முடி வளர்ச்சிக்கான உணவுகள்: நீங்கள் தீவிர முடி உதிர்தல் பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா? உங்கள் தலைமுடி பொலிவை இழப்பதைத் தடுக்க உடனடியாக உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். நமது உணவுத் தேர்வுகளே ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் அடிப்படை என்பதால், ஊட்டச்சத்து நிறைந்த உணவை தினசரி அடிப்படையில் உண்பது அவசியம் ஆகும்.
மரபியல் தன்மைகளாலும், வயதாவது, ஹார்மோன்கள் மட்டுமல்ல, ஊட்டச்சத்து குறைபாடுகளும் முடியின் ஆரோக்கியத்தை முடிவு செய்கின்ரான. தலைமுடி வலுவாகவும் நீளமாகவும் இருக்க, கெரட்டின் புரதம் அவசியமானது ஆகும்.
நமது தலைமுடியின் பெரும்பகுதி புரதங்களால் ஆனது.
வைட்டமின்கள் சி மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களுடன் புரதத்தையும் உணவில் சேர்த்துக் கொண்டால், முடி வளம் அதிகரிக்கும். முடி உதிர்வைத் தடுக்கவும், தலைமுடி அழகாய் வளரவும், இந்த 5 உணவுகளை உங்கள் உணவில் சேர்க்கவும்.
மேலும் படிக்க | அமிர்தமே நஞ்சாகும்: இது வேப்பிலை சொல்லும் தத்துவம்
அக்ரூட் பருப்புகள்
அக்ரூட் பருப்பில் பயோட்டின், வைட்டமின் ஈ, ஒமேகா 6, 3 மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ளது. இது உங்கள் தலைமுடியை வலுப்படுத்தவும், உங்கள் உச்சந்தலையை வளர்க்கவும் உதவும். வால்நட்ஸை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால், முடி வளர்ச்சியை அதிகரித்து, முடி உதிர்வதைக் குறைக்கலாம்.
முடி சேதத்தை சரிசெய்யவும் அக்ரூட் உதவும். சூரிய ஒளியாலோ அல்லது இரசாயன சிகிச்சையால் தலைமுடி சேதமடைந்திருந்தால், முடியை சீர் செய்ய அக்ரூட்டை சாப்பிடுங்கள்.
சால்மன் மீன்
உங்கள் முடி வளர்ச்சிக்கு அற்புதமான ஒமேகா 6 மற்றும் 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்களில் ஒன்று கொழுப்பு நிறைந்த மீன் ஆகும். நமது உடல் இந்த ஆரோக்கியமான கொழுப்பை உற்பத்தி செய்ய முடியாது என்பதால், அது உணவு மூலங்களிலிருந்து பெறப்பட வேண்டும். சால்மன் மீன் உட்கொண்டால், முடி உதிர்வதை நீங்கள் சந்தித்தால், புதிய முடி வளர உதவும்.
கூடுதலாக, இந்த மீனில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் உள்ளது, இது உங்கள் முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமான உணவாக அமைகிறது.
மீன் உண்ணாதவர்கள், ஒமேகா சத்துக் கொண்ட கொட்டைகள் மற்றும் ஆளி விதைகள் போன்றவற்றை உண்ணலாம்.
மேலும் படிக்க | எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள்!
பச்சை இலை காய்கறிகள்
உங்கள் தலைமுடியை அழகாக வைத்திருக்க உதவும் பல காய்கறிகளில் கீரை போன்ற பச்சை இலைக் காய்கறிகளுக்கு உண்டு. அதே போல் இரும்புச்சத்து அதிகமாக உள்ள சோயா, வெள்ளை பீன்ஸ், ஆப்ரிகாட் மற்றும் அத்திப்பழங்களை உண்டால் முடி உதிர்வது நின்று, முடி வளமாக வளரும்.
முட்டைகள்
முட்டையில் அதிக புரதம் மற்றும் முடி ஆரோக்கியத்தை ஆதரிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளான கோலின், இரும்பு மற்றும் வைட்டமின்கள் ஏ, டி மற்றும் பி12 போன்றவை உள்ளன. முட்டையில் அதிக அளவு பயோட்டின் உள்ளது, இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் பி வைட்டமின் ஆகும்.
கெரட்டின் என்ற புரதம் நமது தலைமுடியை உருவாக்க பயன்படுகிறது. வைட்டமின் பி6 உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். பயோட்டின் அல்லது வைட்டமின் B7 முடியின் தரம் மற்றும் பளபளப்பை மேம்படுத்துகிறது. தேவையான அனைத்து நுண்ணூட்டச்சத்துக்களையும் பெற உணவில் முட்டைகளைச் சேர்க்கவும்.
கேரட்
கேரட் கண்களுக்கு மட்டுமல்ல, தலைமுடிக்கும் நல்லது. ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தலை உருவாக்க கேரட் உதவுகிறது. கேரட்டில் பீட்டா கரோட்டின் சத்து ஏராளமாக உள்ளதால் தலைமுடி செழித்து வளரும். உடலில் உள்ள அனைத்து செல்களும் செயல்பட தேவைபப்டும் வைட்டமின் ஏ சத்தைக் கொண்டுள்ளது கேரட்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | குடல் ஆரோக்கியத்தை குலைக்கும் ஆரோக்கியமற்ற பழக்கங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ