ஜிப்மர்: இலவச சிகிச்சை வேண்டுமா? சிவப்பு ரேஷன் கார்டு கொண்டு வாங்க!

சிவப்பு ரேஷன் கார்டுகளைக் கொண்டு வந்தால் தான் அக்டோபர் 1-ம் தேதி முதல் இலவச சிகிச்சை தரப்படும் என ஜிப்மர் மருத்துவமனை அறிவித்தது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 24, 2021, 08:18 PM IST
  • சிவப்பு ரேஷன் அட்டை இருந்தால் மட்டுமே இலவச சிகிச்சை
  • ஜிப்மர் மருத்துவமனை கெடுபிடி
  • ஜிப்மரின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அதிருப்தி
ஜிப்மர்: இலவச சிகிச்சை வேண்டுமா? சிவப்பு ரேஷன் கார்டு கொண்டு வாங்க! title=

புதுச்சேரி: சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை என்ற ஜிப்மர் மருத்துவமனையின் முடிவு சர்ச்சைகளை கிளம்பியுள்ளது.

புதுச்சேரியின் ஜிப்மர் மருத்துவமனை மிகவும் பிரபலமானது.  ஜிப்மர் நிர்வாகம் தற்போது விதித்துள்ள புதிய கட்டுப்பாடு சர்ச்சையை எழுப்பியுள்ளது. 
ஜிப்மர் மருத்துவமனை, அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "புதுச்சேரியில் ஏழ்மை நிலையில் உள்ளோருக்கு இலவச சிகிச்சை தருகிறோம். அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த ஏழைகளுக்கும் சிகிச்சை தரவுள்ளோம். இனி அனைவரும் சிவப்பு ரேஷன் கார்டுகளைக் கொண்டு வந்தால் இலவச சிகிச்சை தரப்படும் இந்த புது விதிமுறை அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜிப்மர்

சிவப்பு நிற ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே இலவச சிகிச்சை என்றால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள். புதுச்சேரியில் சிவப்பு, மஞ்சள் ரேஷன் கார்டுகள் கணக்கெடுப்பே நடத்தப்படாமல் உள்ல நிலையில் ஜிப்மரின் அறிவிப்பு விநோதமாக உள்ளது. 

ஜிப்மரின் அறிவுப்பு குறித்து விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் அதிருப்தி தெரிவிக்கிறார். "வெளிப்புற நோயாளியாக சிகிச்சை பெற வருபவர்கள்கூட தங்களது வருமானத்தை உறுதி செய்வதற்காக பிபிஎல் (BPL) ரேஷன் கார்டைக் கையோடு எடுத்துவரவேண்டும். அதாவது 2499/- ரூபாய்க்கும் கீழே மாத வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இலவச சிகிச்சை என்பது இந்த அறிக்கையின் பொருள். இனி ஜிப்மரில் எல்லாவிதமான சிகிச்சைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையே இந்த அறிவிப்பு காட்டுகிறது” 

ஜிப்மர் மருத்துவமனை அரசு மருத்துவமனையா அல்லது தனியார் மருத்துவமனையா எனக் கேள்வி எழுகிறது. சிகிச்சை பெற வரும் நோயாளி கையோடு ரேஷன் கார்டை எடுத்துவர வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமற்றது அதுமட்டுமல்லாமல், சட்டவிரோதமானதும்கூட. இந்த உத்தரவைப் பிறப்பித்த இயக்குநரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

ஜிப்மர் தனது முடிவை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சoundந்தரராஜன் மருத்துவமனை நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டார். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ஓபிடியில் இலவச சிகிச்சை மற்றும் சேவை என்பது பலரை பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

Also Read | மருத்துவ ஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News