பகீர் தகவல்! காற்று மாசுபாடு விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா..!!

மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் காற்று மாசுபாடு விந்தணுக்களின் எண்ணிக்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் (UMSOM) ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 30, 2021, 06:26 PM IST
பகீர் தகவல்! காற்று மாசுபாடு விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா..!! title=

ஆண்களுக்கு, குறிப்பாக காற்று மாசுபாடு அதிகமாக உள்ள இடங்களில் வசிப்பர்களுக்கு ஒரு அதிர்ச்சி தரும் தகவல் வந்துள்ளது. காற்று மாசுபாடு உங்களுக்கு பல நோய்களைத் தருவது மட்டுமல்லாமல், விந்தணுக்களின் எண்ணிக்கையையும் குறைக்கலாம் (Air Pollution Affects Fertility) என டதகவல்கள் வெளியாகியுள்ளது. மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் காற்று மாசுபாடு விந்தணுக்களின் எண்ணிக்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் (UMSOM) ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு ஒரு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மாசுபாசி நிறைந்த காற்று விந்தணுக்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என இதற்கு முன்பு கூட தகவல்கள் வெளியாகின.

மாசுபட்ட காற்றை சுவாசிப்பது ஆண்களுக்கு ஆபத்தானது. இது ஆண்களின்  விந்தணு எண்ணிக்கையை குறைக்கலாம். மன அழுத்தம் அதிகம் உள்ள சூழ்நிலைகளில், மூளையானது பாலின உறுப்புகளுடன் நேரடி தொடர்பைக் கொண்டுள்ள நிலையில், கருவுறுதல் மற்றும் விந்தணு எண்ணிக்கையை இது பாதிக்கிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. காற்று மாசுபாடு மூளையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  மூளையின் மீதான் இந்த தாக்கம் விந்தணுக்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

ALSO READ | Men's Health: ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ‘இவை’ அத்தியாவசியம்

UMSOM பல்கலை கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரும் மருத்துவ உதவிப் பேராசிரியருமான Zekang Ying, காற்று மாசுபாடு விந்தணுவில் ஏற்படும் இந்த பாதிப்புக்கான சிகிச்சையையும் கண்டுபிடிக்க முடியுமா என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என்று கூறினார். 

UMSOM பல்கலை கழகத்தின் மருத்துவப் பேராசிரியரும், இதயவியல் ஆராய்ச்சி இயக்குநருமான சார்லஸ் ஹாங் கூறுகையில், காற்று மாசுபாடு காரணமாக நீரிழிவு, இரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும். மாசுபாடு மூளையின் வீக்கத்தை ஏற்படுத்தும், விந்தணுக்கள் மூளையில் செயல்பாட்டிற்கும் தொடர்பு உள்ளதால், இது  விந்தணுவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்.

ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!!!

உலக மக்கள்தொகையில் சுமார் 92 சதவீதம் பேர், காற்றில் உள்ள நுண்ணிய துகள்களின் அளவு 2.5 துகள்களை விட சிறியதாக இருக்கும் பகுதிகளில் வாழ்கின்றனர் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இது உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்ணயித்த குறைந்தபட்ச பாதுகாப்பான அளவை விட  அதிக அளவாகும். 

ALSO READ | Men's Health: ஆண்களின் ஆரோக்கியத்திற்கான ‘சூப்பர்’ உணவுகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News