சுகர் லெவலை கட்டுப்படுத்த உதவும் கறிவேப்பிலை: தினமும் இப்படி சாப்பிடுங்க

Diabetes Control With Curry Leaves: நாம் தினசரி உட்கொள்ளும் சில உணவுகளின் மூலமே நிரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் அத்தகைய ஒரு எளிய உணவை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 7, 2024, 11:47 AM IST
  • கறிவேப்பிலையில் பல வைட்டமின்கள், ஆல்கலாய்டுகள் மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் உள்ளன.
  • இவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
  • சர்க்கரை நோயை கட்டுப்படுத்த கறிவேப்பிலையை சாப்பிடுவது எப்படி?
சுகர் லெவலை கட்டுப்படுத்த உதவும் கறிவேப்பிலை: தினமும் இப்படி சாப்பிடுங்க title=

Diabetes Control With Curry Leaves: இன்றைய காலகட்டத்தில் மனித இனத்தை பாடாய் படுத்தும் நோய்களில் நீரிழிவு நோய்க்கு முக்கிய இடம் உள்ளது. உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாவதால் இந்த நோய் எற்படுகின்றது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக இது பெரும்பாலும் உடலை ஆட்கொள்கிறது. மரபியல் காரணங்களாலும் நீரிழிவு நோய் நம்மை தாக்கலாம். 

ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்பது ஒரு கசப்பான உண்மையாகும். எனினும், சில கட்டுப்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்களை பின்பற்றினால் இதை கண்டிப்பாக கட்டுக்குள் வைக்க முடியும். நாம் தினசரி உட்கொள்ளும் சில உணவுகளின் மூலமே நிரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் அத்தகைய ஒரு எளிய உணவை பற்றி இந்த பதிவில் காணலாம். 

கறிவேப்பிலை

நாம் நமது சமையலில் பெரும்பாலும் அனைத்து உணவு வகைகளிலும் கறிவேப்பிலையை பயன்படுத்துகிறோம். கறிவேப்பிலை உணவுக்கு தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்தை சேர்ப்பதுடன் இது பல வித ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இது ஒரு சிறந்த மசாலா பொருளாக கருதப்படுகின்றது. ரசம், சாம்பார், சட்னி, கறிகள், தால், கூட்டு, துவையல் பொடி என கறிவேப்பிலை கொண்டு பல வித உணவுகளை செய்கிறோம். 

கால்சியம் நிறைந்த கறிவேப்பிலைக்கு ஆயுர்வேதத்திலும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதயம் தொடர்பான நோய்கள், தொற்று மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் இது உதவுகின்றது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதனுடன், இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. நீரிழிவு நோயாளிகள் இதை தினமும் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவி கிடிக்கும். 

கறிவேப்பிலையால் சுகர் நோயாளிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்:

பல சத்துக்கள் நிறைந்தது

கறிவேப்பிலையில் பல வைட்டமின்கள், ஆல்கலாய்டுகள் மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் உள்ளன. இவை  நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. 

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால்... இந்த இடங்களில் வலி இருந்தால் அலட்சியம் வேண்டாம்... உடனே செக் பண்ணுங்க...

இன்சுலின் செயல்பாடு

கறிவேப்பிலையில் உள்ள தனிமங்கள் இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகின்றன. இதில் காணப்படும் ஆன்டி-ஹைப்பர் கிளைசெமிக் பண்புகள் காரணமாக, நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகின்றது.

நார்ச்சத்து

கறிவேப்பிலையில் அதிக நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது. இதன் காரணமாக உங்கள் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், இது வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிப்பதால், தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் உட்கொள்வதும் தவிர்க்கப்படுகின்றது.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த கறிவேப்பிலையை சாப்பிடுவது எப்படி?

- கறிவேப்பிலையை பொடி அல்லது துவையலாக அரைத்து சாதத்தில் கலந்து சாப்பிடலாம். 
- கறிவேப்பிலையை பச்சையாக அரைத்து நீரில் கலந்து அவ்வப்போது இந்த கறிவேப்பிலை நீரை உட்கொள்ளலாம்.
- கறிவேப்பிலையை பச்சையாக அரைத்து மோரில் கலந்து குடிக்கலாம். 
- காலையில் எழுந்தவுடன், அதன் இலைகளை 8-10 மென்று சாப்பிடலாம்.
- அனைத்து உணவு வகைகளிலும் இதை சமைக்கும் போது சேர்க்கலாம். 

மேலும் படிக்க | அடம் பிடிக்கும் கொலஸ்ட்ராலை அடக்கி வைக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News