தற்போதையை மாறிவரும் வாழ்க்கை முறையில் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு எப்போது சாப்பிடுகிறோம் என்றே தெரிவதில்லை. சாப்பாடு சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று அனைவரும் நம்புகிறார்கள். ஆனால் மாறிவரும் வாழ்க்கையில் இந்த பழக்கம் மக்களிடம் காணாமல் போய். ஆனால் சாப்பிட்ட பின் உடனே தூங்காமல் வாக்கிங் போவதால் ஏற்படும் 5 அபார நன்மைகளை தெரிந்து கொண்டால், இன்றே அந்த பழக்கத்தை ஆரம்பித்து விடுவீர்கள்.
இரவில் வாக்கிங் போவதால் கிடைக்கும் அபரிமிதமான நன்மைகள்
பலர் அலுவலக வேலை மற்றும் வீட்டு வேலைகளில் மிகவும் பிஸியாகி விடுகிறார்கள், அவர்கள் பிட்னஸ் மீது கவனம் செலுத்துவதில்லை. ஆனால் உங்களைப் பிட் ஆக இருக்க தினமும் குறைந்தது சிறிது நேரமாவது நடக்க வேண்டும். பகலில் நடப்பது கடினம் என்றால் இரவு உணவுக்குப் பின் நடக்க வேண்டும். ஏனெனில் இரவு உணவிற்குப் பிறகு நடைபயிற்சி செய்வதால் அபரிமிதமான நன்மைகள் உள்ளன.
மேலும் படிக்க | இதய ஆரோக்கியம்: மாரடைப்பு அபாயத்தை நீக்கும் ‘சிறந்த’ உணவுகள்!
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
இரவு உணவிற்குப் பின் தொடர்ந்து வாக்கிங் செய்தால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது உங்கள் செரிமானத்தை அதிகரிக்கிறது. இது நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது . உங்கள் உள் உறுப்புகளின் நிலையை மேம்படுத்துகிறது.
இரவில் வேறு ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது
இரவு உணவின் போது வேறு ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை பலருக்கு இருக்கும். ஆனால் நீங்கள் நடந்தால் உங்கள் பசியும் தணியும், அதனால் , அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பல பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியதில்லை.
மேலும் படிக்க | Health Alert! மறதி, குழப்பம் அதிகமாக இருக்கிறதா; Vitamin B குறைபாடு இருக்கலாம்!
இரவில் நல்ல தூக்கம்
இரவில் தூங்குவதில் சிக்கல் இருந்தால், இரவு உணவுக்குப் பிறகு சிறிது நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது மன அழுத்தத்தைக் குறைத்து நன்றாக தூங்க உதவும்.
சர்க்கரை கட்டுப்படுத்தப்படும்
இரவு உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வது உங்கள் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். ஏனெனில் நடைப்பயிற்சியின் போது, உடல் உங்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸில் சிலவற்றைப் பயன்படுத்துகிறது.
மன அழுத்தம் இல்லாமல் இருக்கும்
நீங்கள் மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு இருந்தால், நீங்கள் நடக்க வேண்டும். ஏனெனில் நடைபயிற்சி உங்கள் உடலில் எண்டோர்பின்களை வெளியிடுகிறது மற்றும் உங்களுக்கு நல்ல உணர்வை தருகிறது.
மேலும் படிக்க | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR