Easy Air Tips: கொஞ்சம் உசாரா இருங்க! வெளியே மட்டுமில்லை வீட்டுக்குள்ளேயும் காற்று மாசுபாடு

Air Pollution Effects: காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. காற்று மாசுபாட்டால் பல நோய்கள் வரக் காரணமாக இருக்கிறது. சில எளிய உதவிக்குறிப்புகளை பின்பற்றி வீட்டிலுள்ள காற்று மாசுபாட்டின் அபாயத்தை குறைக்கலாம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 11, 2023, 12:43 PM IST
  • வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசங்களை அணியுங்கள்.
  • எளிய வழிகளை பின்பற்றி வீட்டிலுள்ள காற்று மாசுபாட்டின் அபாயத்தை குறைக்கலாம்.
  • காற்று மாசுபாட்டால் இதயம் மற்றும் நுரையீரல் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
Easy Air Tips: கொஞ்சம் உசாரா இருங்க! வெளியே மட்டுமில்லை வீட்டுக்குள்ளேயும் காற்று மாசுபாடு title=

Air Pollution Health Tips: காற்றின் தரம் குளிர்காலத்தில் மிகவும் மோசமாகிறது. இது சுவாச நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, இதயம் மற்றும் நுரையீரல் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசங்களை அணியுங்கள். மேலும், மாசுபாட்டின் விளைவுகளைத் தவிர்க்க, தினமும் காலையில் பிராணயாமம் மற்றும் உடற்பயிற்சிகளையும் செய்யுங்கள்.

பண்டிகை காலம் என்பதால் பொருட்கள் வாங்க வெளியே செல்லும்போது நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தாலும், அதேநேரத்தில் வீட்டில் உள்ள காற்று மாசுபாட்டை பெரும்பாலும் நாம் கண்டுகொள்வதில்லை அல்லது அதில் கவனம் செலுத்துவதில்லை.

நிபுணர்களின் கூற்றுப்படி, வீட்டிலும் காற்று மாசுபடும் (Air Pollution) அபாயம் உள்ளது. இதற்காக, வீட்டின் உள்ளேயும் வெளியேயும் காற்று மாசுபடுவதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். கீழே கொடுக்கப்பட்டு உள்ள உதவிக்குறிப்புகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் வீட்டிலுள்ள காற்று மாசுபாட்டின் அபாயத்தை குறைக்கலாம்.

மேலும் படிக்க - விஷமாக மாறும் காற்று.. சுவாசிப்பது கூட சிரமமாக உள்ளது.. N95 முகமூடி அணிய அறிவுரை!

காற்றோட்டம் இருக்க வேண்டும்

வீட்டில் சரியான காற்றோட்டம் (Ventilation) இருக்க வேண்டும். காற்றோட்டம் சரியாக இல்லாவிட்டால், காற்றின் இயக்கம் சரியாக இருப்பதில்லை. குறுகிய மற்றும் தடைபட்ட காற்றோட்டம் இருக்கும் வீட்டில் காற்றின் சுழற்சி இருக்காது. தடைபட்ட காற்றோட்டம் காரணமாக, மாசுபட்ட காற்றில் 60 சதவீதம் வீட்டிலேயே தங்கிவிடுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. வீட்டிலுள்ள காற்றை சுத்தம் செய்ய காற்று சுத்திகரிப்பு கருவிகளைப் பயன்படுத்துவது நல்லது.

வீட்டினுள் புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்.

வீட்டில் காற்று மாசுபாடு அதிகரிப்பதற்கு புகைபிடிப்பதும் (Smoking) முக்கிய காரணம். மேலும் வீட்டில் மெழுகுவர்த்திகள் அல்லது ரசாயன பொருட்களை எரிப்பதால் காற்று மாசுபடும் அபாயம் அதிகரிக்கிறது.

வீட்டில் செடிகளை வளர்க்கவும்

சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதில் மரங்களும் தாவரங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை காற்றை சுத்திகரிக்கின்றன. ஆகையால் வீட்டில் செடிகளை வளர்ப்பது மிக நல்லது. செடிகள் விஷம் மற்றும் அசுத்தங்களை அழிக்கின்றன. மேலும், மாசுபட்ட காற்றினால் ஏற்படும் கண் எரிச்சலையும் இவை போக்குகின்றன. கூடுதலாக, இது மன அழுத்தத்தையும் குறைக்கிறது. சுவாச நோய்களின் அபாயமும் குறைகிறது.

மேலும் படிக்க - சிறுநீரகத்தை சுத்தப்படுத்தி பலப்படுத்தும் 'சூப்பர்' உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க

கார்பெட் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும்

கார்பெட்டுகள் தூசி மற்றும் துகள்களின் இருப்பிடமாக விளங்குகிறது. கம்பளத்திலிருந்து வரும் தூசி ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் நோய் மற்றும் கபம் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதற்காக, குளிர்காலத்தில் கம்பளத்தைப் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்வது நல்லது அல்லது நல்ல தரமான விலையுயர்ந்த கம்பளத்தைப் பயன்படுத்துங்கள்.

எக்ஸாஸ்ட் ஃபேன்-ஐ பயன்படுத்துங்கள்

சமையலறை மற்றும் குளியல் அறையில், ஈரப்பதமான காற்று காரணமாக பூஞ்சை ஆபத்து அதிகரிக்கிறது. பூஞ்சை மாசின் சிறிய துகள்களை உள்வாங்கி அவற்றை உடலுக்குள் கொண்டு செல்கிறது. இதனால் சளி, இருமல் மற்றும் பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். பூஞ்சையை தவிர்க்க வீட்டின் சமையலறை மற்றும் குளியலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன்  (Exhaust Fans) பயன்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மற்றும் பரிந்துரைகள் பொதுவான தகவல்களுக்கானவை. எந்தவொரு மருத்துவர் அல்லது மருத்துவ நிபுணரின் ஆலோசனையாக இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம். நோய் அல்லது நோய்த்தொற்றின் அறிகுறிகள் தென்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.

மேலும் படிக்க - டேஸ்டா இருந்தாலும் டேஞ்சராகும் பச்சை பட்டாணி! சிறுநீரக கல், மூட்டு வலிக்கு காரணமாகும் காய்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News