Sprouted Grains: ஊட்டமும் தரும், ஊக்கமும் தரும் முளை கட்டிய தானியங்கள்

முளைகட்டிய தானியங்களில் நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் (antioxidants) போதுமான அளவு இருப்பதாக ஆய்வு  முடிவுகள் கூறுகின்றன

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 30, 2021, 03:55 PM IST
  • முளைகட்டும்போது தானியங்களில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகரிக்கின்றன
  • தானியங்களில் உள்ள வைட்டமின் ஏ அளவு இரட்டிப்பாகிறது
  • புரதங்கள் எளிதில் ஜீரணமாகின்றன
Sprouted Grains: ஊட்டமும் தரும், ஊக்கமும் தரும் முளை கட்டிய தானியங்கள் title=

நாம் உண்ணும் உணவே நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படை. ஆரோக்கியமே நமது வாழ்க்கை தரத்தை நிர்ணயிப்பதோடு, வாழ்வில் சுவையூட்டுகிறது. 

முளைகட்டிய தானியங்கள் நம் ஆரோக்கியத்திற்கு செய்யும் நன்மைகள் தெரிந்தால், தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதை யாரும் தவற விடமாட்டார்கள்.
முளைகட்டும்போது தானியங்களில் உள்ள  வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகரிக்கிறது. தானியங்களில் உள்ள வைட்டமின் ஏ அளவு இரட்டிப்பாகிறது. புரதங்கள் எளிதில் ஜீரணமாகும்.

முளைகட்டிய தானியங்களில் நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் (antioxidants) போதுமான அளவு இருப்பதாக ஆய்வு  முடிவுகள் கூறுகின்றன. 

Also Read | மாம்பழம் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளக் கூடாத 5 உணவுகள்

நாம் பெரும்பாலும், தானியங்கள் மற்றும் பயறு வகைகளை சமைத்தே சாப்பிடுகிறோம். அவற்றை முளைகட்டிச் சாப்பிட்டால் கூடுதலாக பல சத்துகளைப் பெறலாம். 
உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின் சி உயிர்ச்சத்து முளைகட்டிய பயறுகள் மற்றும் தானியங்களில் அதிகம் இருக்கிறது, சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் உண்ண ஏற்றவை இவை.

இரும்பு, புரதம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் கொண்டை கடலையை முளை கட்டி சாப்பிட்டால் மருத்துவரை பற்றி நினைத்துப் பார்க்கவே அவசியம் இல்லை.

கம்பு, மிகவும் சிறந்த தானியம். சத்துக்குறைபாடு உள்ளவர்கள் இதை முளைகட்டிச் சாப்பிட்டால் உடலுக்குபலம் தரும். உடல் சூட்டைக் குறைக்கும் முளைகட்டிய கம்பு, வயிற்றுப்புண், மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சரிசெய்யும்.

Also Read | இந்தக் காய் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் நீர்க்காய்

பொதுவாக நாம் உணவில் நேரடியாக எடுத்துக் கொள்ளாத ஒரு பொருள் வெந்தயம். ஆனால் வெந்தயத்தில் இருக்கும் சத்துக்கள் அளவிட முடியாதவை. அதிலும், முளைகட்டிய வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன. 

முளைகட்டிய வெந்தயத்த்தை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோய் அண்டாது. அதில் உள்ள மூலக்கூறுகளால் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். அதனால் இது, சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.

உடலில் கெட்ட கொழுப்புச் சத்து சேராமல் பார்த்துகொள்ளும் வெந்தயம், தொப்பையையும் குறைக்கும், உடல் எடையையும் குறைக்கும்.  

Also Read | மதிய உணவில் சாப்பிட ஏற்றது எது? தவிர்க்க வேண்டியவை எவை?

வைட்டமின் ஏ,பி,சி போன்ற சத்துகள் நிரம்பியது கொள்ளு. கொள்ளுப்பயறை முளைகட்டிச் சாப்பிட்டால் தொப்பை, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஓடிப்போகும். நரம்பு, எலும்புக்கு ஊட்டமளிக்கும் கொள்ளுப்பயறாஇ சாப்பிட்டால், மூட்டுவலி குறையும். 

அதேபோல, உளுந்தை முளைக்கட்டி சாப்பிட்டால் மூட்டுவலியைப் போக்கும். சர்க்கரை நோயாளிகளும் முளைகட்டிய உளுந்தை சாப்பிடலாம். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் வல்லமை முளைகட்டிய உளுந்துக்கு உண்டு.

Also Read | கொரோனாவை கட்டுப்படுத்துமா கத்திரிக்காய்

முளைகட்டிய பாசிப்பயறில் புரதமும், கால்சியமும் நிறைந்துள்ளது. ஊட்டம் தரும் முளைகட்டிய பாசிப்பயறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், அல்சரைக் குணப்படுத்தும்.

தினசரி நமது உணவில் முளைகட்டிய தானியங்களை சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, மன ஆரோக்கியமும் மேம்படும்.

 Also Read | தவறாமல் பேரிக்காய் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News