நரை முடிக்கு இயற்க்கை வீட்டு வைத்தியம்: முடி கருப்பு நிறத்தில் இருந்து பழுப்பு, சிவப்பு, பொன்னிறம் என எப்படி இருந்தாலும் காலப்போக்கில் சாம்பல், வெள்ளை அல்லது வெள்ளி நிறமாக மாறுவது இயல்பானது. ஆனால், சிலருக்கு இளம் வயதிலேயே இந்த நரை முடி ஏற்பட்டு விடுகிறது. அதுவும் குறிப்பாக 20 முதல் 30 வயதிற்குள் சிலரின் தலைமுடி நரைத்து விடுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்த நரை முடி பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தவகையில் இங்கு நாம் ஸ்பெஷல் எண்ணெயை மிக எளிதாக தயாரித்து நரை முடி இருக்கும் இடத்தில் தடவலாம். இந்த எண்ணெயால் முடி இயற்கையாகவே கருப்பாக மாற ஆரம்பிக்கும். இது தவிர, இந்த எண்ணெய் வெள்ளை முடியை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுவதில் நல்ல விளைவைக் காட்டுகிறது.
கூந்தல் நரைப்பதற்கு இதுவே முக்கிய காரணம்
இயற்கையாகவே உடலில் மெலனின் அளவு குறையும் போது அது கூந்தலிலும் பிரதிபலிக்கும். கருமையான கூந்தலுக்கு நிறத்தைக் கொடுப்பது இந்த மெலனின் தான். இந்த மெலனின் உடலில் குறையும் போது நமது கூந்தலின் நிறம் மாறுகிறது. இது நரைமுடிக்கு முக்கிய காரணமாகும்.
மேலும் படிக்க | கட்டுமஸ்தான உடல் வேண்டுமா? புரதச்சத்து அதிகம் உள்ள இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்..!
நரை முடியை கருமையாக்க எண்ணெய் | Oil To Darken White Hair
நரைத்த தலைமுடியை இயற்கையான முறையில் கருப்பாக்க இந்த எண்ணெயை நீங்கள் தயார் செய்யலாம். இந்த எண்ணெய் தயாரிக்க, கடுகு எண்ணெய், கலோஞ்சி, ஆளி விதை, சீரகம் மற்றும் கறிவேப்பிலை தேவைப்படும். எண்ணெய் தயாரிக்க, முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைக்கவும். இப்போது இந்த தண்ணீரில் கறிவேப்பிலையைப் போடவும், மேலும் ஒரு துண்டு கற்றாழையைப் போடவும். இப்போது ஆளி விதைகளை ஒரு ஸ்பூன் நிரப்பி, சீரகம் சேர்க்கவும். தண்ணீர் பாதியாக வந்ததும் அதில் ஒரு கப் கடுகு எண்ணெய் சேர்த்து சிறிது நேரம் வெந்ததும் ஒரு குப்பியில் நிரப்பவும். இந்த எண்ணெயை வீட்டில் ஒரு வாரம் வைத்திருங்கள், பிறகு உங்கள் எண்ணெய் பயன்படுத்த தயாராக இருக்கும். இந்த எண்ணெயை ஒவ்வொரு இரண்டாவது-மூன்றாவது நாளுக்கு ஒருமுறை தலைமுடியில் தடவலாம்.
நரை முடிக்கு இந்த குறிப்புகளும் வேலை செய்யும்
நரை முடியைப் போக்க கறிவேப்பிலையைப் பயன்படுத்தலாம். 2 ஸ்பூன் நெல்லிக்காய் பொடியில் 2 ஸ்பூன் பிரம்மி பொடியை கலந்து ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு தண்ணீர் கலந்து பேஸ்ட் செய்து, தலைமுடியில் சுமார் அரை மணி நேரம் வைத்திருந்து கழுவவும். முடி கருப்பாக மாற ஆரம்பிக்கும்.
தேங்காய் எண்ணெய் வெள்ளை முடி பிரச்சனையில் இருந்து விடுபட ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும். தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து சூடாக்கவும். முடியைக் கழுவுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன், இந்த எண்ணெயைத் தடவி, தலையில் மசாஜ் செய்து, தலைமுடியில் ஊற வைக்கவும்.
முடியை கருமையாக்க பிளாக் டீயையும் பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் கருப்பு தேநீர் கலக்கவும். இந்த தேநீரை வேர் முதல் முடியின் முனை வரை தடவி சுமார் 2 மணி நேரம் ஊற வைத்திருக்கவும். பிளாக் டீயை அரைத்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து 30 முதல் 40 நிமிடங்கள் வரை தலைமுடியில் ஊற வைத்த பின் கழுவவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடலின் நச்சுக்களை வெளியேற்றி மன அழுத்தத்தை போக்கும் ‘சங்கு பூ’ டீ..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ