இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’ நிறைந்த உணவுகளை அவசியம் டயட்டில் சேர்க்கவும்

மாரடைப்பு அபாயத்தை குறைத்து, இதயத் துடிப்பை சீராக்கும் பொட்டாஷியம்நிறைந்த சில உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 12, 2022, 05:17 PM IST
  • இதய ஆரோக்கியத்திற்கு பொட்டாசியம் இன்றியமையாதது
  • பொட்டாசியம் சத்து நிறைந்த காய்கறிகள் எவை.
  • மாரடைப்பு அபாயத்தை குறைக்கும்பொட்டாஷியம்
இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’ நிறைந்த உணவுகளை அவசியம் டயட்டில் சேர்க்கவும் title=

உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஒவ்வொன்றும் நம் உடலுக்கு தேவையான எதாவது ஒரு செயலைச் செய்ய உதவுகின்றன. அந்த வகையில், பொட்டாசியம் சத்தும், நமது இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான முக்கிய செயலை செய்கிறது. இது நரம்புகளின் செயல்பாட்டை சரியாக பராமரிப்பதோடு, அதனை மேலும் சீராக்க உதவுகிறது. ஆனால் பொட்டாசியத்தின் மிக முக்கியமான செயல்பாடு இதயத் துடிப்புக்கு உதவுவதாகும். பொட்டாசியம் உங்கள்  இதய தசைகளை நிலாக்ஸ் செய்து தளர்த்தவும் உதவுகிறது. எனவே மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் இந்த பொட்டாஷியம் உங்கள் உடலுக்கு அவசியம் தேவை.

உடலில் பொட்டாசியம் சத்து குறைபாடு அதிகமாக இருந்தால், அந்த நிலை மருத்துவத்தில் ஹைபோகாலேமியா (Hypokalemia) என அழைக்கப்படுகிறது,  ஒரு நபரின் உடலில் பொட்டாசியத்தின் அளவு லிட்டருக்கு 3.6 மில்லிமோல்களுக்குக் கீழே குறையும் போது இந்த நிலை ஏற்படுகிறது.

ஒரு நபருக்கு தினமும் 4,700 மில்லிகிராம் (மி.கி) பொட்டாசியம்  வேண்டும். எனினும் சிறுநீரக நோய் இருப்பவர்களுக்கு இந்த அளவை விட குறைவாக தேவை. பொட்டாசியத்தை சரியான அளவில் வைத்து இருந்தால் மட்டுமே நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

பொட்டாஷியம் சத்தை போதுமான அளவில் பெற கீழ்கண்ட காய்கறிகள்,பழங்கள், தானியங்கள் ஆகியவற்றை அவசியம் உங்கள் டயட்டில் சேர்க்கவும்.

பொட்டாசியம் சத்து நிறைந்துள்ள பழங்கள்:

வாழைப்பழம், ஆரஞ்சு, முலாம்பழம், திராட்சை பழங்கள், உலர் திராட்டை, பேரீச்சம் பழம் இவற்றில் அதிகளவு பொட்டாசியம் காணப்படுகிறது.

மேலும் படிக்க | Health Tips: பப்பாளி பழத்தை ‘இதனுடன்’ மறந்தும் சாப்பிடக் கூடாது

பொட்டாசியம் சத்து நிறைந்துள்ள காய்கறிகள்:

கீரை, பச்சை இலை காய்கறிகள், பிரோக்கோலி,  சுரைக்காய், பூசணிக்காய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, காளான், பட்டாணி, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் பொட்டாசியம் அதிகளவு காணப்படுகிறது.

பொட்டாசியம் சத்து நிறைந்துள்ள பிற உணவுகள்:

சோயா பீன்ஸ், ராஜ்மா போன்ற பருப்பு வகைகளில் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும், மீன் உணவுகளில், டூனா மீன், சால்மன் போன்ற மீன் வகைகளிலும் பொட்டாஷியம் அதிக அளவில் காணப்படுகிறது.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்

மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News