கெட்ட கொலஸ்ட்ராலை எளிதில் குறைக்கும் 8 காய்கறிகள்! மறக்காம சாப்பிடுங்க!

கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உடற்பயிற்சி செய்வதோடு சில பச்சை காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமான முறையில் கொலஸ்ட்ராலை குறைக்கலாம்.  

Written by - RK Spark | Last Updated : Feb 21, 2023, 05:59 AM IST
  • பச்சை கீரைகளை சாப்பிடுவது உடலுக்கு அதிகளவிலான நன்மைகளை வழங்குகிறது.
  • பிரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ் சாப்பிடுவது நமது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.
  • நார்சத்து நிறைந்த பீட்ரூட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கெட்ட கொலஸ்ட்ராலை எளிதில் குறைக்கும் 8 காய்கறிகள்! மறக்காம சாப்பிடுங்க! title=

வேகமான வாழ்க்கை முறையின் காரணமாக இப்போது பலரும் தங்களது உணவு பழக்கத்தையும் மாற்றிவிட்டனர், மக்கள் தங்களது வேகமான வாழ்க்கையில் துரித உணவுகளையே அதிகம் உண்ணுகின்றனர். குக்கீஸ்கள், மயோனைஸ், கிராக்கர்ஸ் மற்றும் நம்கீன்களில் போன்ற கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கக்கூடிய உணவு வகைகளை மக்கள் விரும்பி உண்ணுகின்றனர்.  இதுபோன்ற ஆரோக்கியமற்ற உணவு பொருட்களை சாப்பிடுவதால் ஒருவருக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற அபாயம் அதிகரிக்கிறது.  இது தவிர சிலர் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தே வேலை பார்க்கின்றனர், இதனால் உடலின் செயல்பாடுகள் மந்தமாகி உடலில் கெட்ட கொலஸ்டராலின் அளவு அதிகரிக்கிறது.  கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உடற்பயிற்சி செய்வதோடு சில பச்சை காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமான முறையில் கொலஸ்ட்ராலை குறைக்கலாம்.  தாவர அடிப்படையிலான உணவுகள் அல்லது காய்கறிகள் குறைந்த நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாதவை என்பதால் இதனை நீங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பலவித ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும்.  காய்கறிகளிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்து நமது உடல் கொழுப்பை உறிஞ்சுவதை தடுக்கிறது.

மேலும் படிக்க | எச்சரிக்கை! ‘இந்த’ காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்கவும்!

1) பசலைக் கீரை:

பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம், அதிலும் குறிப்பாக பச்சை கீரைகளை சாப்பிடுவது உடலுக்கு அதிகளவிலான நன்மைகளை வழங்குகிறது.  கீரை வகைகளில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கிறது மற்றும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை அகற்ற உதவுகிறது.  உங்களது சுறுசுறுப்பான வாழ்க்கை முறையுடன் கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் கெட்ட கொழுப்பின் அளவு குறைகிறது.  இந்த பசலை கீரையை நீங்கள் சமைத்தோ அல்லது பச்சையாகவோ உணவில் உங்கள் விருப்பப்படி சேர்த்துக்கொள்ளலாம்.

2. ப்ரோக்கோலி:

தற்போது பிரபலமாக காணப்படும் ப்ரோக்கோலி காய்கறியில் அதிகளவு நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.  இதனை நீங்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை நல்ல நிலையில் பராமரிக்க உதவுகிறது, இதில் உள்ள அதிக நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலை உடலில் இருந்து வெளியேற்றும் வேலையை செய்கிறது.  நீங்கள் ப்ரோக்கோலியை சமைத்தோ மற்றும் பச்சையாகவோ உண்ணலாம்.

3. கேரட்

கேரட் நார்ச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் சத்தின் சிறந்த மூலமாக உள்ளது.  கேரட் சாப்பிடுவதால் நமது உடலில் எல்டிஎல் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுக்கப்படுகிறது.  இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

4. பீட்ரூட்:

வேரில் காய்கறியான் பீட்ரூட் நார்ச்சத்து நிறைந்த உணவுப்பொருளாக உள்ளது, இது நைட்ரேட்டுகளின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது.  இது இரத்த நாளங்களை விரிவுபடுத்தவும், உடலில் இரத்த அழுத்த அளவைக் குறைக்கவும், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகிறது.

5. அஸ்பாரகஸ்:

அஸ்பாரகஸ் வகை காய்கறியானது உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாக விளங்குகிறது.  குறிப்பாக இதில் ஃபோலேட் சத்து நிறைந்துள்ளது, இதனை சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கப்படுகிறது, உடலில் இரத்த ஓட்டம் சீராகுகிறது மற்றும் இதய ஆரோக்கியமும் மேம்படுகிறது.

6. முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது, இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.  வைட்டமின்-சின் சிறந்த மூலமான இதனை சாப்பிடுவதால் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கப்படுகிறது, கெட்ட கொழுப்பை அகற்றுகிறது மற்றும் உடலில் உள்ள இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

7. பாகற்காய்:

பாகற்காய் இரத்தத்தை சுத்தப்படுத்தவும், இதய செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.  இதனை சாப்பிடுவதால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறது.  ஒருவரின் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கு கொஞ்சம் பாகற்காய் சாறு எடுத்துக்கொள்வது நல்லது என்றும் ஒருவரது ஆரோக்கியத்தை மேம்படுத்த இது உதவுகிறது.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்க்க வேண்டுமா... நிபுணர்கள் கூறுவது என்ன!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News