எடை குறைப்பது ரொம்ப ஈசி: பச்சை பயறை இப்படி சாப்பிடுங்க போதும்

Weight Loss Tips: சில எளிய இயற்கையான வழிகளிலேயே உடல் எடையை குறைக்கலாம் என்பதை பலர் மறந்துவிடுகின்றனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 3, 2023, 11:15 AM IST
  • உடல் எடையை குறைக்க பச்சை பயறு இட்லி செய்து சாப்பிடலாம்.
  • இதற்கு முதலில் பச்சை பயறை ஊற வைத்து அரைக்க வேண்டும்.
  • பிறகு மாவில் உங்களுக்கு விருப்பமான காய்கறிகள், மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும்.
எடை குறைப்பது ரொம்ப ஈசி: பச்சை பயறை இப்படி சாப்பிடுங்க போதும் title=

Weight Loss Tips: இந்நாட்களில் உடல் எடையை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.  இதற்காக, பலர் ஜிம் சென்று பல வகையான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், சில எளிய இயற்கையான வழிகளிலேயே உடல் எடையை குறைக்கலாம் என்பதை பலர் மறந்துவிடுகின்றனர். உடல் எடையை குறைக்க நீங்கள் எந்த ஆடம்பரமான உணவு திட்டத்தையும் பின்பற்ற வேண்டியதில்லை. வீட்டிலேயே தயாரிக்கப்படும் எளிய உணவுகளை உட்கொண்டு உடல் எடையை எளிதில் குறைக்கலாம். 

நாம் அன்றாடம் உட்கொள்ளும் சில உணவுகளே எடை இழப்புக்கு (Weight Loss) உதவும். இந்த உணவுகளில் பாசிப்பயறும் ஒன்று. ஆம், உடல் எடையை குறைப்பதற்கு பாசிப்பயறு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் புரதச்சத்து அதிகம் உள்ளதால், இது தசை வளர்ச்சிக்கு உதவுவதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இதில் நார்ச்சத்தும் இருப்பதால் இது வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இதை சாப்பிடுவதால், மீண்டும் மீண்டும் பசி ஏற்படாது, இது எடையை குறைக்க உதவுகிறது. நீங்கள் அதிகரித்து வரும் உங்கள் எடையை கட்டுப்படுத்த விரும்பினால், கண்டிப்பாக உங்கள் உணவில் பச்சைபயறை சேர்த்துக்கொள்ள வேண்டும். 

எடை இழப்புக்கு பயத்தம் பருப்பை எந்த வழிகளில் உட்கொள்வது என இங்கே காணலாம்

பயத்தம் பருப்பு அடை 

பயத்தம் பருப்பு (Moong Dal) அடை உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவாக உள்ளது. வட மாநிலங்களில் இது மூங் தால் சில்லா என்ற பெயரில் மிக பிரலமாக உள்ளது. இதை செய்ய, முதலில் பயத்தம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அரைக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், பச்சை கொத்தமல்லி, மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும். இப்போது இந்த மாவைக் கொண்டு அடைகளை தயார் செய்யவும். இதை சாப்பிடுவதன் மூலம், உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும். மேலும் தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளல் தவிர்க்கப்படும். 

மேலும் படிக்க | ’இந்த’ பிரச்சனை இருந்தால், கண்டிப்பாக மது அருந்தக்கூடாது! தவறினால் மரண ஆபத்து அதிகம்

பச்சை பயறு கிச்சடி

பச்சைபயறு கிச்சடி உடல் எடையை குறைக்க ஒரு சிறந்த வழியாகும். இதை உண்பதன் மூலம் போதிய ஊட்டச்சத்து கிடைப்பதுடன் எடையும் கட்டுப்படும். இதை செய்ய பயத்தம் பருப்பு மற்றும் அரிசி தேவைப்படும். விருப்பத்திற்கு ஏற்ப அதில் பச்சைக் காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். பொங்சல் செய்வது போல, அரிசி, பருப்பு, காய்கறிகளை உப்பு, சேசான மசாலா போட்டு நன்றாக, குழைய வேக வைக்க வேண்டும். பின் இதில் நெய் விட்டு பரிமாறவும். இந்த கிச்சடியை மதிய உணவு அல்லது இரவு உணவில் சாப்பிடலாம்.

எடை இழப்புக்கு முளை கட்டிய பயறு

பருப்பு முளைகளை உட்கொள்வது எடை இழப்புக்கு மிகவும் நன்மை பயக்கும். காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துவதோடு எடையைக் குறைக்கவும் உதவும். இதற்கு, முளைத்த பச்சை பயறில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரி, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். இது ஒரு சுவையான மற்றும் புரதச்சத்து நிறைந்த காலை உணவாக இருக்கும். 

பச்சை பயறு சூப்

அதிகரிக்கும் உடல் எடையை குறைக்க விரும்பினால், பச்சை பயறு சூப்பை உட்கொள்ளலாம். சுவையாக இருப்பதோடு இது செய்வதற்கும் மிக எளிதானது. இதற்கு பூண்டு, இஞ்சி, சீரகம், மசாலா, பெருங்காயம், உப்பு சேர்த்து ஊறவைத்த பச்சை பயறையும் சேர்த்து கொதிக்கவிடவும். பின் இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் பொடித்த கருப்பட்டியைச் சேர்த்து சாப்பிடவும். இதனை தொடர்ந்து உட்கொள்வது தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைக்கவும் உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவும்.

பச்சை பயறு இட்லி

உடல் எடையை குறைக்க பச்சை பயறு இட்லி செய்து சாப்பிடலாம். இதற்கு முதலில் பச்சை பயறை ஊற வைத்து அரைக்க வேண்டும். பிறகு மாவில் உங்களுக்கு விருப்பமான காய்கறிகள், மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும். இப்போது இந்த மாவு கொண்டு இட்லி தயார் செய்யவும். காலை உணவாக இந்த பச்சை பயறு இட்லி சாப்பிடலாம். இது அடிகக்டி பசி எடுப்பதைத் தடுக்கும், இது எடையைக் குறைக்கவும் உதவும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பெண்களைவிட ஆண்களுக்கு கருவுறுதல் தன்மை அதிக வயதுக்கு இருக்கும்! இது உண்மையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News