நம்மில் பலருக்கு நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த ஆசையை அடைய பலர், நமது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும், மன நலனை பாதுகாக்க வேண்டும் என்று பல விதிமுறைகள் உள்ளதாக கருதுகின்ற்னர். உடற்பயிற்சி, டயட் போன்றவை நல்ல ஆரோக்கியத்தின் இரு தூண்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இவை மட்டுமே நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அடித்தளமாக் அமையாது என்பது பல மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
நீண்ட நாட்கள் ஆரோக்கியமக வாழ்வதற்கு மகிழ்ச்சி என்ற ஒன்றும் அவசியமாக உள்ளது. அதிக ஆயுளுடன் இருப்பவர்கள் ப்ளூ சோன் பகுதியில் (Blue Zone) வாழ்வதாக கூறப்படுகிறது. இவர்களிடையே ஒரு பிரபல நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதிலிருந்து கிடைத்துள்ள தகவல்களின் படி, ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ்வதற்கான டிப்ஸ்களை வர்கள் வெளியிட்டுள்ளனர். அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
1.மன அழுத்தம் இல்லா வாழ்க்கை:
நாள்பட்ட மன அழுத்தத்தினால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதனால், நீண்ட நாட்கள் வாழ உங்கள் மன நலனில் அக்கறை எடுத்துக்கொள்வது முக்கியம். குறிப்பாக கவலை, மன சோர்வு, மன அழுத்தம் ஆகியவை ஏற்படும் சமயங்களில் அதை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ப்ளூ சோன் ஆய்வின்படி, நீண்ட நாட்கள் வாழ்பவர்கள் வேகமான வாழ்க்கை சூழல் இருக்கும் நகரங்களில் வாழ்வோரை விட, அதை விட்டு தள்ளியிருப்போர் நிம்மதியாக வாழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை நீண்ட நாள் வாழ்வதற்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | கருவுறுதலை அதிகரிக்கும் கீட்டோ டயட்! பெண்களுக்கு ஆறுதல் அளிக்குமா இந்த உணவுமுறை?
2.சமூக வாழ்க்கை:
‘ஊருடன் ஒத்து வாழ்’ என்ற பழமொழி ஒன்று உள்ளது. இதுதான் மேற்கூறிய ப்ளூ சோன் ஆய்வறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. குடும்பம், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவருடனும் நாம் நேரம் செலவிட கற்றுக்கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. நமக்கென்று சிலர் இருக்கின்றனர் என்ற எண்ணமே நம்மை பாசிடிவான எண்ணங்களுக்கு ஆட்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்ரனர். இது, நமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுமாம்.
3.பானங்கள் அருந்துவது..
இங்கே குறிப்பிடப்படும் பானம், ஆல்கஹால் அல்ல. ப்ளூ சோன் பகுதியில் வாழும் மக்கள் இரவு உணவுக்கு முன்பாகவோ அல்லது அதன் பிறகோ நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து வைன் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனராம். இது, பிறருடன் பழகுவதற்கான ஒரு வாடிக்கை நிகழ்வாக அங்கு நடந்து வருகிறதாம். இதை மது பிரியர்கள் சிலரும் செய்வதுண்டு. ஆனால், மது என்றும் உங்களது ஆயுளை நீட்டிக்காது. ஆதலால் சிறிதளவு வைன் அல்லது பழ பானங்களை இரவு உணவிற்கு முன்பாகவோ அல்லது அதன் பிறகோ அருந்தலாம். இது உங்கள் மனதை சாந்தப்படுத்தும் ஒரு நடவடிக்கை என சில மன நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
4.மகிழ்ச்சியை தரும் விஷயங்களை தேடுங்கள்..
தினசரி ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கும் நம் வாழ்க்கையில் நமக்கே தெரியாமல் நமக்கு பிடித்த விஷயங்களை மறக்கடிக்க செய்து விடும். இதனால் வாழ்வில் பல விஷயங்கள் போர் அடித்து விடும். இத்தனையையும் கடந்த உங்களுக்கு எது மகிழ்ச்சியை தரும் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். நமக்கு பிடித்த விஷயங்களை செய்யும் போது வாழ்வே புதிதாக மாறும் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள். இது, வாழ்வில் நாம் நன்றியுணர்வை மறக்காமல் இருக்க உதவுமாம். இது பாசிடிவான எண்ணங்களையும் மாற்றங்களையும் நம் வாழ்வில் ஏற்படுத்துமாம்.
மேலும் படிக்க | LDL கொலஸ்ட்ராலை உடனடியாக எகிற வைக்கும் ‘10’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ