இறைச்சி அதிகமாக சாப்பிட்டால் எலும்புகளுக்கு பாதிப்பா... பக்கவிளைவுகளை பாருங்க!

Side Effects Of Meat: சிவப்பு இறைச்சி, ஆரோக்கியமான எலும்புகளுக்கு அவசியம் என்றாலும், அதை அதிகமாக சாப்பிடுவது உண்மையில் எலும்புகளை சேதப்படுத்தும் என கூறப்படுகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 19, 2023, 09:08 PM IST
  • அதிகமாக உண்பதால் பக்க விளைவுகள் ஏற்படும்.
  • இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி விளக்கம் அளித்தார்.
இறைச்சி அதிகமாக சாப்பிட்டால் எலும்புகளுக்கு பாதிப்பா... பக்கவிளைவுகளை பாருங்க!  title=

Side Effects Of Meat: இறைச்சிகள், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவாகும். இருப்பினும், பல மருத்துவ வல்லுநர்கள் சிவப்பு அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சியை நீங்கள் அதிகமாக சாப்பிட்டால் அதைக் குறைக்க வேண்டும் அறிவுறுத்துகிறார்கள். 

குறிப்பாக, சில இறைச்சிகளில் கொழுப்பு ஏராளமாக உள்ளது. இது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்யலாம். மேலும் அதிக கொழுப்பைக் கொண்டிருப்பது கரோனரி இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. 

விலங்கு புரதம், குறிப்பாக சிவப்பு இறைச்சி, ஆரோக்கியமான எலும்புகளுக்கு அவசியம் என்றாலும், அதை அதிகமாக சாப்பிடுவது உண்மையில் எலும்புகளை சேதப்படுத்தும் என கூறப்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி,"உங்கள் உணவில் பால், மீன், கோழி மற்றும் தாவர அடிப்படையிலான புரதச் சத்துக்களை சேர்த்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும் ஏராளமான பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களுடன் சமப்படுத்தி உண்ண மறக்காதீர்கள்" என்கிறார். பதப்படுத்தப்பட்ட அல்லது சிவப்பு இறைச்சியின் பக்கவிளைவுகளால் உங்கள் எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவர் பகிர்ந்துகொள்கிறார். 

மேலும் படிக்க | தைராய்டு பிரச்சனை இருக்கா... ‘இந்த’ உணவுகளுக்கு ‘NO’சொல்லுங்க!

மூன்று பக்க விளைவுகள்

- அதிக புரத உணவு, குறிப்பாக இறைச்சிகளில் இருந்து வரும் புரதம், கால்சியம் இழப்பு மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

- இறைச்சியில் அதிக பாஸ்பரஸ்-கால்சியம் விகிதம் உள்ளது, இது கால்சியம் வெளியேற்றத்தை அதிகரிக்கிறது. எலும்பு கனிமமயமாக்கலை ஏற்படுத்தும்.

- விலங்கு புரதத்தை உட்கொள்வது, குறிப்பாக சிவப்பு இறைச்சி, இரத்தத்தை அமிலமாக்குகிறது மற்றும் எலும்புகளில் இருந்து கால்சியம் அகற்றப்படும்.

பீன்ஸ், பருப்பு, காய்கறிகள் மற்றும் சத்தான தானியங்கள் ஆகியவை இறைச்சி இல்லாத உணவின் அடித்தளத்தை உருவாக்குகின்றன. பல ஆரோக்கிய நன்மைகள் தாவர அடிப்படையிலான புரதங்களுடன் வருகின்றன. தாவர அடிப்படையிலான புரதங்களை அதிக அளவில் உட்கொள்வதன் மூலம் உங்களின் பணமும் சேமிப்படையும்.

ஏனெனில் அவை இறைச்சியை விட விலை குறைவாக இருக்கும். சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், குளிர்பானங்கள், வறுத்த உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் ஆகியவற்றை உட்கொள்வதைக் குறைப்பது எலும்பு ஆரோக்கியத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். 

மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் இருக்கிறதா? நரம்பியல் கோளாறாக இருக்கலாம்! ஜாக்கிரதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News