நாம் வசிக்கும் இடத்திலேயே மிகப் பெரிய பொக்கிஷங்கள் இருக்கும். அதை அறியாமல் நாம் உலகம் முழுவதும் தேடிக் கொண்டிருப்போம். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது அறுகம்புல்.
அறுகம்புல் (Scutch Grass) மருத்துவ மூலிகைகளில் ஒன்று. அது நம்மைச் சுற்றியே இருப்பதால் அதன் மகத்துவம் நமக்குத் தெரியவில்லை.
வாதம், பித்தம், சளி போன்றாவற்றால் உண்டாகும் நோய்களுக்கு மருந்தாக அறுகம்புல் பயன்படுகிறது. உடலில் வியர்வை நாற்றம் போக்கவும், உடல் அரிப்பைப் போக்கவும், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நீங்கவும் மருந்தாக உதவுகிறது இந்த மருத்துவ மூலிகை.
Also Read | மாம்பழம் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளக் கூடாத 5 உணவுகள்
அருகம்புல்லில் இருந்து சாறு எடுத்து ஜூஸாக குடித்தால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் விடை பெற்று ஓடிவிடும். அறுகம்புல்லை அலசி சுத்தம் செய்த பிறகு, அத்துடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்து அரைக்கவும். பிறகு அதனுடன் தண்ணீரை சேர்த்து நன்றாக கலக்கி, வடிகட்டினால் அருகம்புல் ஜூஸ் ரெடி.
உடல் வெப்பத்தை அகற்றும் இந்த ஜூஸ், சிறுநீரை அதிகரிக்கும், குடல் புண்களை ஆற்றும், ரத்தத்தை தூய்மையாக்கும். உடலை பலப்படுத்தும்.
அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடும். எனவே இது உடல் பருமன் குறையவும் உதவுகிறது.
Also Read | இந்தக் காய் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் நீர்க்காய்
சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காது. இவர்கள் தினந்தோறும் அருகம்புல் சாற்றை குடித்தால் அதீத பசி கட்டுப்படும்.
ஆற்றல்கள் பல கொண்ட இந்த அருகம்புல், முந்தி விநாயகருக்கு பிடித்தமானது. மனிதனின் உடல் கோளாறுகளை தீர்க்கும் அறுகம்புல் விக்ன விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது.
Also Read | மதிய உணவில் சாப்பிட ஏற்றது எது? தவிர்க்க வேண்டியவை எவை?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR