மனிதனுக்கு இதயத்தின் ஆரோக்கியம் அத்தியாவசியமான ஒன்றாகும். ஆனால் மாறி வரும் உணவு பழக்கம் உள்ளிட்டவைகளால் இதய நோய் அனைவருக்கும் தற்போது வருகிறது. குறிப்பாக இள வயதினர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது தொடர்கதையாகி பீதியை ஏற்படுத்திவருகிறது. நம்முடைய ரத்தக் குழாய்கள்தான் ஆக்சிஜன் நிறைந்த, சத்துக்கள் நிறைந்த ரத்தத்தினை உடலின் ஒவ்வொரு திசுவிற்கும் கொண்டு செல்கின்றன. ஆக்சிஜன் மிகவும் குறைந்த ரத்தத்தினை சீர் செய்ய இருதயத்திற்கு கொண்டு வருகின்றன. ஆர்டரீஸ், வெயின்ஸ் என்று இவை பிரிந்து கூறப்பட்டாலும் ரத்த குழாய்கள் மூலம் மட்டுமே நம் உடல் ஆரோக்கியம், ஊட்டம் பெறுகின்றது. கழிவுப் பொருட்கள் நீக்கப்படுகின்றன. இது நமது உடலின் போக்குவரத்துப் பிரிவு இதில் இந்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் பல பிரச்னைகள் உருவாகும். எனவே இதயத்தின் நலனை பாதுகாப்பதற்கு உணவு பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துவது முக்கியமானதாகும்.
ராஜ்மா என்று சொல்லப்படும் அடர்ந்த பீன்ஸ் இதயத்திற்கு சிறந்த ஊட்டச்சத்துக்களை தருகிறது. மக்னீசியம் ஆன்ட்டி ஆக்சிடன்ட் நிறைந்தது. இது உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கும். அதிக கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் இரண்டினையும் குறைக்கும். ராஜ்மாவை கைப்பிடி அளவு உட்கொண்டாலே போதும். அதேபோல், ஒமேகா 3 நிறைந்த சால்மன் ட்யூனா இதய துடிப்பினை சீர் செய்யவும், உயர் ரத்த அழுத்தம் குறையவும் உதவுகின்றது.
மேலும், ஆலிவ் எண்ணெய், நம் ஊர் சமையலுக்கு ஏற்ற வகையிலும் வந்துள்ளது. ஓரிரு டீஸ்பூன் சேர்ப்பது இதய பாதுகாப்பிற்கு நல்லது. மேலும், வால்நட்-இருதய ரத்த குழாய்களின் வீக்கத்தினை நீக்குகின்றது. ஒமேகா 3 சத்து நிறைந்தது.
பாதாம் கொலஸ்ட்ராலை குறைக்கும். சோயாவில் தயாரிக்கப்பட்ட 'டோஃபு' தாது உப்புகள், நார்சத்து கொண்டது. பிளாக்ஸ் விதைகளில் ஒமேகா 3 சத்து நிறைந்துள்ளதால் இதயத்திற்கு நல்லது.
மேலும் படிக்க | நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க இந்த உணவை சாப்பிடுங்கள்!
அதுமட்டுமின்றி, கீரை வகைகள், பூண்டு, கிரீன் டீ, தக்காளி இவைகள் அனைத்துமே மருத்துவ குணமுடையவைதான். மாதுளை பழம் சாப்பிட்டாலும் இதயத்திற்கு நன்மை பயக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ