ஒரு மாதம் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்த்தால் என்ன ஆகும்... நிபுணர்கள் கூறுவது என்ன!

நீங்கள் ஒரு மாதத்திற்கு உணவில் இருந்து சர்க்கரையை நீக்கினால், அது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் மிகவும் வியக்கத்தக்க மாற்றங்களை கொடுக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 20, 2023, 04:41 PM IST
  • சர்க்கரை கலந்த டீ காபி போன்றவற்றை உங்கள் உணவில் இருந்து நீக்க வேண்டும்.
  • பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்ற இயற்கை சர்க்கரை கொண்ட சில உணவுகள்.
  • உடலின் பல உறுப்புகளைச் சுற்றி கொழுப்பு சேரத் தொடங்குகிறது.
ஒரு மாதம் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்த்தால் என்ன ஆகும்... நிபுணர்கள் கூறுவது என்ன! title=

நீங்கள் ஒரு மாதத்திற்கு சர்க்கரையை விட்டுவிட்டால் என்ன நடக்கும் என்பதை பற்றி யோசித்திருக்கிறீர்களா. நீங்கள் ஒரு மாதத்திற்கு உணவில் இருந்து சர்க்கரையை நீக்கினால், அது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் மிகவும் வியக்கத்தக்க மாற்றங்களை கொடுக்கும். இது உங்கள் எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படியென்றால் ஒரு மாதத்திற்கு சர்க்கரையை உணவில் இருந்து முற்றிலுமாக நீக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளலாம். 

நீங்கள் சர்க்கரையை கைவிட விரும்பினால், பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்ற இயற்கை சர்க்கரை கொண்ட அந்த பொருட்களை ஒரு மாதத்திற்கு உங்கள் உணவில் உட்கொள்ளலாம். குக்கீகள், பிஸ்கட்கள், சோடா, மிட்டாய், சாக்லேட், கேக், இனிப்புகள், சர்க்கரை கலந்த டீ காபி போன்றவற்றை மட்டுமே உங்கள் உணவில் இருந்து நீக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் செய்து வந்தால், உங்கள் உடலில் நல்ல பலனைக் காண்பீர்கள்

உண்மையில், நீங்கள் தொடர்ந்து இனிப்புப் பொருட்களை அதாவது சர்க்கரைப் பொருட்களை உட்கொள்ளத் தொடங்கும் போது, ​​அது உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் இன்சுலினையும் பாதிக்கிறது. இதன் காரணமாக நீரிழிவு மற்றும் பல நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஆனால் நீங்கள் 30 நாட்களுக்கு உட்கொள்வதை நிறுத்தினால், அதன் பாதிப்பு விரைவாக குறைகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது எளிதாகிறது. 

சர்க்கரை உட்கொள்வதை நிறுத்துவதன் மூலம், எடை குறைகிறது. இது உங்கள் எடை இழப்பு முயற்சிகளுக்கு முக்கியமானது. உண்மையில், நீங்கள் சர்க்கரையை அதிகமாக உட்கொள்ளும்போது, ​​உடலின் பல உறுப்புகளைச் சுற்றி கொழுப்பு சேரத் தொடங்குகிறது, மேலும் அது பல நோய்களையும் ஏற்படுத்துகிறது. 

மேலும் படிக்க | தினமும் வெற்றிலை பாக்கு போட்டால் போதும்... கருத்தரிப்பு மையம் போகவே வேண்டாம்!

சர்க்கரையின் அதிகப்படியான நுகர்வு கல்லீரல் மற்றும் இதயத்தையும் பாதிக்கிறது. இது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயை ஏற்படுத்தலாம் மற்றும் கல்லீரல் பாதிப்பிற்கு வழிவகுக்கும். இது மட்டுமின்றி, சர்க்கரை நிறைந்த பொருட்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ராலை ஏற்படுத்துகிறது மற்றும் இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆனால் நீங்கள் 1 மாதம் சர்க்கரை உட்கொள்வதை நிறுத்தினால், அது ஆபத்தைத் தவிர்க்க பெரிதும் உதவும். 

சர்க்கரைப் பொருட்களை உட்கொள்வதால் பற்களின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். இதைச் செய்வதன் மூலம், ஈறு நோய் மற்றும் குழி ஆகிய இரண்டின் அபாயமும் குறைகிறது. உண்மையில், குழந்தைகள் இனிப்புகளை சாப்பிடும்போது, ​​​​அதன் துண்டுகள் பற்களில் சிக்கி, பாக்டீரியா வேகமாக தாக்கும். 30 நாட்களுக்கு சர்க்கரை உட்கொள்வதை நிறுத்தினால், பற்களில் குழிவு போன்ற பிரச்சனைகளும் தவிர்க்கப்படும்.

மேலும் படிக்க | சர்க்கரை நோயா... உடல் பருமன் குறையணுமா... ‘இந்த’ சர்க்கரைகளை தாராளமா சாப்பிடலாம்!

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News