ஆரோக்கியமற்ற குடலால் ஏற்படும் மோசமான பிரச்சனைகள்

ஆரோக்கியமற்ற குடல்களால் செரிமானம் மோசமடைகிறது. இதற்கு என்ன காரணம் என்னவென்றால் குடலுக்கு உகந்த உணவுகளை நாம் சாப்பிடவில்லை என்று பொருள். தொடர்ந்து இவ்வாறு செய்யும்போது மிக தீவிர பாதிப்புகள் ஏற்படத் தொடங்கும்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 31, 2023, 03:02 PM IST
  • குடல் மோசமடைய காரணங்கள்
  • வைரஸ் பாக்டீரியா தொற்றுகள்
  • ஆரோக்கியமான உணவுகள அவசியம்
ஆரோக்கியமற்ற குடலால் ஏற்படும் மோசமான பிரச்சனைகள் title=

குடல்கள் நம் உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். அதன் வேலை உணவை ஜீரணிப்பது மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவது. நச்சுகள் அகற்றி வெளியேற்றுவது. உங்கள் குடலின் செயல்பாடு சரியாக இல்லை என்றால், வயிற்றில் பிரச்சனை நிச்சயம் ஏற்படும்.  இதனால் குடல் பாக்டீரியா, வைரஸ் தொற்று ஆகியவற்றால் பாதிக்கப்படும். ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதே இவற்றுக்கெல்லாம் ஆரம்ப புள்ளி. இது செரிமான பிரச்சனையில் இருந்து ஆரம்பிக்கும். அங்கிருந்து கழிவுகளை வெளியேற்றுவதில் தொடங்கி, தொடர்ச்சியாக அடுத்தடுத்த பிரச்சனைகள் வரத் தொடங்கும்.  

நீங்கள் செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மற்ற பிரச்சனைகளை தவிர்க்கவும் விரும்பினால், கண்டிப்பாக சில பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், உங்கள் ஆரோக்கியத்தில் நிறைய வேறுபாடுகள் தெரியும்.

குடல் ஆரோக்கியத்திற்கு என்ன செய்ய வேண்டும்?

மேலும் படிக்க | கோடையில் பேரிச்சம்பழம்: சாப்பிடலாமா கூடாதா? பக்க விளைவுகள் ஏற்படுமா?

1. எப்போதும் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்

குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். உங்கள் தினசரி உணவில் பாதம், முந்திரி உள்ளிட்ட கொட்டைகள், பழங்கள் மற்றும் முளைகட்டிய பயிர்கள் ஆகியவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். பழங்கள் மற்றும் பழச்சாறுகளை உட்கொண்டால், குடல் ஆரோக்கியமாக இருக்கும். தயிர் மற்றும் ஆட்டு பால் போன்ற ப்ரீபயாடிக்ஸ் மற்றும் புரோபயாடிக்ஸ் உணவுகளை குடிக்கவும். உணவில் எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களின் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்கவும்.

2. புரதத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

புரோட்டீன் நிறைந்த உணவு நம் குடலுக்கு நன்மை பயக்கும் என்று பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே புரதங்கள் உள்ளவற்றை தினமும் உட்கொள்ள வேண்டும். இதற்கு முட்டை, பன்னீர், முழு தானியங்கள், பருப்பு வகைகள், சோயாபீன்ஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம். இது குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.

3. நிலையான தினசரி வழக்கத்தைப் பின்பற்றவும்

நமது அன்றாடச் செயல்பாடுகள் சரியாக இருந்தால், குடல் நலம் மட்டுமல்ல, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சரியாக இருக்கும். உங்களின் மூன்று வேளை உணவு, உறக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றுக்கான நேரத்தை நீங்கள் நிர்ணயித்து, அதைத் தொடர்ந்து பின்பற்றுங்கள். இந்த விஷயங்களை நீங்கள் கவனித்தால், சில நாட்களில் அதன் நேர்மறையான விளைவைக் காணலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News