உடலின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமானது இரத்த ஓட்டம். இருதய நோய் என்றால் என்ன என்பது பற்றி நமக்கு துல்லியமாக தெரிந்திருக்காது. அதனை கார்டியோ வாஸ்குலர் டிஸீஸ் என்பார்கள். சுவாசத்திற்கும், இருதயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைப்பழக்கம், மன அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றாலும் இருதயத்துக்குப் பிரச்னை ஏற்படுகிறது. இருதய நோய்களைப் பொருத்தவரை ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளும் இருப்பதில்லை. நோய் அதிகமாகும்போது கால்களில் வலி, மரத்துப் போதல், கால் வீக்கம், கைகளில் வலி போன்றவை ஏற்படக்கூடும்.
இருதய நோயிலிருந்து எப்படி பாதுகாப்பது என்று பார்போம்:-
* ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு உண்ணுதல், குறிப்பாக பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும்
* தினமும், முறையாக உடற்பயிற்சி செய்வது இருதய நோயின் ஆபத்தை தவிர்க்கும், உடற்பயிற்சியோடு ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரியான உடல் எடையை நிர்வகித்தல் போன்றவை நம் இருதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
* இருதய நோய் தாக்குவதற்கு மிக முக்கிய காரணி புகைபிடிப்பது மற்றும் புகையிலை மெல்லுவதாகும். இருதய நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள புகையிலையின் பக்கமே போகாமல் இருக்க வேண்டும்.
* மாமிச உணவுகள், பால் பொருட்கள், தேங்காய் மற்றும் பனை எண்ணெய்ப் பொருட்கள் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும்.
* வயது வந்த பெரியவர்களுக்கு பெரும்பாலும் உடல் எடை அதிகரிப்பது தசைநார்களைவிட கொழுப்பே ஆகும். இந்த அதிக கொழுப்பு எடை இருதய நோய், உயர் இரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு நம்மை இட்டுச் செல்லும். எனவே உடல் எடையை சரியாக பாதுகாக்க வேண்டும்.
* இருதய நோய் உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரை எடுத்து கொள்ளவேண்டும். மேலும் மருத்துவரின் பரிந்துரை படி மருந்துகளை எடுத்து கொள்ளவேண்டும்.