வயிற்றை வளமாக்கும் சீரக தண்ணீர் அற்புதங்கள்!

சீரக நீர் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சீரக நீர் வீக்கம் மற்றும் அஜீரணத்தை போக்க உதவுகிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 10, 2022, 07:02 PM IST
  • ஜீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • வயிற்றை வளமாக்கும் சீரக தண்ணீர் அற்புதங்கள்
வயிற்றை வளமாக்கும் சீரக தண்ணீர் அற்புதங்கள்! title=

சமையலறையில் இருக்கும் சீரகம், உணவுக்கு அற்புதமான சுவையைத் தருவது மட்டுமல்லாமல், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. ஒரு மசாலாப் பொருளாக மட்டும் இதனை பார்க்கக் கூடாது. சீரக நீரை குடிப்பதால் ஏராளமான நன்மைகள் ஒருவருக்கு கிடைக்கும். சீரக நீர் வீக்கம் மற்றும் அஜீரணத்தை போக்க உதவுகிறது. குறிப்பாக, வயிற்று வலியை குணப்படுத்தும்.

கர்ப்ப காலத்தில் சீரகம்

கர்ப்ப காலத்தில் வயிற்று பிரச்சனைகள், வயிற்று வலி, மலச்சிக்கல், சளி போன்ற சில பிரச்சனைகளை சீரகம் போக்குகிறது. மேலும், சீரகம் இரும்புச்சத்துக்கான நல்ல மூலமாகும். எனவே கர்ப்ப காலத்தில் சீரகம் அல்லது சீரகம் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டலை போக்க சீரகத்தை உட்கொள்ளலாம். மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு உட்கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு 

சீரக நீர் பாலூட்டி சுரப்பிகளுக்கு நல்லது. எனவே இது கர்ப்பிணிப் பெண்களுக்கு பாலூட்டுவதை ஊக்குவிக்கிறது. சீரக விதைகள் இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த பொக்கிஷம். நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதன் மூலம் பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. சீரகத்தை உட்கொள்வதால் நோய்வாய்ப்படும் வாய்ப்புகளை குறைக்கிறது.

மேலும் படிக்க | Red Chilli: மாரடைப்பில் உயிர் காக்கும் சிவப்பு மிளகாய்! எடை இழக்கவும் உதவும்

சர்க்கரை நோய்க்கு நல்லது

சர்க்கரை நோயாளிகளுக்கு சீரக நீர் நல்லது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க வெறும் வயிற்றில் குடிக்கலாம். சீரகம் உடலில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் மற்ற நன்மைகள்

- சீரகத் தண்ணீரைக் குடிப்பதால், கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்து, ரத்த ஓட்டம் சீராகும்

- காய்ச்சல் வந்தால் சீரகத் தண்ணீரைக் குடித்துவர, உடலில் சளியை உற்பத்தி செய்து நிவாரணம் தரும்

- தினமும் காலையில் சீரகம் தண்ணீர் குடிப்பதால் அசிடிட்டி பிரச்சனை வராது

- சீரக நீர் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி சரும பிரச்சனைகளை ஏற்படுத்தாது

- எடை இழப்புக்கு சீரகத் தண்ணீரைக் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது

- சீரகத் தண்ணீரைக் குடிப்பதால், உடலில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும், இதனால் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

மேலும் படிக்க | 2 வாரங்களில் உடல் எடை குறைக்க புதிய டயட் சார்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News