முடி உதிர்வா... இதை ஃபாலோ பண்ணுங்க

கூந்தல் உதிர்வதற்கு வீட்டு வைத்தியங்கள் பெரிதும் உதவுகின்றன.

Written by - க. விக்ரம் | Last Updated : May 12, 2022, 03:15 PM IST
  • முடி உதிர்வுக்கு வீட்டு வைத்தியம்
  • முடி உதிர்வுக்கு சிறந்த வைத்திய முறைகள்
முடி உதிர்வா... இதை ஃபாலோ பண்ணுங்க title=

ஆண்கள், பெண்கள் என இருபாலரும் கூந்தலை அதிகம் விரும்புவார்கள். ஆனால் அவர்களுக்கு கூந்தல் உதிர்வு பெரும் பிரச்னையாக அமைகிறது. அதனைத் தடுப்பதற்கு வீட்டு வைத்தியங்களே நல்ல பலனை அளிக்கின்றன. அவை பின்வருமாறு:

முட்டை:

முட்டையில் கலந்திருக்கும் புரதம் முடியை வலுப்படுத்துகிறது. இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யில் ஒரு முட்டையை ஊற்றி கிளறி, தலையில் எண்ணெய் தேய்ப்பது போல் தண்ணீரை லேசாக தடவ வேண்டும்.  பின்பு முட்டை கலவையை கூந்தலில் தடவிவிட்டு, 20 நிமிடங்கள் கழித்து குளித்தால் கூந்தல் உதிர்வு கட்டுப்படும்.

Hair Loss

 

ஆலிவ் எண்ணெய்:

வறண்ட தலைமுடியில் மீண்டும் ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை ஆலிவ் எண்ணெய்க்கு உண்டு. ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி தலையில் தடவ வேண்டும். பின்பு ‘ஷவர் கேப்’ கொண்டு தலையை மூடிவிடவும்.  45 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு தலைமுடியை அலசுவது கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த சிறந்த முறையாகும்.

மேலும் படிக்க | வெள்ளரிக்காய் சாப்பிட்ட உடனே இவற்றை சாப்பிட வேண்டாம்; ஜாக்கிரதை

கற்றாழை சாறு:

75 ஊட்டச்சத்துக்கள், 20 தாதுக்கள், 12 வைட்டமின்கள் மற்றும் 18 அமினோ அமிலங்களை கொண்டது கற்றாழை. இதில் இருக்கும் சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் தன்மையை உடையது.  கற்றாழை ஜெல்லை எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து கூந்தலில் தடவ வேண்டும்.  பிறகு 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் அலசலாம்.

Hair Loss

சந்தன எண்ணெய்:

ஆலிவ் எண்ணெய், சந்தன எண்ணெய் இரண்டையும் சிறிதளவு எடுத்து உள்ளங்கையில் நன்றாக தேய்த்துக்கொண்டு கூந்தலின் நுனியில் சிறிது தடவினால் கூந்தல் உதிர்வு கட்டுப்படும்.

வாழைப்பழம்:

இரண்டு வாழைப்பழங்கள், 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 4 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து தலைமுடியில் தடவ வேண்டும்.  வாழைப்பழத்தில் இருக்கும் சிலிகா; கூந்தல் உதிர்வை தடுத்து கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

மேலும் படிக்க | கோடையில் உடலில் உருவாகும் கட்டிகள்... போக்கும் வழிமுறைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News