ஆரோக்கியத்தை காலி செய்யும் வெயிட் லாஸ் மாத்திரைகள்... எச்சரிக்கும் ICMR..!!

உடல் பருமனைக் குறைக்க பலர் குறுக்குவழிகளை விரும்புகிறார்கள். டயட், உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள், மருந்துகளை உட்கொண்டு உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், இது மிக ஆபத்தானது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 6, 2024, 08:17 AM IST
  • ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க ஐசிஎம்ஆர் அளித்துள்ள பரிந்துரைகள்.
  • குறுக்குவழி பழக்கம் ஆரோக்கியத்திற்கு எதிரியாகிறது.
  • உடல் பருமனை குறைக்க எடுத்துக் கொள்ளும் வெயிட் லாஸ் மாத்திரைகளின் பக்க விளைவுகள்
ஆரோக்கியத்தை காலி செய்யும் வெயிட் லாஸ் மாத்திரைகள்... எச்சரிக்கும் ICMR..!! title=

இன்றைய கால கட்டத்தில் யாருக்கும் பொறுமை இருப்பதில்லை. பலன்கள் எல்லாம் உடனடியாக தெரிய வேண்டும். ஆனால் இந்த குறுக்குவழி பழக்கம் ஆரோக்கியத்திற்கு எதிரியாகிறது. உடல் பருமனைக் குறைக்க பலர் குறுக்குவழிகளை விரும்புகிறார்கள். டயட், உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள், மருந்துகளை உட்கொண்டு உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், இது மிக ஆபத்தானது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். 

உடல் எடையை குறைக்கும் மருந்துஎடுத்துக் கொள்வதன் காரணமாக அடிவயிற்று முடக்குதல் பிரச்சனைக்கு ஆளாகலாம். வயிற்று முடக்கம் என்ற இந்த நோய் காஸ்ட்ரோபரேசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் குடல் தசைகள் பலவீனமடைகின்றன. இதனால் உணவு முழுமையாக ஜீரணமாகாது. இது மட்டுமின்றி, உடல் எடையை குறைக்கும் மருந்துகள் சில சமயங்களில் மிக வேகமான எடை இழப்பை ஏற்படுத்துகின்றன. இதனால், உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும், வாந்தி, குமட்டல், வாய்வு, பசியின்மை போன்ற பிரச்சனைகளும் ஆகியவையும் அடங்கும். பக்க விளைவுகளில் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, தூக்கமின்மை, முடி உதிர்தல் என இதன் பட்டியல் நீள்கிறது.

இதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் தேசிய நிறுவனமான ICMR வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை மக்களை எச்சரித்துள்ளது. ஒவ்வொரு வாரமும் அரை கிலோ எடையை குறைத்தால் போதுமானது மற்றும் பாதுகாப்பானது என்று ICMR கூறுகிறது. ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது. இயற்கையாக உடல் எடையை குறைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உடல் பருமனை குறைக்க எடுத்துக் கொள்ளும் வெயிட் லாஸ் மாத்திரைகளின் பக்க விளைவுகள்:

அடிவயிற்று முடக்கம்
பலவீனமான குடல் தசைகள்
விரைவான எடை இழப்பு
உடலில் ஊட்டச்சத்து குறைபாடு
வாந்தி எடுப்பது போன்ற உணர்வு அடிக்கடி ஏற்படுதல்

ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க  ஐசிஎம்ஆர் அளித்துள்ள பரிந்துரைகள்

1. ஒரு வாரத்தில் அரை கிலோ எடை குறைவது பாதுகாப்பானது
2. சத்தான உணவை உண்ணுங்கள்
3. அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்
4. உலர் பழங்கள், தயிர், பருவகால பழங்கள் எடுத்துக் கொள்ளவும்
5. ஒரு நாளைக்கு 1 ஆயிரம் கலோரிகளுக்கு குறைவாக உட்கொள்ள வேண்டாம்
6. பச்சை காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

எடை அதிகரிக்காமல் இருக்கும் வகையில் வாழ்க்கை முறையை மாற்றுவது எப்படி?

1. புகைபிடிப்பதை நிறுத்துதல்
2. சரியான நேரத்தில் தூங்குதல்
3. 8 மணி நேரம்  ஆழ்ந்த தூக்கம்
4. பிபி-சுகர் அளவை பரிசோதித்து கட்டுப்படுத்துதல்
5. உடற்பயிற்சி
6. தியானம் செய்யுங்கள்

உடல் பருமனுக்கான காரணம்

மோசமான வாழ்க்கை முறை
துரித உணவு
கார்பனேற்றப்பட்ட பானங்கள்
மன அழுத்தம்
உடற்பயிற்சி இல்லாமை
மருந்துகளின் பக்க விளைவுகள்
தூக்கம் இல்லாமை

மேலும் படிக்க | டூத்ப்ரஷ் பயன்படுத்தாமலே பற்கள் வெண்மையாக இருக்க சில வழிகள்!

உடல் பருமனை குறைக்கும் சில இயற்கை வழிகள்

காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிக்கவும்
சுரைக்காய் சூப்-சாறு எடுத்துக் கொள்ளவும்
இரவு உணவிற்கு முன் சாலட் சாப்பிடுங்கள்
இரவில் ரொட்டி மற்றும் சாதம் சாப்பிடுவதை தவிர்க்கவும்
7 மணிக்கு முன் இரவு உணவு சாப்பிடுங்கள்
சாப்பிட்ட 1 மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்கவும்

எடையை கட்டுபடுத்த சிறந்த வழிகள்

லிஃப்டுக்கு பதிலாக படிக்கட்டுகளில் செல்லுங்கள்
அடிக்கடி காபி, டீ குடிக்க வேண்டாம்
பசி எடுத்தால் முதலில் தண்ணீர் குடிக்கவும்
உண்பதற்கும் உறங்குவதற்கும் இடையே 3 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்

உடல் பருமனை குறைக்க சில டிப்ஸ்

இஞ்சி-எலுமிச்சை தேநீர் குடிக்கவும்.  இஞ்சி கொழுப்பை கட்டுப்படுத்துகிறது
இரவில் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் திரிபலாவை எடுத்துக் கொள்ளலாம்.
திரிபலா செரிமானத்தை மேம்படுத்துகிறது
3-6 கிராம் இலவங்கப்பட்டை எடுத்துக் கொண்டு 200 கிராம் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இதில் 1 தேக்கரண்டி தேன் கலந்து குடிக்கவும்.

மேலும் படிக்க | சாப்பிட்ட பிறகு பல் துலக்கலாமா? மருத்துவரின் அறிவுரை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News