சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் அன்றாட பணிகளை பாதிக்கக் கூடிய வகையில் மிகவும் வேதனை கொடுக்கக் கூடியது. சிறுநீரக பிரச்சனைகளில் ஒன்று சிறுநீரக கற்கள் பிரச்சனை. சிறுநீரக கற்கள் வந்தால், பாதிக்கப்பட்ட நபர் மிகவும் வேதனையான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் தனது டயட் பிளானை மிகவும் கவனத்துடன் திட்டமிட வேண்டும்.
உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை இருந்தால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில சாறுகளின் உதவியுடன் இந்த பிரச்சனையை சமாளிக்கலாம். இந்த ஜூஸ்கள் எவை, எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
சிறுநீரக கற்களை போக்கும் சாறு
சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்கள் , இந்த 3 வகையான ஜூஸ்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் வலி உட்பட பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
மேலும் படிக்க | உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க இந்த பழங்களை அவசியம் டயட்டில் சேர்க்கவும்
1. தக்காளி சாறு
சிறுநீரக கற்களை அகற்ற தக்காளி சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தக்காளி ஜூஸ் தயாரிக்க இரண்டு தக்காளியை நன்கு கழுவி, அவற்றை அரைக்கவும். சாற்றில் இந்துப்பு மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிட வேண்டும், நீங்கள் விரும்பினால், சாறு வடிவில் தயாரிக்கப்பட்ட கலவையை குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் உட்கொள்ளலாம். இருந்தாலும் அவ்வபோது பிரெஷ்ஷாக தயாரித்து அருந்துவது மிகவும் நல்லது.
2. எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை சாற்றை உட்கொண்டால், பிரச்சனையையும் சமாளிக்க முடியும். ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, இப்போது சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து, கலவையை நன்றாகக் கலக்கி, சாப்பிட்டால், சிறுநீரக கற்கள் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.
மேலும் படிக்க | Detoxify: உடலில் சேரும் நச்சுக்களை நீக்க இவற்றை டயட்டில் சேர்க்கவும்
3. துளசி சாறு
சிறுநீரக கற்கள் பிரச்சனையை நீக்கவும் துளசியில் இருந்து தயாரிக்கப்படும் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், துளசி இலைகளை சாறு எடுத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து, காலை மற்றும் மாலையில் தயாரித்த கலவையை சாப்பிடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் சிறுநீரக பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR