சிறுநீரக நோய் அண்டாமல் இருக்க இந்த உணவுகளுக்கு NO சொல்லுங்க

நம் உடலின் மிக முக்கியமான அங்கங்களில் ஒன்றான  சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தவில்லை என்றால், உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 20, 2022, 09:48 AM IST
  • சிறுநீரகம் உடலில் மிகவும் முக்கியமான அங்கம்.
  • தினமும் யோகா பயிற்சி செய்யுங்கள்
  • சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம்.
சிறுநீரக நோய் அண்டாமல் இருக்க இந்த உணவுகளுக்கு NO சொல்லுங்க title=

சிறுநீரகம் உடலில் மிகவும் முக்கியமானது, ஏனெனில் அதன் உதவியுடன் தான் நமது இரத்தம் சுத்தப்படுத்தப்பட்டு உடலில் இருந்து நச்சுப் பொருட்கள் வெளியேறுகின்றன. எனவே நம் உடலின் மிக முக்கியமான அங்கங்களில் ஒன்றான  சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தவில்லை என்றால், உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தை நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். 

அதிலும், நீரிழிவு நோய் இருப்பவர்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் நீரிழிவு நோய் சிறுநீரகத்தை சேதப்படுத்தும். சிறுநீரக பாதிப்பைத் தடுக்க, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது அவசியம்.

நீரிழிவும் சிறுநீரக பாதிப்பும்

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டை மீறினால், படிப்படியாக சிறுநீரகத்தில் இருக்கும் இரத்த நாளங்களை சேதப்படுத்தும். இந்த இரத்த நாளங்கள் பலவீனமடையத் தொடங்கும் போது, ​​​​சிறுநீரகத்தால் இரத்தத்தை சரியாக சுத்தம் செய்ய முடியாது. இதன் காரணமாக உயர் ரத்த அழுத்த பிரச்சனை தொடங்கி சிறுநீரக பாதிப்பும் ஏற்படும்.

மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்

சிறுநீரகத்தை காப்பாற்ற சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மிகம் அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். இதற்காக, அவர்கள் தங்கள் வாழ்க்கைமுறையில் பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

- உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்

- கோபத்தை குறைக்க வேண்டும்

- மன அழுத்தம் கூடாது

- தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

- தினமும் யோகா பயிற்சி  செய்யுங்கள்

- உங்களுக்கு ரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், அதை கட்டுக்குள் வைத்திருங்கள்

- உங்களுக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்தால், சோனோகிராபி பரிசோதனை மற்றும் IgA நெஃப்ரோபதி பரிசோதனை செய்துகொள்ளவும்.

சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் கீழ்கண்ட  உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

- அதிக உப்பு உட்கொள்ள வேண்டாம்.

- அதிக பொட்டாசியம் உள்ள காய்கறிகள் கூடாது. (எ.கா- உருளைக்கிழங்கு, தக்காளி, கிவி, ஆரஞ்சு, வெண்ணெய்)

- பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி ஆகியவற்றிலிருந்தும் விலகி இருங்கள். ஏனெனில் இதில் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது.

- ஊறுகாய், உலர் மீன் மற்றும் குளிர்பானங்கள் கூடாது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News