் சந்தித்திருந்தால், கூடிய விரைவில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள் இவை தான்! அலட்சியப்படுத்த வேண்டாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ