இள வயதில் உண்டாகும் சர்க்கரை நோய்... இதோ ஆபத்தான 5 அறிகுறிகள்

Diabetes symptoms: உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நீரிழிவு நோய் ஒரு தீவிர பிரச்சனையாக மாறி வருகிறது. இது ஒரு நோயாகும், அதன் சிகிச்சை சாத்தியமற்றது, ஆனால் அதைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 7, 2023, 02:56 PM IST
  • நீரிழிவு நோயின் மற்றொரு அறிகுறி அதிகப்படியான பசி எடுப்பது.
  • அதீத சோர்வும் பலவீனமும் உணரத் தொடங்கும்.
  • நீரிழிவு நோயின் 5 ஆரம்ப அறிகுறிகள்
இள வயதில் உண்டாகும் சர்க்கரை நோய்... இதோ ஆபத்தான 5 அறிகுறிகள் title=

தமிழில் நீரிழிவு நோயின் அறிகுறிகள்: நீரிழிவு நோய் ஒரு தீவிர பிரச்சனையாக மாறி வருகிறது, இது உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இது ஒரு சாதாரண நோயாக இருப்பது போல் இருந்தாலும், அதன் சிகிச்சை சாத்தியமற்றது, மேலும் இதைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில் நீரிழிவு நோய் என்பது குணப்படுத்த முடியாத ஒரு நோயாகும், இது நமது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் மற்றும் குறைவான உடல் செயல்பாடு போன்றவையே நீரிழிவு நோய் ஏற்படவும், அதிகரிக்கவும் முக்கிய காரணமாகும்.

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகளவாகும். குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் டைப் 2 நீரிழிவு நோய் பெரும்பாலும் இளம் வயதினருக்கு ஏற்படுகிறது. அந்த வகையில் இளம் வயதில் ஏற்படும் நீரிழிவு நோய்க்கு சில அறிகுறிகள் உள்ளன, அவை என்ன என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம். 

மேலும் படிக்க | உடல் எடை எகிறுதா? இப்படி பண்ணி பாருங்க.. ஜிம் போகாமலேயே ஜம்முனு குறைக்கலாம்!!

நீரிழிவு நோயின் 5 ஆரம்ப அறிகுறிகள்

காயங்கள் ஆர தாமதமாகுதல்
காயம் அல்லது புண்கள் குணமடைய அதிக நேரம் எடுத்துக்கொள்வது பொதுவாக நீரிழிவு நோயைக் குறிக்கிறது. உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, ​​நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும், இதன் காரணமாக காயம் குணமடைய அதிக நேரம் எடுக்கும்.

அடிக்கடி தொற்று ஏற்படுவது
அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுவது நீரிழிவு நோயின் மற்றொரு ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால், நோய் எதிர்ப்பு அமைப்பு சரியாக செயல்பட முடியாமல், அடிக்கடி நோய்த்தொற்றுகள் ஏற்படலாம். இளமைப் பருவத்தில் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் அடிக்கடி தொற்று ஏற்பட்டால், சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பிருக்கலாம்.

அதிகளவு பசி எடுப்பது
நீரிழிவு நோயின் மற்றொரு அறிகுறி அதிகப்படியான பசி எடுப்பது. இளம் வயதில் அதிக பசி எடுப்பது பொதுவானது, ஆனால் அதிக பசி எடுப்பது நீரிழிவு நோயின் மற்றொரு ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம், அப்படியாமால் மருத்துவரை அணுகுவது அவசியம்.

அதிக தாகம் எடுப்பது 
அடிக்கடி தாகமாக எடுப்பதால் எச்சரிக்கையாக இருங்கள். நீரிழிவு நோயாளிகள் அதிக தாகத்தை உணர்வார்கள். அத்தகைய நிலையில், இரத்த சர்க்கரை பரிசோதனையை ஒரு முறை செய்வது நல்லது. இருப்பினும், தாகம் எடுப்பது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் நிச்சயமாக பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.

சோர்வு மற்றும் பலவீனம்
உடலால் போதிய அளவு இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமலோ அல்லது போதிய அளவில் பயன்படுத்த முடியாமலோ போனால், அதீத சோர்வும் பலவீனமும் உணரத் தொடங்கும். இளமைப் பருவத்தில் சோர்வாகவும் பலவீனமாகவும் இருப்பது நீரிழிவு நோய் அல்லது வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | உடல் இளைக்கும் இலட்சியத்தில் வெற்றிப் பெறுவதைத் தடுக்கும் பொதுவான தவறுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News