Healthy Meat: சிக்கனை எப்படி சமைத்தால் நோயாளிகளுக்கு நல்லது

கோழியின் எந்த பாகத்தில் எத்தனை கொழுப்பு இருக்கிறது என்பது தெரிந்து சமைத்தால், நோயாளிகளுக்கும் சிக்கன் அற்புதமான உணவாக இருக்கும்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 16, 2022, 11:16 AM IST
  • கோழியின் எந்த பாகத்தில் எத்தனை கொழுப்பு இருக்கிறது
  • நோயாளிகளுக்கும் சிக்கன் அற்புதமான உணவு
  • நோயாளிகளுக்கும் உகந்த உணவு கோழி இறைச்சி
Healthy Meat: சிக்கனை எப்படி சமைத்தால் நோயாளிகளுக்கு நல்லது title=

கோழி இறைச்சியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆனால், அதை ஆரோக்கியமான முறையில் எப்படி சமைக்க வேண்டும் என்பது தெரியுமா?

கோழியின் வெவ்வேறு பாகங்களில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் வெவ்வேறு அளவுகளில் உள்ளன. கோழியின் மார்பகத்தில் உள்ள இறைச்சியில் 28 கிராமுக்கு  1 கிராம் கொழுப்பு தான் உள்ளது. அதேபோல  கோழியின் கால்களில் ஒவ்வொரு 28 கிராமுக்கும் 2 கிராம் கொழுப்பு உள்ளது.

கோழியை சமைக்க முடிவு செய்வதற்கு முன், யாருக்கு கோழி சமைக்கிறோம், எதற்காக சமைக்கிறோம் என்பதற்கு ஏற்றாற்போல சமைக்கலாம். கொழுப்பு சேர்க்கக்கூடாதவர்களுக்கும், கொழுப்பில்லாத பாகத்தை சமைத்துக் கொடுங்கள். 

பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்பு படிவுகள் வெள்ளை நிறத்தில் இருக்கும், மேலும் அதை அடையாளம் காண்பதில் சிக்கல் இருக்காது.

கோழியில் உள்ள கொழுப்பை ஆரோக்கியமாக மாற்றுவது சுலபம். மஞ்சள், கொத்தமல்லி போன்ற ஆரோக்கியமான மசாலாப் பொருட்களுடன் தயிர் சேர்த்து கோழியை ஊறவைக்க வேண்டும், 

இதனால் கோழி இந்த மசாலாப் பொருட்களின் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சி சுவையானதாக மாறும். அதன் பிறகு, வழக்கம்போல சமைத்து பரிமாறுங்கள்.
இந்த முறையில் கோழி இறைச்சியை சமைபப்து உடலுக்கு நன்மைத் தருவதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும். 

இதை, மைக்ரோவேவில் பேக்கிங் அல்லது கிரில் செய்தும் சாப்பிடலாம். எப்படி சமைத்தாலும் மசாலாப் பொருட்களுடன் தயிர் சேர்த்து ஊற வைத்த கோழி இறைச்சி ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

அதேபோல சிக்கனுடன் சேர்ந்தால் ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளில் ஓட்சுக்கு முக்கியமான இடம் உண்டு. 
உறைய வைக்கப்பட்ட கோழியை பயன்படுத்தும் முறை

கோழியை உடனே அறுத்து கடையில் இருந்து வாங்கி வந்து சமைப்பது குறைந்துவிட்டது. உறைய வைக்கப்பட்ட கோழி, வீடுகளில் குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து சமைக்கபப்டும் கோழி என கோழியை அறுத்து பல நாட்களுக்கு பிறகு சமைக்கும் வழக்கம் அதிகமாகிவருகிறது.

மேலும் படிக்க | பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்கள் சீக்கிரம் வயதுக்கு வருகின்றனரா

இந்த நிலையில் மிகவும் கவனமாக சிக்கனை கையாள்வது அவசியம். உறைந்த நிலையில் இருந்து சிக்கனை எடுத்தபிறகு மீண்டும் அதை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம். அப்படி செய்தால் பாக்டீரியாக்கள் உருவாகும்.

எனவே, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போதே, கோழி இறைச்சியை சிறு சிறு பகுதிகளாக பிரித்து வைத்துவிட்டால், தேவையானதை மட்டும் எடுத்து சமைக்கலாம். இது கோழி இறைச்சி வீணாவதையும், இயல்பு வெப்ப நிலைக்கு வந்த பிறகு மீண்டும் ஃப்ரீஜரில் வைப்பதையும் தவிர்க்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இரவு நேர உணவே ஒருவரின் ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News