உடலில் கொழுப்பு அதிகம் சேர்வது என்பது ஆயுளுக்குக் கூட ஆபத்தானது. இதனை நீங்கள் கவனிக்கவில்லை என்றால் மிகப்பெரிய மருத்துவ உதவிகளை நாட வேண்டியிருக்கும். குறிப்பாக உணவில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்? எதை சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் தெரிந்து கொள்வது அவசியம். அந்தவகையில் கருப்பு காபி எடை இழப்புக்கு உதவும். ஆனால் அதை குடிக்க சரியான வழியும் தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் உணவு மற்றும் உடற்பயிற்சியையும் கவனிக்க வேண்டும்.
மேலும் படிக்க | இள நரை பிரச்சனையா? இந்த இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்
கொழுப்பை எரிக்க ப்ளாக் காபி எப்படி உதவும்?
- பிளாக் காபி என்பது பால் மற்றும் சர்க்கரை இல்லாத காபி தண்ணீரில் மட்டுமே கொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது.
- நீங்கள் ஒரு நாளைக்கு 4 கப் கருப்பு காபி குடிக்கலாம். கொழுப்பை எரிக்க கருப்பு காபி குடிக்கலாம் பால் காபி அல்ல. ஒவ்வொரு 1 கப் ப்ளாக் காபிக்குப்
பிறகும் 2 கப் தண்ணீர் குடிப்பதால் நீரிழப்பு ஏற்படாது.
- 1 கப் கருப்பு காபி தோராயமாக 17 கூடுதல் கலோரிகளை எரிக்கிறது. நீங்கள் ஒரு நாளைக்கு 2 கப் கருப்பு காபி குடித்தால் வளர்சிதை மாற்ற விகிதத்தை
அதிகரிக்கிறது.
- உடற்பயிற்சி செய்வதற்கு முன் நீங்கள் சுமார் 300 மில்லிகிராம் காஃபின் உட்கொண்டால் வொர்க்அவுட்டின் தீவிரத்தை அதிகரிக்கலாம்.
- தூக்கமின்மை, எலும்பு தேய்மானம், சிறுநீர் பிரச்சனைகள் மற்றும் பதட்டம் உள்ளவர்கள் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
- கருப்பு காபி மன அழுத்தத்தை குறைக்கிறது.
- இது கல்லீரல் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
- படுக்கைக்கு 6 மணி நேரத்திற்கு முன் காபி குடிக்கலாம் இல்லையெனில் தூக்கத்தில் சிக்கல் இருக்கலாம்.
- காபி குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். இதன் காரணமாக எடை குறைப்பு எளிதாக இருக்கும்.
மேலும் படிக்க | எப்போதாவது வெள்ளை வெங்காயம் சாப்பிட்டிருக்கிறீர்களா? இந்த பிரச்சனைகள் எல்லாம் தீரும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ