நம்மில் பலருக்கு வயது ஏற ஏற முடி கொட்டிக்கொண்டே போகும். அதிலும், சிலருக்கு மன அழுத்தம் அதிகமாகும் போது, தண்ணீர் மாற்றி குளிக்கும் போது என பல சமயங்களில் முடி கொட்டும். ஒரு நாளைக்கு 100 முடி கொட்டுவதுதான் நார்மல் என்கின்றனர் மருத்துவர்கள். அதனால், உங்களுக்கு அதீத முடி உதிர்வு இருந்தால் உடனடியாக சில வீட்டு வைத்தியங்களை செய்து பார்க்கலாம், அல்லது மருத்துவரை அனுகலாம். முடி உதிர்வை தடுக்க இங்கே சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. உபயோகப் படுத்திக்கொள்ளுங்கள்.
1.சுட சுட எண்ணெய் மசாஜ்:
வாராத்தில் அனைத்து நாட்களும் தலைக்கு குளிப்பது கண்டிப்பாக முடிக்கு நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள். அதே போல வாரத்தில் அனைத்து நாட்களூம் எண்ணெய் தேய்ப்பதும் நல்லதல்ல. எனவே, இவை இரண்டும் சரிசமமான நிலையில் இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். தலைக்கு குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெய், அல்லது நீங்கள் தலைக்கு தேய்க்கும் எண்ணெய்யை சுட வைத்து கொஞ்சம் ஆரவைத்து பஞ்சை எடுத்து ஆங்காங்கே ஒற்றி எடுத்து நன்கு மசாஜ் செய்யுங்கள். இதை, உங்களுக்கு நீங்களே செய்து கொள்வதை விட பிறர் செய்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.
2.வெங்காய சாறு:
வெங்காயத்தில் அதிக சல்ஃபர் இருப்பதால், நம் முடி உதிர்வை உடனடியாக நிறுத்தும் திறன் அதற்கு உள்ளது. வெங்காயத்தில் , கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி இருக்கிறது. இதனால் ஒரு முறை வெங்காயம் தேய்த்து குளித்தால் நமக்கு பொடுகு வர பல நாட்கள் ஆகும் என்கின்றனர், சில சிகை அலங்கார நிபுணர்கள். சில சமயங்களில் பொடுகு தொல்லை கூட முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். அதற்காகத்தான் வெங்காயச்சாற்றினை நாம் முடி உதிர்வை நிறுத்த பயன்படுத்துகிறோம்.
3.பீட்ரூட்:
நம் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு குறைவாக இருந்தால் கூட நமக்கு முடி அதிகமாக உதிருமாம். இதைத்தடுக்க பீட்ரூட்டை பயன்படுத்தலாம். அதிக ஊட்ட்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் பீட்ரூட்டும் ஒன்று. எனவே உங்கள் தினசரி உணவில் பீட்ரூட்டினை சேர்த்துக்கொள்ளலாம்.
4.கிரீன் டீ:
உடலை குறைக்க மட்டுமல்ல முடி உதிர்வை குறைக்கவும் கிரீன் டீ பயன்படுமாம். கிரீன் டீ குடிப்பதால் நம் மெட்டபாலிசம் அதிகரித்து முடி வளர வழிவகை செய்யும் என்கின்றனர் உபயோகித்து பயன்பெற்றவர்கள். இதனால், நம் முடி உதிர்வு குறைது முடி நன்றாக வளருமாம்.
5. தியானம்:
சமயங்களில் நமக்கு மன அமைதி இல்லாமல் இருந்தால் கூட முடி உதிர்வு ஏற்படும். இதனால் மன அழுத்தம் ஏற்படும், இது முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். அதனால், கண்டிப்பாக மனதை அமைதி பட்டுத்த நீங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் . தியானம் செய்வது இதற்கு ஏற்ற வழிமுறை என நம்பப்படுகிறது. அமைதியாக நமக்குள் நாமே தியான நிலையில் பேசிக்கொள்வது மன அழுத்தத்தை குறைக்கும்.
செய்யக்கூடாதவை:
சிலர், தங்களது முடியை பாடாய் படுத்துவதனால் கூட முடிக்கொட்டலாம். குறிப்பாக சில இளம் பெண்கள் முடியை அடிக்கடி ஸ்ட்ரைட்டனிங் செய்வது மற்றும் ட்ரையர் உபயோகிப்பதனால் முடி விணாய் போக வாய்ப்புகள் உள்ளதாம். இது, முடியின் மென்மையையும் கெடுக்குமாம். அதனால், எப்போதாவது இது போன்ற வேலைகளில் முடியில் செய்யலாம் என்கின்றனர் தோல் நோய் மருத்துவர்கள்.
தூங்கும் போது கொண்டை போட்டுக்கொண்டு அல்லது முடியை விரித்துக்கொண்டு தூங்குவது முடியை பயங்கரமாக பாதிக்கும். எனவே முடியை பின்னல் போட்டு தூங்கலாம். தலைக்கு குளித்து விட்டு வந்தவுடன் சிக்கு எடுத்தால் முடி குறைவாக உதிரும். தலையில் எண்ணெய் வைத்து பின்னல் போட்டால் தலையில் உள்ள ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர வழிவகை செய்யுமாம்.
இதை கண்டிப்பாக பின்பற்றி வந்தால், உடனடியாக கைமேல் பலன் கிடைக்குமாம்.
மேலும் படிக்க | அசின் போல பளபளப்பான சருமம் வேண்டுமா..? அவரே கூறும் டிப்ஸ் இதோ..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ