கிறிஸ்துமஸ் நெருங்கிவிட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பல்வேறு வகையான இனிப்புகள் செய்தாலும், கேக் என்பது கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று. கட்டாயம் கேக்கை எல்லோர் வீட்டிலும் செய்து விடுவார்கள், அப்படி செய்யாமல் இருப்பவர்களுக்கு இதோ எவ்வாறு செய்யலாம் என்பதற்கான வழிமுறையை தருகிறோம்.
தேவையானப் பொருட்கள்:
மைதா மாவு -300 கிராம்
பேக்கிங் பவுடர் -3 டீஸ்பூன்
சோடா உப்பு -1/2 டீஸ்பூன்
வெண்ணெய் -200 கிராம்
பொடித்த சர்க்கரை -250 கிராம்
முந்திரிப்பருப்பு -50 கிராம்
உலர்ந்த திராட்சை -50 கிராம்
செர்ரி -50 கிராம்
முட்டை -3
பிஸ்தா பருப்பு -50 கிராம்
சுல்தானாஸ் -50 கிராம்
கேக் மசாலா -1 டீஸ்பூன்
கோக்கோ -1 டீஸ்பூன்
பால் -100 மில்லி
வென்னிலா எஸ்சென்ஸ் -சில துளிகள்
செய்முறை :
* மைதா மாவு பேக்கிங் பவுடர் சோடா உப்பு கேக் மசாலா இவைகளை ஒன்றாக கலந்து மூன்று முறை சலிக்கவும்.
* பொடித்த சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழைக்கவும். முட்டைகளை உடைத்து ஊற்றி நுரைக்க அடிக்கவும்.
* குழைத்த கலவையுடன் அடித்த முட்டை சேர்த்து நன்கு கலக்கவும்.
* மைதா மாவில் ஊற்றி எல்லாம் ஒன்று சேரும்படி கலக்கவும்.
* இவற்றில் கோக்கோ பால் காரமல் சர்க்கரை எஸன்ஸ் சேர்த்து கலக்கவும்.
* கடைசியாக மாவு தூவிய செர்ரி பழங்கள் உலர்ந்த திராட்சை சுல்தானாஸ் முந்திரிப்பருப்பு சேர்த்து பேக்கிங் ட்ரெயில் ஊற்றி ஒவனில் வைத்து பேக் செய்யவும்.
* வெந்ததும்வெளியில் எடுத்து விரும்பியபடி அல்ங்காரம் செய்யலாம்.