Lose Weight Fast: எடை இழப்புக்கான அடுப்பங்கரை மசாலாக்கள்

உணவுகளே மருந்தாக செயல்பட்டு நமது ஆரோக்கியத்தை பேணிகாக்கின்றன. ’மளிகை கடைக்காரருக்கு கொடுக்காதவன், மருத்துவருக்கு செலவழிப்பான்’ என்ற பழமொழியும் உண்டு. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 26, 2022, 02:42 PM IST
  • உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கான மசாலா
  • மசாலாக்களின் மகத்துவம்
  • பருமனை குறைக்கும் பிரத்யேக மசாலாக்கள்
Lose Weight Fast: எடை இழப்புக்கான அடுப்பங்கரை மசாலாக்கள் title=

புதுடெல்லி: உணவுகளே மருந்தாக செயல்பட்டு நமது ஆரோக்கியத்தை பேணிகாக்கின்றன. ’மளிகை கடைக்காரருக்கு கொடுக்காதவன், மருத்துவருக்கு செலவழிப்பான்’ என்ற பழமொழியும் உண்டு. 

ஆரோக்கியமாக இருந்தாலும், உடல் பருமன் அல்லது எடை அதிகரிப்பு என்பது பலரும் நோயாகவே கருதும் காலம் இது. உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதற்கு நமது வீட்டில் இருக்கும், உணவுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களே போதும். ஒரே விஷயம் என்னவென்றால், எதை யார், எப்போது, எந்த அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

மஞ்சள்
குர்குமின் நிறைந்த மஞ்சள், சமையலறைகளில் பொதுவாகக் காணப்படும் மசாலாப் பொருட்களில் ஒன்றாகும், ஆனால் இந்த பிரகாசமான மஞ்சள் நிற மசாலா எடை இழப்பை அதிகரிக்க சிறந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?

தினசரி உணவில் ஒரு சிட்டிகை மஞ்சளை சேர்த்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும். இது எடை குறைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சள் உடலின் வெப்பத்தை அதிகரிக்கிறது, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

மஞ்சள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டின் சிறந்த மூலமாகும், இது எடை இழப்புக்கு மீண்டும் நல்லது. சூடான பாலுடன் மஞ்சளை சேர்த்து குடித்துவருவது உடல் எடையை குறைப்பதுடன், உள்ளுறுப்புகளின் செயல்பாட்டையும் மேம்படுத்தும்.

இலவங்கப்பட்டை
எடை இழப்புக்கான மற்றொரு சிறந்த மசாலா இலவங்கப்பட்டை. இந்த அற்புதமான மூலிகை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமநிலையில் வைக்க உதவும். இது உடலை நிறைவாக வைத்திருக்க உதவுகிறது.

பசியைக் கட்டுப்படுத்த உதவுவும் இலவங்கம், தேநீர், ஒரு சூடான கிளாஸ் பாலுடன் சேர்த்து அருந்துவது உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்  

மேலும் படிக்க | தொந்தியையும் கொழுப்பையும் குறைக்கும் உணவுகள்

மிளகு
எடை இழப்பு செயல்முறையை மூன்று மடங்கு அதிகரிக்கும் மசாலா கருப்பு மிளகு. குருமிளகு என்று அழைக்கப்படும் கருமிளகில், வைட்டமின் ஏ, சி மற்றும் கே, தாதுக்கள் போன்ற மிக முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களால் நிரம்பியிருக்கும் மிளகு, இது இயற்கையான வளர்சிதை மாற்ற ஊக்கியாக சிறப்பாக செயல்படுகிறது, இது எடை இழப்புக்கு மட்டுமல்ல, கணக்கிட முடியாத ஆரோக்கிய நன்மைகளின் களஞ்சியமாக அமைகிறது.

இஞ்சி

ஆயுர்வேதத்தில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படும் இஞ்சி, உடல் எடையை குறைக்கும் முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் வீக்கத்தைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், பசியைக் குறைக்கவும் உதவும் இஞ்சியில் உள்ள இந்த பண்புகள் எடை இழப்பை ஊக்குவிக்கும்.

சீரகம்
சீரகம், எடை இழப்புக்கான மற்றொரு சிறந்த மசாலா. வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை அதிகரிக்கும் சீரகம், செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலமும் கலோரிகளை வேகமாக எரிகிறது. வளர்சிதை மாற்ற விகிதம் மற்றும் செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும் போது, ​​​​எடை தானாகவே குறையும் என்று அறிவியல் கூறுகிறது.

எனவே, எடை இழப்புக்கு சீரகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துக் கொள்வோம். 2 ஸ்பூன் சீரகத்தை எடுத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் இந்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இது வாயு உருவாவதைத் தடுக்க உதவுகிறது.

மேலும் படிக்க | Job Alert: பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு TANGEDCO வழங்கும் வேலைவாய்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQY

Trending News